Latest Updates
-
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்..
2024-ல் தூங்கிக் கொண்டிருக்கும் உங்க அதிர்ஷ்ட கதவை திறக்கணுமா? அப்ப புத்தாண்டு முதல் நாளில் இத செய்யுங்க...
New Year 2024 Remedies In Tamil: 2024 ஆம் ஆண்டில் நுழைந்துவிட்டோம். பலரும் இந்த புதிய ஆண்டு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவோம். நிறைய பேர் புத்தாண்டை சிறப்பாக தொடங்க கோவில்களுக்கு சென்று வழிபாடுகளை செய்வார்கள்.
நீங்கள் இந்த புத்தாண்டில் உங்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து வெற்றி மேல் வெற்றி குவிய வேண்டுமென்று ஆசைப்பட்டால், ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள ஒருசில செயல்களை புத்தாண்டின் முதல் நாளில் மேற்கொள்ளுங்கள். அதுவும் உங்களின் ராசிப்படி கூறப்பட்டுள்ள பரிகாரங்களை மேற்கொள்ளும் போது, இன்னும் சிறப்பான பலனை ஆண்டு முழுவதும் பெறலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! நீங்கள் சிவப்பு நிற துணியில் ஒரு தேங்காயை வைத்து சுற்றி, அதை வீட்டில் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது, அது இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையை வலுப்படுத்தும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! நீங்கள் உங்களைச் சுற்றி நேர்மறை ஆற்றல் நிரம்பி, உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற பூக்களால் உங்கள் வீட்டு பூஜை அறையை அலங்கரியுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! உங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லையா? கைக்கு பணம் வந்தாலும், வந்த வேகத்திலேயே செலவாகிவிடுகிறதா? அப்படியானால் இந்த ஆண்டில் உங்கள் கையில் பணம் நிலைத்திருக்க, புத்தாண்டின் முதல் நாளில் தாமரை மலரை ஒரு சிவப்பு துணியில் வைத்து கட்டி, வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். வாரம் ஒருமுறை இந்த பூவை மாற்றி வர வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! நீங்கள் மன அழுத்தத்தை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் புத்தாண்டு நாளில் சிவபெருமானை வழிபடுங்கள். மேலும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்க வேண்டுமானால், ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை கூறுவதோடு, ருத்ராட்சத்தை அணியுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த புத்தாண்டில் உங்களின் நிதி நிலை வலுவாக வேண்டுமானால், ஒவ்வொரு நாள் இரவும் ஒரு விளக்கை வீட்டு வாசலில் ஏற்றி வையுங்கள். இப்படி செய்யும் போது, வீட்டினுள் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் நுழையாது மற்றும் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! புத்தாண்டில் உங்கள் வாழ்க்கையில் செழிப்பாக இருக்க விரும்பினால், துர்கா தேவியை வழிபடுங்கள். இதனால் துர்கையின் அருள் கிடைப்பதோடு, நல்ல ஆரோக்கியத்துடன் செழிப்பான வாழ்க்கையை வாழலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! உங்களுக்கு புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டுமானால், துர்கா தேவி வழிபாட்டுடன் ஆண்டை தொடங்குங்கள். இதனால் துர்கையின் அருளால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். மேலும் சனி தோஷத்தில் இருந்து விடுபட, ருத்ர சண்டியை பாராயணம் செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அனுமனை வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆண்டில் புதிய வீட்டை வாங்க நினைத்துக் கொண்டிரந்தால், 7 பாதாமை ஒரு சிவப்பு துணியில் கட்டி, அனுமனுக்கு படைத்து வழிபடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த புதிய ஆண்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்க வேண்டுமானால், மஞ்சள் கட்டியை துர்கா தேவிக்கு படைத்து வழிபாடு செய்யுங்கள். இதனால் துர்கா தேவி உங்களின் பிரச்சனைகள் அனைத்தையும் நீங்கி, ஆண்டு முழுவதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வார்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! நீங்கள் இந்த புத்தாண்டில் புதிய தொழிலை தொடங்க விரும்பினால் அல்லது ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வியாபாரத்தை விரிவாக்க நினைத்தால், ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரட்டை பசு மாடு அல்லது கருப்பு நிற நாய்க்கு சாப்பிட கொடுங்கள். இதனால் உறவினர்களிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! கடந்த ஆண்டில் நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அந்த கடனை முழுமையாக அடைக்க நினைத்தால், விநாயகரை வழிபாடு செய்யுங்கள். அதுவும் மஞ்சள் மாலையை விநாயகருக்கு படைத்து அவரை வழிபட்டு வாருங்கள். இதனால் உங்களின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! நீங்கள் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், இந்த ஆண்டில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நினைத்தால், ஒவ்வொரு வியாழக்கிழமையும் விநாயகருக்கு லட்டு வாங்கி படைத்து வழிபாடு செய்யுங்கள். இதனால் விநாயகரின் அருளால் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











