For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சித்திரை முதல் பங்குனி வரை 12 சங்கராந்திகள் - சூரியனை எப்படி பூஜை செய்யலாம்?

தமிழ் மாதங்கள் அனைத்தும் சூரியனின் நகர்வை மையப்படுத்தியே இருக்கின்றன. மேஷம் முதல் மீனம் வரை சூரியன் ஒரு ராசியில் நுழையும் மாதம் சங்கராந்தியாக கடைபிடிக்கப்படுகிறது.

|

வைகாசி மாதம் பிறக்கப் போகிறது இது ரிஷப சங்கராந்தி மாதமாகும். சித்திரை முதல் பங்குனி வரை மொத்தம் 12 சங்கராந்திகள் உள்ளன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் சூரியன் ஒரு ராசியை கடந்து அடுத்த ராசிக்குள் நுழையும் நேரமே சங்கராந்தி. தமிழ் மாதப்பிறப்பும் இதுவே. ஒரு வருடத்திற்கு 12 சங்கராந்திகள் உண்டு. இந்த சங்கராந்தி பிறப்பில் நாம் சூரிய பூஜை செய்வதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

12 Sankranti Observed In The Tamil Calendar

மேஷம் ராசியில் சித்திரை மாதம் நுழையும் சூரியன் உச்சமடைகிறார். ஆவணி மாதம் சிம்ம ராசியில் நுழையும் சூரியன் ஆட்சி பெற்று அமர்கிறார். துலாம் ராசியில் ஐப்பசி மாதத்தில் சூரியன் நீசமடைகிறார்.

நாடு முழுவதும் தை மாதத்தில் சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் தட்சிணாயண புண்ணிய காலத்தில் மகர சங்கராந்தியாக கொண்டாடுவார்கள். மகரம் ராசி சனியின் ராசி சூரியன் தனது மகனின் வீட்டில் சஞ்சரிக்கும் காலமாகும். எந்தெந்த சங்கராந்தியில் என்ன தானம் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரிய பூஜை

சூரிய பூஜை

சித்திரை மாதத்தில் மேஷத்தில் சூரியன் நுழையும் நேரம் தான்ய சங்கராந்தியாக கொண்டாடுகின்றனர். சூரிய பூஜை செய்து தானியங்களை தானம் செய்யலாம். இதன் மூலம் ஆயிரம் அக்னி யாகங்கள் செய்த பலன் கிடைக்கும். வைகாசி மாதம் ரிஷப சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. இது தாம்பூல சங்கராந்தியாகும். சூரியனை வணங்கி தம்பதிகளை வெற்றிலை பாக்கு தாம்பூலம் வைத்து பூஜை செய்து தாம்பூலம் தானமாக கொடுக்க மகா புண்ணியம் கிடைக்கும்.

ஆசைகள் நிறைவேறும்

ஆசைகள் நிறைவேறும்

ஆனி மாதம் மிதுனம் ராசியில் சூரியன் நுழையும் மாதம் மனோதர சங்கராந்தி நாளாகும். இந்த நாளில் வெல்லம் வைத்து பூஜை செய்து தானம் கொடுப்பதன் மூலம் நமது ஆசைகள் நிறைவேறும். ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் நுழையும் மாதம் அசோக சங்கராந்தி. இது விஸ்வத் புண்ணிய காலமாகும்.

சிம்ம சூரியன்

சிம்ம சூரியன்

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். இது ரூப சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் சூரிய பூஜை செய்து பொன் பாத்திரத்தில் நெய் ஊற்றி வேதியர்களுக்கு தானம் கொடுப்பதன் மூலம் நோய் பாதிப்பு நீங்கும். சூரியன் கன்னி ராசியில் நுழையும் மாதம் புரட்டாசி. தேஜ சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. சிவப்பு அரிசி வைத்து கலசம் வைத்து கோமேதம் கொண்டு நிவேதனம் செய்து வேதியர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும்.

ஆயுள் அதிகரிக்கும் சூரியன்

ஆயுள் அதிகரிக்கும் சூரியன்

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இது ஆயுள் சங்கராந்தி. பசும்பால், வெண்ணெய் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பி சூரிய பூஜை செய்து தானம் கொடுப்பதன் மூலம் ஆயுள் நீடிக்கும். கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிகம் ராசியில் நுழையும் நேரம் சவுபாக்ய சங்கராந்தி. இந்த நாளில் சூரிய பூஜை செய்து வஸ்திர தானம் செய்ய வேண்டும் உப்பு சேர்த்த உணவுகளை தானம் செய்வதன் மூலம் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

புண்ணிய சங்கராந்தி

புண்ணிய சங்கராந்தி

மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் நுழையும் மாதம் தனுஷ் சங்கராந்தி. தீர்த்தத்தை கலசத்தில் நிரப்பி சூரியனை வணங்கி அன்னதானம் செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மகர சங்கராந்தி புண்ணிய சங்கராந்தியாகும். தை மாதத்தில் மகரம் ராசியில் நுழையும் மாதம் தேவர்களின் விடியல் காலம். சூரியனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க புண்ணியம் அதிகரிக்கும்.

மோட்சம் கிடைக்கும்

மோட்சம் கிடைக்கும்

மாசியில் சூரியன் கும்பம் ராசியில் நுழையும் நேரம் கும்ப சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. இது லவண சங்கராந்தியாகும். இந்த நாளில் சூரிய பூஜை செய்ய மோட்சம் கிடைக்கும். பங்குனி மாதம் சூரியன் மீனம் ராசியில் நுழையும் மாதம் போக சங்கராந்தியாகும். பங்குனி மாத ஆரம்பத்திலும் முடியும் நேரத்திலும் சூரிய பூஜை செய்து தன தான்யம், பசுக்களை தானம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Sankranti Observed In The Tamil Calendar

12 Sankranti observed in the following months. The list of Sankranti From Chithirai to Panguni.Sankranti means sacred changes. According to the Tamil calendar, there are 12 Sankranti days in a year, which also marks the beginning of each of these months.
Story first published: Tuesday, May 12, 2020, 11:42 [IST]
Desktop Bottom Promotion