Latest Updates
-
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
மதுரை சித்திரை திருவிழா 2023 நிறைவு நாள்: கள்ளழகர் மதுரையில் இருந்து புறப்பட்டு திருமலை செல்கிறார்!
Madurai Chithirai Thiruvizha 2023: நேற்று கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி மதுரையிலிருந்து அழகர் கோயிலுக்கு புறப்பட்டார். இன்றைக்கு சித்திரை திருவிழாவின் நிறைவு விழா நடைபெறுகிறது. நிறைவு விழாவான இன்று கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார்.
அவர் பூப்பல்லக்கில் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான மண்டகப்படியில் இருந்து புறப்படுகிறார். தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் உத்தரவு பெற்று பிறகு கள்ளழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். கள்ளழகர் புறப்படும் திருவிழாவைக் காண ஆயிரம் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடினர்.

கள்ளழகர் புறப்படும் நிகழ்வு
கள்ளழகர் தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் உத்தரவு பெற்ற பின்னரே அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலின் மூலவர் சப்பரத்தடியான். இங்கே பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் அருள்பாலிக்கின்றனர். குங்குமம், சந்தனம் மற்றும் திருநீறு மூன்றையும் இங்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.
முந்தைய காலத்தில் இங்குள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் ஏறி அழகர் காட்சி அளித்தார். சப்பரத்தடியான் அழகரின் பாதுகாவலர் ஆவார். எனவே தான் அவரின் அனுமதி பெற்ற பிறகே அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். அதே மாதிரி மக்களும் தாங்கள் வாங்கும் புதிய வாகனங்களை இங்கு கொண்டு வந்து பூஜை செய்வது உண்டு.
போறார் அழகர் போறார்
மதுரைக்குள் அழகர் வரும் போது மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் சந்தோஷமாக வரவேற்று ஒவ்வொரு நாளையும் சிறப்பாக கொண்டாடுவார்கள். கள்ளழகரை தங்கள் வீட்டிற்கு அழைத்து மகிழ்வார்கள். கள்ளழகர் மதுரைக்கு வரும் போது "வாராரு வாராரு அழகர் வாராரு" என்று அனைத்து மக்களும் வரவேற்பது உண்டு.
இப்பொழுது அழகர் போகும் போது அனைத்து மக்களும் பிரிவுத்துயர் அடைகிறார்கள். இதனால் மதுரை மக்கள் அழுதே விடுகின்றனர். மதுரையை விட்டு கள்ளழகர் போகும் போது போறார் அழகர் போறாரே போறார் என்ற வர்ணணை பாடப்படுகிறது.
கள்ளழகர் அழகர் மலையை அடைந்த உடன் அவரது பயணக் களைப்பை நீக்க உற்சவசாந்தி அபிஷேகம் நடைபெறுகிறது. திருவிழா தொடங்கியது முதல் கள்ளழகர் மீண்டும் கருவறைக்குள் செல்லும் வரை வெள்ளியங்குன்றம் ஜமின்வாரிசுகள் கள்ளழகருக்கு பாதுகாப்பாக வருகின்றனர். இத்திருவிழாவின் போது வில்லுப்பாட்டு பாடியும் மேடைகளில் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும்.
கள்ளழகர் புறப்பாடு பற்றிய ஓலைச்சுவடிகள்
திருமாலிருஞ்சோலையிலிருந்து அழகர் புறப்பட்டு மீண்டும் மலைக்கு வந்து சேரும் வரையிலான மதுரை சித்திரை திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளையும் உள்ளடக்கிய நாட்டுப்புறப் பாடல் வடிவில் அமைந்த ஓலைச்சுவடிகள் ஒன்று சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே உள்ள கண்டாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. நாராயணன் கோனார் அவர்கள் குடும்பத்தாரிடம் வழிபாட்டில் உள்ளது. இந்த ஓலைச்சுவடி 173 ஏடுகளையும், ஒவ்வொரு ஏடு பக்கத்திற்கு ஒரு பாடல் வீதம் மொத்தம் 346 பாடல்களையும், ஒவ்வொரு பாடலும் 6 வரிகளையும், ஒவ்வொரு வரியும் ஒரு செய்தியை உள்ளடக்கியும் சிறந்த ஆவணமாகத் திகழ்கிறது.
அழகர் மலை சிறப்பு
சங்கப்பாடலான பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரம், அழகர்கலம்பகம் அழகர்மலைக் குறவஞ்சி முதலான நூல்கள் அழகர் மலையின் சிறப்பை பறைசாற்றுகின்றன. இதில் ஆறு ஆழ்வார்களும் 136 பாசுரங்களில் பாடியுள்ளனர். அதே மாதிரி திருமாலின் 108 திவ்விய சேதங்களில் அழகர் கோயில் மிகுந்த சிறப்புடையதாக போற்றப்படுகிறது. மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் அழகர் மலையை சிறப்பாக காட்டியுள்ளனர் என்கிறது வரலாறு.
கள்ளழகர் வரலாறு
அந்த காலத்தில் கள்ளழகரின் திருமேனி பூமிக்குள்ளே புதைந்து கிடந்தது. அப்பொழுது வலையர் குலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது குழந்தைகளின் பசியைப் போக்க வேண்டிக் வள்ளிக் கிழங்கு தோண்டும் போது வெளிப்பட்டது என்றும், பாண்டிய மன்னன் அழகர் கோயிலை கட்டினான் என்றும் வைகுண்டவாசன் திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு நத்தம் வழியாக அழகர் மலைக்கு வந்து சேர்ந்தார் என்றும் பிறகு அங்கே இருந்து பட்டணம் உண்டாக்கி ஆட்சி செய்து குடி, வரி வசூல் செய்து அரசாண்டர் என்றும் ஏடுகள் கூறுகிறது. மேலும் கள்ளழகர் கள்ளாழ்வார் என்பவரிடம் இருந்து ஞான உபதேசம் பெற்றார் என்றும் ஓலைச்சுவடிகள் கூறுகின்றன.
வெள்ளியங்குன்றம் ஜமின்வாரிசுகள்
மன்னர் காலத்தில் அழகருக்கும் கோயிலுக்கும் பாதுகாவலாயிருந்தது, வெள்ளியங்குன்றம் ஜமீன் வகையறா ஆவார்கள். அதை நினைவுகூரும் வகையில் இன்றும் வருடந்தோறும் நடக்கின்ற உற்சவங்களில், கோயில் சார்பாக உற்வசமூர்த்தி முன்னிலையில் ஜமீனுக்குப் பரிவட்டம் கட்டி மாலையணிவித்து முதல்மரியாதை செய்யப்படுவது இன்றும் தொடர்கிறது.
கள்ளழகர் அழகர் மலைக்கு வந்ததும் அவர்கள் முன்னிலையில் உற்சவ சாந்தி பூஜை நடைபெறுகிறது. கள்ளழகரைச் சர்க்கரை தீபமேற்றி வழிபடுகின்றனர். நாட்டுச் சர்க்கரையையோ, வெல்லத்தையோ கடலைப்பருப்பு உள்ளிட்ட பொருட்களோடு கலந்து கிண்ணம் போன்று செய்து மாவிளக்கு போட்டு வழிபடுகின்றனர்.



Click it and Unblock the Notifications











