Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
மதுரை சித்திரை திருவிழா 2023: இன்று மீனாட்சி அம்மன் எந்த வாகனத்தில் வலம் வரப் போகிறார்?
Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை தமிழ்நாட்டின் மிகச்சிறந்த நகரமாகும். தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிக் காப்பதில் மதுரை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மதுரையின் முக்கிய அழகே மீனாட்சி அம்மன் கோவிலும், கோலாகலமாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவும் தான். இந்த சித்திரை திருவிழா நாளில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இந்த சித்திரை திருவிழா ஏப்ரல் மாதத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் முதல் 15 நாட்கள் மீனாட்சி தேவியின் முடிசூட்டு விழாவும் மற்றும் மீனாட்சி தேவியுடன் சுந்தரேஸ்வரப் பெருமானின் திருமண விழாவும் மற்றும் அடுத்த 15 நாட்கள் அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர், கோவிலில் இருந்து மதுரைக்கு அவர் விஜயம் செய்யும் விழாவும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மதுரை சித்திரை திருவிழா தமிழ்நாட்டின் மிகச்சிறந்த விழாவாக கொண்டாடப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழாவின் வியக்க வைக்கும் வரலாறு
நம் நாட்டுப்புறக் கதைகளின் படி, பழங்காலத்தில் சித்திரை மாதத்தில் சைவ திருவிழாவும் (சிவன்) மற்றும் வைணவ (விஷ்ணு) திருவிழாக்கள் இரண்டுமே தனித்தனியாக இருந்தன. நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சைவம் மற்றும் வைணவம் இரண்டையும் ஒருங்கிணைக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை உருவாக்கப்பட்டது.
புராணத்தின் படி, மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னன் மலையத்வஜ பாண்டியன் மற்றும் ராணி காஞ்சனா மாலையின் மகள் ஆவாள். இந்த அரச தம்பதியருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. எனவே, மலையத்வாஜ பாண்டியன் சிறப்பு பூஜைகள் செய்து இறைவனை வேண்டினார். பூஜையின் போது ஒரு சிறுமி நெருப்பில் இருந்து வெளியே வந்து மன்னனின் மடியில் அமர்ந்தாள்.
அந்த நேரத்தில் வானத்தில் இருந்து ஒருகுரல் கேட்டது. இந்த குழந்தை சக்தியின் (சிவனின் மனைவி) அவதாரம் என்றும், சிவபெருமானே சரியான வயதில் அவளை மணக்க வருவார் என்றும் கூறியது. பிறகு மீனாட்சி வளர்ந்து பெரியவள் ஆனதும் போர்க்கலையில் சிறப்பாக செயல்பட்டாள். இதனால் அவள் உலகம் முழுவதையும் வென்று கடைசியில் கைலாசத்தை கைப்பற்ற முயற்சி செய்தாள்.
அப்போது மீனாட்சி சிவபெருமானை போர்க்களத்தில் எதிர்கொண்ட போது, அவர் மீது காதல் கொண்டு, தான் சக்தியின் அவதாரம் என்பதை உணர்ந்தாள். பிறகு சிவபெருமான் மீனாட்சியை மணந்து கொள்ள மதுரைக்கு வருவதாக உறுதியளித்தார். வாக்களித்தபடியே சிவபெருமான் அனைத்து தேவர்கள் மற்றும் ரிஷிகளுடன் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
கள்ளழகர் புறப்பாடு
மீனாட்சி தேவியின் திருமணத்திற்காக தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டது. மீனாட்சி தேவியின் மூத்த சகோதரர் தான் கள்ளழகர் (விஷ்ணு) ஆவார். அவர் மீனாட்சி தேவியை சிவபெருமானுக்கு மணம் முடித்து கொடுப்பதற்காக அழகர் மலையில் உள்ள தனது வசிப்பிடத்திலிருந்து மதுரையை நோக்கி 20 கிலோமீட்டர் பயணத்தைத் தொடங்கினார்.
ஆனால் மலைகளின் அடர்ந்த காடு அவரது பயணத்தை தாமதப்படுத்தியது. இதனால் கள்ளழகர் மீனாட்சி திருமணத்திற்கு சரியான நேரத்தில் வர முடியாமல் போய் விட்டது. 2 நாட்கள் கழித்து வைகை ஆற்றை கடந்து கள்ளழகர் வரும் போது மீனாட்சி தேவியின் திருமணம் முடிந்திருந்தது. தனது சகோதரியின் திருமணச் செய்தியைக் கேள்விப்பட்டு, தான் இல்லாமல் திருமணம் நடந்ததால் கள்ளழகர் ஆத்திரமடைந்தார்.
இதனால் அவர் கோபமுற்று மறுபடியும் அழகர் கோயிலுக்கு திரும்பினார். அப்பொழுது அவர் திரும்பி வரும் போது அவரை குளிர்விப்பதற்காக பக்தர்கள் அவர் மீது தண்ணீரை தெளிக்க ஆரம்பித்தார்கள். இந்த பிரசித்தி பெற்ற திருவிழா தான் அழகர் திருவிழா ஆகும்.
மதுரை சித்திரை திருவிழா கொண்டாட்டம்
மதுரை சித்திரை திருவிழா மதுரையின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த கலாச்சார விழாவைக் கொண்டாட ஏராளமான மக்கள் கூடுகிறார்கள். சித்திரை மாதம் முழுவதும் இந்த திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் 23 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5 ல் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபோகம் கொண்டாடப்படுகிறது.
சித்திரை திருவிழா கொடியேற்றம்
இந்த நிகழ்வின் போது மீனாட்சி கோயிலின் தலைமை அர்ச்சகர் கோயிலின் கொடி கம்பத்தில் புனித கொடியை ஏற்றுவார். இந்த கொடியேற்றம் சித்திரை திருவிழா தொடங்கப்பட்டதை குறிக்கிறது. திருவிழா முடியும் வரை கொடி கம்பத்தில் கொடி பறந்து கொண்டிருக்கும். கொடியேற்றத்திற்குப் பிறகு மீனாட்சி அம்மன் அடுத்த 12 நாட்களுக்கு மதுரை நகரையே தினமும் ஒரு தேர் வாகனத்தில் சுற்றி வந்து மக்களுக்கு அருள் புரிவார்.
முதல் நாள்: சிம்ம வாகனம்
மதுரை சித்திரை திருவிழாவின் முதல் நாளில் மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும், சங்கரர் கற்பகவிருட்சம் வாகனத்திலும் வீற்றிருந்து மதுரை நகரை சுற்றி வந்தனர். அப்போது மக்கள் அனைவரும் தெரு வீதியில் காத்திருந்து அம்மனுக்கு தேங்காய் பழம் உடைத்து, மாலை சூடி வழிபடுவார்கள்.
இரண்டாம் நாள்(இன்று): அன்ன வாகனம்
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை தங்க சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் வீதியுலா சென்ற நிலையில், மாலையில் சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன வாகனத்திலும் பவனி வருவார்கள். பூத வாகனம் என்பது பூதத்தை பறை சாற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதாவது பெரிய பற்களும் அகன்ற பயமுறுத்தும் கண்களும் கொண்ட பூத வாகனத்தில் எம்பெருமான் வலம் வருவார்.
நம்மளுக்குள் இருக்கும் கெட்ட பூத சக்தியை அடக்கி ஆள வேண்டும், அதற்கு எம்பெருமான் துணையாக இருப்பார் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த பூத வாகன ஊர்வலம் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் வண்ணமயமான பட்டு உடுத்து கழுத்து நிறைய ஆபரணங்கள் அணிந்து அழகான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கையில் பச்சை நிற கிளியுடன் வீற்றிருந்து தன் அருள் மிகுந்த பார்வையால் மக்களின் குறைகளை போக்க வலம் வருவார்.
இதைக் காண மக்கள் வீதியின் இருபுறமும் திரண்டு நின்று வழிபடுவார்கள். குழந்தைகளும் மக்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்புறப் பாடல்கள் பாடியும் மேள தாள கொண்டாட்டத்துடன் சாமியை வணங்கி வழிபடுவார்கள்.



Click it and Unblock the Notifications