Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
Pongal 2026: மறந்தும் பொங்கல் நாளில் இந்த 4 பொருட்களை தானம் செஞ்சுடாதீங்க.. இல்ல கஷ்டம் அதிகரிக்கும்..
Pongal 2026: தென்னிந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும், கால்நடைகளுக்கும், இந்திரனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பண்டிகை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகை வந்தாலே, வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணம் கட்டி, வீட்டிற்கு முன் அழகான பொங்கல் கோலமிட்டு, பொங்கல் பானையை அழகாக அலங்கரித்து, நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைத்து, அதை சூரியனுக்கு படைத்து வழிபடுவோம்.

சாஸ்திரத்தின் படி, ஒரு பண்டிகை தினத்தில் நாம் செய்யும் செயல்கள் நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பலர் சுப தினங்களில் புண்ணியத்தை சேர்க்க தான தர்மங்களை செய்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை நாளில் ஒருசிலவற்றை தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வாழ்வில் பிரச்சனைகளையே அதிகரிக்கும். இப்போது எந்த பொருட்களை தானம் செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
1. எண்ணெய்
பொங்கல் பண்டிகையன்று மறந்தும் எண்ணெயை தானம் செய்யாதீர்கள். நம்பிக்கைகளின் படி, சுப தினத்தில் எண்ணெயை தானம் செய்தால், அது சனி பகவானின் மோசமான விளைவுகளை சந்திக்க வைக்கும். அதோடு நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளாலும் அவதிப்படக்கூடும். உறவுகளில் வாக்குவாதங்களும், விரிசல்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே பொங்கல் நாளில் எண்ணெயை தானம் செய்யாதீர்கள்.
2. இரும்பு பொருட்கள்
சாஸ்திரத்தின் படி, பொங்கல் பண்டிகை நாளில் இரும்பு பொருட்களை தானம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகளையும், சண்டைகளையும் அதிகரிக்கும். எனவே இந்த தவறையும் செய்துவிடாதீர்கள்.
3. பயன்படுத்திய பொருட்கள்
பொங்கல் நாளில் ஒருபோதும் பயன்படுத்திய ஆடைகளையோ, பழைய உணவுகளையோ, கிழிந்த ஆடைகளையோ தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், சனி பகவானை கோபப்படுத்தி, வாழ்க்கையில் எதிர்பாராத அளவில் மோசமான பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும்.
4. அரிசி
அரிசியை தானம் செய்வது நல்லது தான். ஆனால் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை ஏகாதசி நாளில் வருகிறது. எனவே இந்த நாளில் அரிசி தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக ஏகாதசி நாளில் அரிசி தானம் செய்வது நல்லதல்ல. அப்படி செய்தால், அந்நாளில் செய்யப்படும் பூஜைகள் எந்த பலனையும் அளிக்காது. வேண்டுமானால், இந்நாளில் வெல்லம், எள்ளு, புதிய ஆடைகள், நெய், செம்பு பாத்திரங்கள் போன்றவற்றை தானமாக செய்யலாம். இது முன்னோர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு பொங்கல் பண்டிகை நாளில் தானம் செய்யும் பழக்கம் இருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள 4 பொருட்களை தானம் செய்வதை அறவே தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications