Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
இதுல நீங்க எந்த மாதிரி கையை மடக்கி நிப்பீங்க-ன்னு சொல்லுங்க... உங்கள பத்தின ஒரு விஷயத்தை சொல்றோம்...
Personality Test: ஒருவரது குணாதிசயங்களை பல வழிகளில் அறியலாம். அதுவும் ஒருவரது உடல் அம்சங்கள் மற்றும் உட்காரும் விதம், நிற்கும் விதம், நடப்பது, பேசுவது, சாப்பிடுவது, ஏன் கைகளை மடக்கி நிற்பதைக் கொண்டு, அவரது குணாதிசயங்களை அறிய முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல்மொழி நிபுணர்கள் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை, கைகளை மடக்கும் விதத்தைக் கொண்டு ஆய்வு செய்தனர். அதில் கைகளை மடக்கும் ஒவ்வொரு விதமும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

கைகளை மடக்கி நிற்பதில் நான்கு விதங்கள் உள்ளன. சிலர் கைகளை முன்புறமாக கட்டி நிற்பார்கள், இன்னும் சிலர் கைகளை பின்புறமாக கட்டி நிற்பார்கள், இதுப்போன்று இன்னும் இரண்டு விதங்கள் உள்ளன.
கீழே கைகளை மடக்கும் நான்கு விதங்களைப் பற்றியும், ஒவ்வொன்றும் எந்த மாதிரியான குணாதிசயங்களை வெளிப்படுத்துகின்றன என்பதையும் காண்போம். உங்கள் குணாதிசயங்களை நீங்கள் அறிய விரும்பினால், தொடர்ந்து படித்து பாருங்கள்.
விதம் #1
நீங்கள் படத்தில் காட்டப்பட்டவாறு, ஒற்றைக் கையை மட்டும் மடக்கி நிற்பவரானால், அது ஒருவித பதட்டத்துடன் இருப்பதைக் குறிக்கிறது. ஒரு கூட்டத்தில் இருக்கும் போது ஒருவர் இந்த விதத்தில் நின்றால், அவர் தங்களைத் தாங்களே ஆறுதல் படுத்த முயற்சிக்கிறார் அல்லது பதட்டத்துடன் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறார் என்று அர்த்தம். இந்த மாதிரி நிற்பது ஒருவித பாதுகாப்பின்மை, சந்தேகம், பதட்டம், மன அழுத்தம், கூச்சம் போன்றவை இருப்பதை உணர்த்துகிறது. இப்படிப்பட்ட நிலையில் நிற்பவர்கள், சமூக ரீதியாக மோசமானவர்கள் அல்லது உள்முக சிந்தனை கொண்டவர்கள்.
விதம் #2
படத்தில் காட்டப்பட்டவாறு, இரண்டு கைகளையும் முன்புறமாக பிடித்துக் கொண்டு நின்றால், அத்தகையவர்கள் பதட்டத்துடன் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. பொதுவாக ஆண்கள் தாங்கள் பதட்டத்துடன் இருப்பதை வெளிப்படுத்த விரும்பமாட்டார்கள். ஆனால் இந்த நிலையில் நிற்பார்கள். உடல் மொழியின் படி, இது ஒரு நம்பிக்கையான நிலை அல்ல. வழக்கமாக பாதுகாப்பற்ற உணர்வு உள்ளவர்கள் தான் இந்த நிலையில் நிற்பார்கள். எனவே நீங்கள் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்க விரும்பினால், இந்த விதத்தில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
விதம் #3
படத்தில் காட்டப்பட்டவாறு நீங்கள் பின்புறமாக கைகளைக் கட்டி நிற்பவரானால், அது நீங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. அதுவும் கைகளை லேசாக பிடித்திருப்பது, தன்னம்பிக்கையையும், தனக்கென சொந்த அடையாளத்தை உருவாக்கி பெருமைப்படுவதையும் வெளிக்காட்டுகிறது. இந்த விதத்தில் நிற்பது ஒருவரை நிதானமானவர், எதற்காகவும் பயப்படாதவர் என்பதையும் குறிக்கிறது. மேலும் இத்தகையவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பார்கள் மற்றும் அதிகாரத்தை வெளிக்காட்டுவார்கள்.
விதம் #4
படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு கையை மட்டும் பின்னால் கட்டி நின்றால், அத்தகையவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த விதத்தில் நிற்பவர்கள் அமைதியற்றவராகவும், பதட்டமாகவும், விரக்தியாகவும், அழுத்தமாகவும் இருப்பவராவார். அதனால் தான் ஒருவர் கேள்வி கேட்கும் போது, பதில் தெரியாத நிலையில் தன்னை அறியாமலேயே இந்த நிலையில் நிற்கிறார். சொல்லப்போனால் இந்த நிலையில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக தன்னம்பிக்கையை அதிகரிக்க உள்ளங்கைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து பிடித்து நிற்க வேண்டும்.



Click it and Unblock the Notifications