Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...!
7 கோடி மக்களுக்கு மேல் இறந்த இந்த போர்தான் மனித வரலாற்றின் மிகவும் கொடூரமான போராம்... எந்த போர் தெரியுமா?
உலகம் தோன்றிய காலம் முதலே மனிதர்களுக்குள் போர்கள் நடப்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆரம்பத்தில் கற்களைக் கொண்டும், கத்தியைக் கொண்டும் நடந்த போர்கள் இப்போது அதிநவீன ஆயுதங்களைக் கொண்டு நடக்கிறது. தற்போது உலகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் மூன்றாம் உலகப்போர் நடக்க வாய்ப்புள்ளதாக பலரும் அஞ்சுகின்றனர்.
மீண்டும் ஒரு உலகப்போர் மூண்டால் அதற்க்குபின் மனிதர்களின் வாழ்க்கை கேள்விக்குறிதான். உலக வரலாற்றில் பல பயங்கரமான போர்கள் நடந்துள்ளன, அதில் மில்லியன் கணக்கான மக்கள் காரணமேயின்றி தங்கள் உயிர்களை இழந்தனர். ஆனால் மனித நாகரிகத்தின் மிகக் கொடூரமான ஒரு போர் இருந்தது. இந்த போரில் 2 கோடி போர் வீரர்கள் மற்றும் 5 கோடி பொதுமக்கள் உட்பட 7 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். அதுதான் இரண்டாம் உலகப்போர்.

உலகின் முதல் அணுகுண்டுத் தாக்குதலும் இந்தப் போரில்தான் நடந்தது, அதனால் ஏற்பட்ட பேரழிவு இன்னும் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ளது. அதன் விளைவுகளை இன்னும் அந்த நாடு சந்தித்து வருகிறது. இந்த கொடூரமான போர் 1939-45 காலப்பகுதியில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நடந்தது.
இரண்டாம் உலகப் போரில் முக்கியமாக இரண்டு பக்கங்கள் இருந்தன. ஒரு பக்கம் ஆக்சிஸ் நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான், மறுபுறம் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் போன்ற நாடுகள் இருந்தன. இந்தப் போரில் இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான போர் வீரர்களும் பங்கேற்றனர்.
இரண்டாம் உலகப் போரில் கிட்டத்தட்ட 7 கோடி மக்களுக்கு மேல் இறந்தது அதை வரலாற்றின் மிகவும் மோசமான மற்றும் மிகப்பெரிய போராகவும் மாற்றியுள்ளது. இரண்டாம் உலகப் போர் உலக வரைபடத்தையும், புவிசார் அரசியலையும் நிரந்தரமாக மாற்றியது. இந்தப் போரில், அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசியது. அந்த சம்பவம் உலக வரலாற்றின் கரும்புள்ளியாகும்.
இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்
ஆகஸ்ட் 31, 1939 அன்று மதியம் 12:40 மணிக்கு, ஜெர்மனின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் தனது நாஜி இராணுவத்தை போலந்தைத் தாக்க உத்தரவிட்டார். ஜெர்மனியால் போலந்து தாக்கப்பட்டால் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் போலந்துக்கு இராணுவ ஆதரவு அளிக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பிரிட்டனும் பிரான்சும் செப்டம்பர் 3 அன்று ஜெர்மனி மீது போரை அறிவித்தன. இதுதான் இரண்டாம் உலகக்போரின் தொடக்கமாக இருந்தது. தனி மனிதராக ஹிட்லர் உலக வரலாற்றையே மாற்றினார்.
ஹிட்லரின் ஒப்பந்தம்
இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பு, ஜெர்மனிக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தானது. போலந்தை வென்ற பிறகு, அது இரு நாடுகளுக்கும் இடையில் பிரிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. போலந்தின் மேற்கு மூன்றில் ஒரு பங்கு ஜெர்மனிக்கும், கிழக்கு மூன்றில் இரண்டு பங்கு சோவியத் யூனியனுக்கும் கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால் ஐரோப்பா ஐரோப்பா முழுவதும் பற்றி எரிந்தது.
இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை நீடித்தது. சுமார் 70 நாடுகளின் நிலம், கடல் மற்றும் விமானப் படைகள் இதில் பங்கேற்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 கோடி வீரர்கள் இந்தப் போரில் பங்கேற்றனர். இது மனித வரலாற்றில் மிகவும் கொடிய போராக மாறியது.
டிசம்பர் 1941 இல், அச்சு நாடுகளுடன் இணைந்து ஜப்பானியப் பேரரசும் இந்தப் போரில் குதித்தது. கிழக்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே ஜப்பானின் நோக்கமாக இருந்தது. பசிபிக் பெருங்கடலில் உள்ள அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியது. இதன் பிறகு, அமெரிக்காவும் இந்தப் போரில் இணைந்தது.
போரின் முடிவு
பேர்ல் துறைமுகத்தின் மீதான ஜப்பானின் தாக்குதலால் கோபமடைந்த அமெரிக்கா, ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசியது. இது ஜப்பானின் மீது மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது, இன்றுவரை அதன் விளைவுகள் தொடர்கிறது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் மே 8, 1945 அன்று ஜெர்மனி நிபந்தனையின்றி சரணடைந்தபோது முடிந்தது. ஜப்பானியப் பேரரசு சரணடைந்தபோது ஆசியாவில் இரண்டாம் உலகப் போர் ஆகஸ்ட் 15, 1945 அன்று முடிவுக்கு வந்தது.



Click it and Unblock the Notifications












