Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
Pongal 2026: 4 நாள் பொங்கல் கொண்டாட்டம் - ஒவ்வொரு நாளும் எதுக்கு கொண்டாடுறாங்க-ன்னு தெரியுமா?
Pongal 2026: தமிழ்நாட்டில் தமிழர்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் பொங்கல் பண்டிகை. இப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் என்றும் அழைப்பர்.
இது உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. குறிப்பாக இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக மனிதன் உயிர் வாழ உணவு மிகவும் இன்றியமையாதது. இந்த உணவை பழங்காலத்தில் மக்கள் தேடி அலைந்தனர். இந்நிலையை மாற்ற மக்கள் தாங்களாகவே உணவை உற்பத்தி செய்ய முயற்சித்து, விவசாயத்தில் ஈடுபட்டனர். அப்படி மனிதன் முதலில் விவசாயம் செய்தது அரிசி. அதனால் தான் தமிழ்நாட்டின் முதன்மை உணவுப் பொருளாக அரிசி உள்ளது.
இந்த அரிசி நெல்லானது ஆடி மாதத்தில் பயிரிடப்பட்டு, மார்கழி மாதத்தின் இறுதியில் அறுவடை செய்யப்படும். இப்படி அறுவடை செய்த புத்தரிசியைக் கொண்டு தை மாதத்தின் முதல் நாளில் பொங்கல் என்ற சிறப்பு உணவை தயாரித்து, அதை விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு படைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர். இந்நாள் தான் பொங்கல் பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகை ஒரு நாள் மட்டுமல்ல, 4 நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகையில் தொடங்கி ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலில் முடிவடைகிறது. பாரம்பரியமாக, பொங்கல் என்பது மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. இப்போது 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை குறித்து விரிவாக காண்போம்.
முதல் நாள்: போகி பண்டிகை
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுவது தான் போகிப் பண்டிகை. பழைய கழிதலும், புதியன புகுதலும் என்பது தான் இந்நாளின் நோக்கம். இந்த போகி பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. போகி நாளில் மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள தேவையில்லாத மற்றும் உபயோகமில்லாத பழைய பொருட்களை எரித்துவிடுவார்கள். மேலும் மழையின் கடவுளான இந்திரனுக்கும் இந்நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு உதவிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நாளில் இந்திரனை மக்கள் வணங்குவார்கள்.
இரண்டாம் நாள்: தைப் பொங்கல்
இரண்டாம் நாளில் கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை. இது தமிழ் மாதமான தை 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் புதிய ஆடைகளை அணிந்து, புதிய பானையில் அறுவடை செய்த புதிய அரிசியைக் கொண்டு, பொங்கல் என்னும் உணவை தயாரித்து, விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு படைத்து பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள்.
மூன்றாம் நாள்: மாட்டுப் பொங்கல்
பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது தான் மாட்டுப் பொங்கல். இந்நாள் விவசாயத்திற்கு உதவி புரிந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் விவசாயத்திற்கு உதவிய மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு சாயங்களை பூசி, அழகாக அலங்கரிப்பார்கள். மேலும் இந்நாளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெறும்.
நான்காம் நாள்: காணும் பொங்கல்
பொங்கல் பண்டிகையின் கடைசி நாள் தான் காணும் பொங்கல். இதை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பர். இந்நாளில் மக்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு, ஒன்றாக விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பார்கள். முக்கியமாக இந்த நாளானது பெண்களுக்குரியது. ஏனெனில் இந்த நாளில் பெண்கள் பொங்கல் பானையில் கட்டியிருக்கும் மஞ்சள் கொத்தினை, முதிர்ந்த சுமங்கலிகள் ஐந்து பேரின் கையில் கொடுத்து வாங்கி, அதனை முகம் மற்றும் உடலில் பூசுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications