Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Murudeshwar Temple: உலகின் 2-வது பெரிய சிவன் சிலை கொண்ட கோயிலைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!
கர்நாடகாவை ஒரு அற்புதமான இந்தியாவாக மாற்றுவது அதன் கோவில்கள்தான். அவர்களின் கட்டிடக்கலை, மத முக்கியத்துவம், வரலாறு அந்த கோயில்கள் அமைந்துள்ள இடம் இப்படி எதுவாக இருந்தாலும், கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான கோயில்கள் சிறப்புமிக்கவை. முருதேஸ்வரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருதேஷ்வர் கோயிலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலாகும். இந்தியாவின் சிறந்த சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று.
கர்நாடகாவில் அரபிக்கடலின் கரையோரத்தில் முருதேஷ்வர் கோயில் உள்ளது. கடற்கரையோரத்தில் இருக்கும் இந்த கோவிலை பார்க்கும்போது அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் வரும். இங்கு சிவபெருமான் சிவலிங்க வடிவில் வழிபடப்படுகிறார். கந்துகா மலையில் கட்டப்பட்ட இந்த கோவில், உலகின் இரண்டாவது உயரமான சிவன் சிலைக்கு பெயர் பெற்றது. இந்த சிலையின் உயரம் 123 அடி. இந்த சிலை தங்க முலாம் பூசப்பட்டது. இங்குள்ள ராஜகோபுரம் 20 தளங்களைக் கொண்டது. கோயிலின் நுழைவாயிலின் இருபுறமும் இரண்டு யானை சிலைகள் உள்ளன.

கோவில் அதன் அசல் வடிவில் உள்ள கருவறையைத் தவிர சற்று நவீனமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள முருதேஷ லிங்கம் சிவபெருமானின் மூல ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதி என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. மிருதஸ்வர லிங்கத்தின் பெயரால் இந்த நகரம் மிருதேஸ்வரா என்று அழைக்கப்பட்டது. ஆனால் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அது முருதேஸ்வரர் என்று பெயர் மாற்றப்பட்டது.
முருதேஷ்வர் கோயிலின் புராணம்
புரணக்கதைகளின்படி, ராவணன் சிவபெருமானிடம் உருக்கமாக பிரார்த்தனை செய்து, தனது 'ஆத்ம லிங்கத்தை' (சிவனின் ஆன்மா) ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டார். சிவபெருமான் அவரது பக்தியில் மூழ்கினார். அவர் இலங்கையை அடையும் வரை பூமியைத் தொடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு லிங்கத்தைக் கொடுக்கிறார். அதாவது ராவணன் இலங்கையை அடையும் வரை ஓய்வெடுக்க முடியாது. இராவணன் கைலாச மலையிலிருந்து ஆத்மலிங்கத்தை லங்கா ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறான். இதற்கிடையில், ஆபத்தை உணர்ந்த விநாயகர், ராவணனிடம் வந்து, ஆத்மலிங்கத்தை கோகர்ணா கடலின் கரையில் வைக்கும்படி ஏமாற்றுகிறார். இதில் சற்று ஏமாந்துப்போன ராவணன் லிங்கத்தை கீழே வைக்கிறார். பின்னர் எடுக்க முயற்சித்த போது அதனை எடுக்க முடியவில்லை.
அவர் மீண்டும் மீண்டும் தனது ஆத்ம லிங்கத்தை பூமியிலிருந்து எழுப்ப முயற்சி செய்தார். ஆனால் அவனால் அசைக்க கூட முடியவில்லை. கோபத்தில் ராவணன், லிங்கத்தை அழிக்க தன் முழு பலத்தையும் பயன்படுத்தினான். இதனால் லிங்கம் உடைந்து லிங்கத் துண்டுகள் சிதறிக் கிடந்தன. லிங்கத்தை மூடப் பயன்படுத்திய துணி, கந்துகை கிரியை நோக்கிச் சென்றது. இந்த கண்டக கிரியில் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
முருதேஸ்வரா கோவிலின் சிறப்புகள்
1. உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை இந்த முருதேஸ்வரர் சிலையாகும்.
2. அதற்கு அடுத்ததாக பரந்த அரபிக்கடல் உள்ளது. இந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.
3. இக்கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சம் 20 அடுக்கு ராஜகோபுரம். அதன் உச்சிக்குச் சென்று கோவிலை முழுமையாகப் பார்க்கலாம். அருகிலுள்ள கடலையும் ரசிக்கலாம்.
4. குவிமாடத்தின் உச்சிக்குச் செல்ல இரண்டு லிப்ட்கள் உள்ளன. இந்த ராஜகோபுரத்தின் உயரம் 249 அடி. இது உலகின் மிக உயரமான குவிமாடம் என்று அறியப்படுகிறது.
5. கோயிலுக்குச் செல்லும் படிகளுக்கு அருகில் இரண்டு பெரிய யானை சிலைகள் உள்ளன. கந்துக மலையின் மேற்பரப்பில் பல சிற்பங்கள் கட்டப்பட்டுள்ளன. கீதா உபதேசம், சூரிய ரத் மற்றும் ராவணனிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் பெறும் விநாயகரின் சிற்பம் ஆகியவை இதில் அடங்கும்.
6. கோயிலுக்குப் பின்னால் ஒரு கோட்டை உள்ளது. இது ஒரு நல்ல சுற்றுலா தலமாகவும் உள்ளது.
7. மகா சிவராத்திரி அன்று கர்நாடகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
8. சாளுக்கிய மற்றும் கடம்ப சிற்பங்களுடன் கூடிய திராவிட கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்ட கோயில் கட்டிடக்கலை. கருவறையின் உள்ளே தரையில் இருந்து 2 அடி கீழே உள்ள சிவபெருமானின் லிங்கத்தை காணலாம்.
9. இங்குள்ள சிவன் சிலை, சூரியக் கதிர்கள் மீது படும்போது ஜொலிக்கிறது.
10. இந்த பிரமாண்ட சிலையை செதுக்க 2 ஆண்டுகள் ஆனது.
முருதேஸ்வர் கோவில்
முருதேஸ்வர் என்பது பக்தர்களுக்கு மட்டுமல்ல. இது ஒரு நல்ல சுற்றுலாதளமாகவும் விளங்குகிறது. படகு சவாரி மற்றும் ஸ்கூபா டைவிங் வசதிகளையும் இங்கு அனுபவிக்க முடியும். இங்குள்ள கண்கவர் காட்சிகளைப் பற்றி அதிகம் சொல்ல முடியாது. நேரடியாகப் பார்த்தாலே நாம் உணரலாம்.
முருதேஸ்வரர் கோவில் நேரங்கள்
தினமும் காலை நேரம்: 3:00 மணி முதல் மதியம் 1:00 மனி வரை திறந்திருக்கும்.பின்னர் மாலை 3:00 மனை முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். இந்த கோயிலுக்கு சென்றுவர 2-3 மணி நேரம் ஆகும். ஆண்கள் வேட்டி மட்டும்தான் கட்டிவரலாம். டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் பேன்ட் அனுமதிக்கப்படாது. பெண்கள் துப்பட்டா மற்றும் சுடிதார் கொண்ட புடவை மட்டுமே அணிய வேண்டும். அது தவிர மேற்கத்திய உடைகள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாது.



Click it and Unblock the Notifications