Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
மகாளய சனி அமாவாசையான இன்று மறக்காம இதெல்லாம் செஞ்சா.. ஏழரை சனி தாக்கமும், பித்ரு தோஷமும் நீங்கும்..
Mahalaya Amavasya Shani Amavasya 2023: ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு அடுத்த நாளில் இருந்து 14 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். மகாளய பட்ச காலத்தில் இறந்த முன்னோர்கள் பூமிக்கு வருகை தருவதாக நம்பப்படுகிறது.
இதனால் இக்காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, திதி கொடுப்பது போன்ற காரியங்களை செய்யும் போது, இறந்த முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து ஆசியை வழங்குவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட மகாளய பட்ச காலத்தின் கடைசியில் வரும் அமாவாசை நாள் தான் மகாளய அமாவாசை.

இந்த ஆண்டு மகாளய அமாவாசையானது அக்டோபர் 14 ஆம் தேதி வருகிறது. இந்த மகாளய அமாவாசையானது இந்த ஆண்டு சனிக்கிழமையில் வருகிறது. மகாளய அமாவாசை போன்றே, சனி அமாவாசையும் இந்து மதத்தில் சிறந்து வாய்நதது.
வருடம் முழுவதும் இறந்தவர்களுக்கு எந்த ஒரு காரியமும் செய்யாமல் இருப்பவர்கள், இந்த மகாளய அமாவாசை நாளில் திதி கொடுத்து, தானம் செய்து வந்தால், புண்ணியம் கிடைப்பதோடு, தலைமுறைகள் மகிழ்ச்சியான செழிப்பான வாழ்க்கையை வாழ்வர்.
அதுவும் இந்த அண்டு மகாளய அமாவாசை சனிக்கிழமைகளில் வந்திருப்பதால், இந்நாளில் ஒருசிலவற்றை செய்யும் போது, பித்ரு தோஷம் நீங்குவதோடு, ஏழரை சனியின் தாக்கமும் குறைவதாக கூறப்படுகிறது. இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
ஆற்றில் நீராடவும்
மகாளய அமாவாசை மற்றும் சனி அமாவாசை நாளில் ஓடும் ஆற்றில் நீராட வேண்டும். ஒருவேளை உங்களால் ஆற்றில் நீராட முடியாவிட்டால், அதிகாலையில் எழுந்ததும் குளிக்கும் நீரில் சிறிது கங்கை நீரை கலந்து குளிக்கலாம். அதோடு, ஏழை எளியோருக்கு தானியங்கள், புதிய ஆடைகள் போன்றவற்றை தானம் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம், முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவதோடு, சனி பகவானும் மகிழ்ச்சி அடைந்து, அவரது அருளும் கிடைக்கும்.
நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்
சனி பகவானுக்கு எள்ளு விதைகள் பிடிக்கும். எனவே சனி அமாவாசை நாளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு தீபம் ஏற்றினால், அவரது ஆசியைப் பெறலாம். அதுவும் தீபம் ஏற்றும் போது "ஓம் ஷாம் சனீஸ்வராய நமஹ" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் தாக்கமும் குறையும்.
கருப்பு நிற பொருட்களை தானம் செய்யவும்
சனி அமாவாசை நாளானது சனி பகவானுக்கு உரிய நாளும் கூட. எனவே இந்நாளில் சனி பகவானுடன் தொடர்புடைய கருப்பு நிற ஆடைகள், எள்ளு விதைகள், கருப்பு உளுந்து போன்றவற்றை தானம் செய்தால், சனி பகவான் சந்தோஷமடைந்து நற்பலனை வழங்குவதோடு, முன்னோர்களும் மகிழ்ச்சியடைவர்.
கடுகு எண்ணெய் வாங்கி கொடுக்கவும்
பொதுவாக சனிக்கிழமைகளில் சனி பகவானை மகிழ்விக்க கடுகு எண்ணெயை வாங்கிக் கொடுக்கலாம். அதுவும் அந்த செயலை மகாளய சனி அமாவாசை நாளில் சனி பகவானுக்கு படைக்கும் போது, இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
சனி ஸ்தோத்திரம் சொல்லவும்
சனி அமாவாசை நாளன்று சனி பகவானுக்கு தீபம் ஏற்றி, கடுகு எண்ணெயால் அபிஷேகம் செய்து, நீல நிற மலர்களை சமர்பித்து வழிபடுவதோடு, சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. இப்படி சொல்வதன் மூலம் ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் தாக்கமும் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications