Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது?
மலேசியாவில் நாக்கை அறுத்து முத்தம் கொடுக்கும் வினோதமான சடங்கு.. இது எதுக்கு-ன்னு பாருங்க..
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமான சடங்குகள் அப்பகுதிக்கு ஏற்றவாறு இருக்கும். அதில் சில சடங்குகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தாலும், இன்னும் சில சடங்குகளைப் பார்க்கும் போது அவை மூடநம்பிக்கையின் உச்சக்கட்டமாக தெரியும்.
அந்த வகையில் மலேசியாவில் ஒரு வினோதமான சடங்கு முறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவெனில் மலேசிய ஷாமன் ஒருவர் குழந்தைகளுக்கு 'ரத்த முத்தம்' கொடுக்கும் சடங்கின் காரணமாக, அவர் குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

மலேசியாவில் லின் என்ற குடும்ப பெயரைக் கொண்டவர் தான் ஷாமன். ஷாமன் என்றால் நம் ஊரில் சாமியார் என்பர். இந்த லின் என்ற சாமியார் மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள சிலாங்கூரில் உள்ள கிளாங்கில் இருக்கும் ஒரு கோவிலில் இந்த சடங்கை நடத்தினார். இந்த சடங்கின் போது, அந்த சாமியார், தனது நாக்கை அறுத்து, பின் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பார். இந்த சடங்கினால் குழந்தைகளின் நோய் குணப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சடங்கை இந்த சாமியார் இதுவரை பல குழந்தைகளுக்கு செய்துள்ளார்.
இப்படிப்பட்ட சடங்கின் போட்டோக்களை கோயிலானது அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதும், அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவி, பெரிய சர்ச்சையை தூண்டிவிட்டது. இதைப் பார்த்த பலர் மூடநம்பிக்கையின் உச்சக்கட்டத்தில் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து சென்ற பெற்றோரை விமர்சித்துள்ளனர். இன்னும் சிலர் அந்த சாமியார் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். இப்படியான நடத்தை முற்றிலும் சுகாதாரமற்றது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த மலேசியாவின் தாவோயிஸ்ட் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சென், இப்படியான சடங்கிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடைமுறையைத் தடுக்க ஒரு குழுவை ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்துள்ளார். இந்த சடங்கு குறித்து, சென் சீன மொழி ஊடகம் ஒன்றிடம் கூறியதாவது, " இந்த இரத்த முத்த சடங்கின் போது குழந்தைகளின் கைகள் மற்றும் கால்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும் இதை மேற்கொள்ள குழந்தைகள் விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தப்படுவதாக தெரிகிறது. பெற்றோர்கள் இப்படியான சிகிச்சைகள் மற்றும் அதிகப்படியான மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குழந்தைகளை கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.
இதுக்குறித்து லின்னிடம் விசாரித்த போது, லின் தனது செயல்களை பாதுகாக்க முயன்றார். அவரது நோக்கம் உதவுவது மட்டுமே, தீங்கிழைக்க அல்ல என்று வலியுறுத்தியதாக கூறினார். மேலும் ஒரு தெய்வீக தலையீட்டாலேயே அவர் வழிநடத்தப்பட்டதாக அவர் கூறியதாகவும் சென் கூறினார். இப்படி இரத்த முத்த சடங்கு செய்யும் போது, லின் நேரடியாக குழந்தைகளை முத்தமிடவில்லை என்றும், துன்புறுத்தலாக கருதப்படும் எந்த செயலையும் செய்யவில்லை என்றும் லின் கூறியுள்ளதாக சென் தெரிவித்தார்.
கடவுளுக்கும், மனிதர்களுக்கும் ஒரு தொடர்பு ஊடகங்களாக ஷாமன்கள்/சாமியார்கள் என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சில சடங்குகளின் போது, ஷாமன்கள் அதிக இரத்தப்போக்கு வரை தங்களை காயப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படியான சடங்கு தெய்வத்தை ஈர்ப்பதாக சிலர் நம்புகிறார்கள்.
இந்த சடங்கு குறித்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலவாறு பதில்களை அளித்தனர். அதில் இந்த சடங்கு குறித்து ஒரு நெட்டிசன், "சிகிச்சையானது குழந்தைகளுக்கு தேவையில்லை, பெற்றோர்களுக்கு தான். அதுவும் மூடநம்பிக்கைக் கொண்ட பெற்றோர்கள் அடுத்த தலைமுறைக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க தலையை முதலில் பரிசோதிக்க வேண்டும் " என்றார்.
அடுத்த நெட்டிசன், "இந்த சடங்கு மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என்றால், இன்னும் ஏன் மருத்துவர்கள் தேவை? மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு முத்தம் கொடுங்கள். முதலில் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோருக்கு முத்தம் கொடுங்கள். ஏனெனில் இவர்களுக்கு தான் பைத்தியம் பிடித்துள்ளது" என்று கூறினார்.



Click it and Unblock the Notifications