Latest Updates
-
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்!
உலகிலேயே மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட மனிதர் இவர்தானாம்... யார் இவர்? இவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
மரணம் என்பது மனிதர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகும். பூமியில் பிறந்த அனைவருமே இறக்கத்தான் போகிறார்கள், ஆனால் அவர்கள் எப்படி இறக்கிறார்கள் என்பது அவர்களின் வாழ்க்கை முறையைப் பொறுத்ததுதான். சிலர் எதிர்பாராத நேரத்தில் சில நொடிகளில் விபத்திலேயோ அல்லது இயற்கை பேரழிவுகளிலேயோ இறந்து விடுவார்கள், சிலர் தற்கொலை செய்துக் கொண்டு இறக்கிறார்கள். ஆனால் சிலர் மிகவும் வலிநிறைந்த மரணத்தை அனுபவிக்கிறார்கள்.
உலககெங்கும் வரலாறு முழுவதும் பல கொடூரமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் வெகுசில மரணங்களே கேட்பவரை நடுங்கச் செய்வதாக உள்ளன. 16 ஆம் நூற்றாண்டில் ஹங்கேரிய கிளர்ச்சியாளருக்கு நேர்ந்த இந்த பயங்கரமான மரணத்தை ஒரு 'உண்மையான வெறி பிடித்தவர்' மட்டுமே செய்திருக்க முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இதுதான் உலக வரலாற்றின் மிகவும் கொடூரம் மரணம் என்று கூறப்படுகிறது.

உலகின் மிகவும் கோரமான மரணம் என்று கூறப்படும் பயங்கரமான சம்பவங்கள் இருந்தாலும், இது அனைத்தையும் விட மிகவும் மோசமானதாக இருக்கலாம். கியோர்கி டோசா 1470 இல் பிறந்த ஒரு ஹங்கேரிய மனிதர் மற்றும் ஹங்கேரி இராச்சியத்தின் ஆட்சியாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் புரட்சியாளராக இருந்தார். குறிப்பாக, ஹங்கேரியின் இரண்டாம் விளாடிஸ்லாஸ் மன்னரின் ஆட்சியின் போது இராச்சியத்தின் பிரபுக்களுக்கு எதிராக டோசா ஒரு விவசாயிகள் கிளர்ச்சியை வழிநடத்தினார்.
இறுதியில் அவர் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார், அதிகாரத்தில் இருந்தவர்கள் அவரின் மூலம் ஒரு தெளிவான மற்றும் கடுமையான உதாரணத்தை பொதுமக்களுக்கு உருவாக்க விரும்பினார்கள். அவர் எப்படி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பது பற்றி சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவரது மரணம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
"அவர் தனலாய் எரிந்து கொண்டிருந்த ஒளிரும் இரும்பு சிம்மாசனத்தில் நிர்வாணமாக உட்கார வைக்கப்பட்டார், மேலும் அவரது தலையில் ஒரு ஒளிரும் இரும்பு கிரீடம் வைக்கப்பட்டது. அவரது ராஜாவாகும் லட்சியத்தை கேலி செய்யும் வகையில் எரிந்து கொண்டிருந்த செங்கோலைப் பிடிக்க வேண்டியிருந்தது. அவர்களின் நோக்கம் டோசாவை சித்திரவதை செய்வது மட்டுமின்றி அவரை அவமானப்படுத்துவதாகவும் இருந்தது.
பட்டினியோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது சக கிளர்ச்சியாளர்களில் ஒன்பது பேர் இந்த சிம்மாசனத்திற்கு முன்னால் வழிநடத்தப்பட்டனர், அதன்பின் தண்டனையை நிறைவேற்றுவார்கள் நெருப்பிலிருந்து ஒரு ஜோடி இடுக்கிகளை எடுத்து அவரது தோலில் குத்தினார்கள், அவர்கள் அவரது சதையைக் கிழித்த பிறகு மீதமுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு அந்த இறைச்சியை விழுங்குமாறு கட்டளையிடப்பட்டனர். இதை மறுத்தவர்கள் உடனடியாக தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர், அதற்கு கீழ்ப்படிந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர்."
வரலாற்று குறிப்புகளின் படி, டோசா இறப்பதற்கு சிறிது நேரம் ஆனது, அதாவது அவரது மரணம் முழுமையான வேதனையுடன் நிகழ்ந்தது. கேட்பதற்கே கொடூரமாக இருக்கும் இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைக்கவே நடுக்கமாக உள்ளது.
இப்படிப்பட்ட கொடூரமான தண்டனையை வழங்கிய நபர்கள் உண்மையில் மனிதர்களாக இருக்க மாட்டார்கள் என்று இந்த வீடியோவை பார்த்த நபர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications

