Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
இந்தியாவின் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகளின் படி ஜூன் முதல் டிசம்பர் வரை என்னென்ன அழிவுகள் வரலாம் தெரியுமா?
2025 ஆம் ஆண்டு தொடங்கி கண்ணை மூடி திறப்பதற்குள் கிட்டதட்ட பாதி ஆண்டுக்கு மேல் முடிந்து விட்டது. பாபா வாங்கா, நோஸ்ட்ராடாமஸ் போன்ற எதிர்காலத்தை கணித்த தீக்கதரிசிகளின் சில கணிப்புகள் பலித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல், மீண்டும் கொரோனா பரவுவது போன்ற சம்பவங்கள் தீர்க்கதரிசங்களில் கூறியுள்ள படியே நடந்துள்ளது.
இந்தியாவின் நோஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் ஜோதிடர் ஒருவர், வரப்போகிற மீதி வருடம் இந்தியாவிற்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து தொடர்ச்சியான திடுக்கிடும் கணிப்புகளைச் செய்துள்ளார். ஜோதிட சாஸ்திரத்திலிருந்து பெறப்பட்ட இந்த கணிப்புகள், சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய கணிப்புகளை வழங்குகிறது. வரப்போகிற ஜூன் முதல் டிசம்பர் வரை இந்தியாவிற்கு எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் முதல் ஜூலை வரை
ஜூன் முதல் ஜூலை மாதம் வரை இந்தியா பாதுகாப்பு மற்றும் மருத்துவத் துறையில் சிறப்பான முன்னேற்றங்களை அடையலாம். ஜூன் முதல் ஜூலை வரை, பாதுகாப்பு உத்திகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிட்ட முன்னேற்றங்கள் ஏற்படலாம். முக்கியமான நோய்களுக்கான புரட்சிகரமான சிகிச்சையைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது, மருத்துவ கண்டுபிடிப்புகளுக்காக உலகளவில் இந்தியா அங்கீகாரம் பெறலாம். அதேசமயம் தெற்கு கடலோர மாநிலங்கள் புயல்கள் மற்றும் கடற்கொள்ளையர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளலாம்.
ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை
இந்தியா விவசாயம் மற்றும் வானிலை போன்ற முக்கிய துறைகளில் தனது ஆய்வுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆண்டின் இரண்டாம் பாதி வழங்குகிறது. சுற்றுச்சூழல் தூய்மையில் கவனம் செலுத்துவது புதுமையான கழிவு மேலாண்மை உத்திகளுக்கு வழிவகுக்கும். அதேசமயம் இந்த காலகட்டத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் பாலியல் ரகசியங்கள் வெளிவரலாம், இது பொதுமக்களிடையே பதட்டத்தையும், அரசியல் சவால்களையும் ஏற்படுத்தக்கூடும்.
அக்டோபர்
அக்டோபரில், சினிமா, உணவு மற்றும் விவசாயம் போன்ற முக்கியமான துறைகளை முன்னேற்ற புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். சரியான திட்டமிடல் இந்த தொழில்களின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வெற்றிகரமான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவம் மற்றும் தடுப்பூசிகளில் முன்னேற்றங்கள் ஏற்படும், இது இந்தியாவின் ஆராய்ச்சி திறன்களை உலகிற்கு நிரூபிக்கும் வாய்ப்புகளைக் கொடுக்கும்.
நவம்பர் முதல் டிசம்பர் வரை
நவம்பர் மாதம் கடற்படை மற்றும் கடல்சார் உத்திகளை வலியுறுத்தும், பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய குறிப்பிடத்தக்க முதலீடுகள் ஈர்க்கப்படலாம். கடலில் சிக்கியுள்ள தனிநபர்களை மீட்பதற்கான தேவை, கடல் எண்ணெய் மற்றும் கனிமங்களுக்கான ஆய்வு முயற்சிகள் போன்ற சவால்கள் ஏற்படலாம். 2025 முடிவடையும் போது, விண்வெளி ஆய்வு மற்றும் அரசியல் இயக்கவியலில் சாதனைகள் உருவாகலாம் உருவாகும், இது சிக்கலான ஆனால் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
