Latest Updates
-
பாபா வாங்கவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
சப்பாத்தியை பரிமாறும் போது இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க.. இல்ல வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுவீங்க..
ஜோதிட சாஸ்திரத்தில் உணவு தொடர்பான பல்வேறு விதிகள் கூறப்பட்டுள்ளன. இந்த விதிகளை ஒருவர் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றும் போது, அது ஒருவருக்கு மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றை தருவதாக நம்பப்படுகிறது. அதுவும் உணவை ஒருவருக்கு பரிமாறும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அப்போது ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் உணவை பரிமாறும் போது செய்யும் தவறுகள் ஒருவரது வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது இந்தியாவில் சாதத்திற்கு அடுத்தப்படியாக சப்பாத்தி தான் பெரும்பாலான மக்களால் அதிகம் உட்கொள்ளப்பட்டு வருகிறது. சப்பாத்தி ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அந்த சப்பாத்தியை ஒருவருக்கு பரிமாறும் போது போது ஒருசில தவறுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இல்லாவிட்டால், அது ஒருவரது பொருளாதார நிலையில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது சப்பாத்தியை பரிமாறும் போது எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
பழைய சப்பாத்தியை விருந்தினர்களுக்கு கொடுக்காதீர்
பொதுவாக இரவில் மீந்து போன சப்பாத்தியை எடுத்து வைத்து, மறுநாள் காலையில் சூடு பண்ணி சாப்பிடும் வழக்கம் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட பழைய சப்பாத்தியை வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் கடவுளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே இவர்களுக்கு பழைய சப்பாத்தியை கொடுத்தால், அது தெய்வங்களை அவமரியாதை செய்வதற்கு சமம் மற்றும் தெய்வங்களின் கோபத்திற்கும் ஆளாக்கும்.
பழைய சப்பாத்தியை மாடுகளுக்கு தராதீர்
பொதுவாக நாம் சாப்பிட்டு எஞ்சிய உணவுகளை விலங்குகளுக்கு கொடுப்போம். ஆனால் மீந்து போன அல்லது பழைய சப்பாத்தியை எப்போதும் பசு மாடுகளுக்கு கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால், அது தெய்வங்களின் கோபத்திற்கு ஆளாக்கும் மற்றும் மோசமான பலன்களை அளிக்கும். ஏனெனில் பசு மாடுகளில் தெய்வங்கள் குடியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே பசு மாடுகளுக்கு எதை கொடுப்பதாக இருந்தாலும், நற்பதமான உணவுகளையே கொடுக்க வேண்டும்.
ஒரே வேளையில் மூன்று சப்பாத்தியை பரிமாறக்கூடாது
சாஸ்திரத்தின் படி, நாம் செய்யும் சிறு தவறுகளும் நமது தினசரி வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பணப் பிரச்சனைகள் மற்றும் குடும்ப பிரச்சனைகளை அதிகரிக்கும். இந்து மத நம்பிக்கைகளின் படி, சப்பாத்தியை ஒருவருக்கு பரிமாறும் போது ஒரே நேரத்தில் மூன்று சப்பாத்திகளை வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால், அது வீட்டின் மகிழ்ச்சியையும், அமைதியையும் பாதிப்பதோடு, வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
கைகளில் சப்பாத்தியைக் கொடுக்கக்கூடாது
ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவருக்கு சப்பாத்தியை தருவதாக இருந்தால், அந்த சப்பாத்தியை சாப்பிடுபவரின் கையில் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் அப்படி கொடுத்தால், அது வறுமையைக் கொண்டு வரும். எனவே சப்பாத்திகளை பரிமாறும் போது, அதை நேரடியாக தட்டில் வையுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications