Latest Updates
-
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட பெரிய பலவீனத்தை சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படியான புதிர்களைக் கொண்ட அதே சமயம் கண்களைக் கவரும் அழகான படங்களாக இருக்கும். இப்படியான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையைப் பற்றி மற்றும் ஒருவரைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஒருவரது கண்களுக்கு தெரியும் விஷயங்களானது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எவ்வாறு செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தில் இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் பல உருவங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து அந்நபரின் பெரிய பலவீனத்தை வெளிப்படுத்தும். நீங்கள் வாழ்க்கையில் உங்களின் பெரிய பலவீனத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
புத்தகம் படிக்கும் மனிதன்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு புத்தகம் படிக்கும் ஒரு மனிதன் தெரிந்தால், உங்களின் மிகப்பெரிய பலவீனம் அடிக்கடி பகல்கனவு காண்பது தான். உங்களுக்கு நிறைய வேலைகள் இருந்தாலும், அதை செய்யாமல், தள்ளிப் போட்டு, அடிக்கடி எதையாவது பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இப்படி பொன்னான நேரத்தை தேவையில்லாத விஷயத்தை நினைத்து யோசித்து செலவழிக்கும் போது, அதுவே உங்களுக்கு எதிராக செல்லாம்.
மரங்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரங்கள் தெரிந்தால், நீங்கள் வாழ்க்கையில் எதையும் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள். இது ஒரு நல்ல குணம். இப்படியான குணத்தால் மன அழுத்தத்தை தவிர்க்கலாம். ஆனால் சில சமயங்களில் அதுவே உங்களுக்கு பெரிய பிரச்சனையை சந்திக்க வைத்துவிடும். உதாரணமாக, நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு போதுமான சம்பளம் கிடைக்கவில்லை என்பதை அறிந்தும், அதே வேலையில் தொடர்ந்து வேலை செய்யும் போது, வாழ்க்கையை நடத்த போதுமான பணம் இல்லாமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.
ஒரு ஆணின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு ஆணின் முகம் தெரிந்தால், வாழ்க்கையில் உங்களின் மிகப்பெரிய பலவீனம், மிகவும் நேர்மையாக இருப்பது தான். இப்படி நேர்மையின் காரணமாக சொல்லக்கூடாத விஷயங்களை எல்லாம் சொல்லிவிட்டு, பின் வருத்தப்படுவீர்கள். அதோடு மற்றவர்களின் வெறுப்பையும் சந்திக்க நேரிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
