Latest Updates
-
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம்
445 நாட்கள் இருந்த வரலாற்றின் மிகவும் குழப்பமான நீண்ட வருடம் எது தெரியுமா? ஏன் இப்படி நடந்துச்சு தெரியுமா?
2025 தொடங்கி முதல் மாதம் கிட்டதட்ட முடியப்போகிறது. தினமும் காலண்டரில் மிகவும் எளிதாக கிழித்து விட்டு நாம் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். நாட்களை கணக்கிடுவது தற்போதைய உலகில் மிகவும் எளிதானதாக உள்ளது, ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சூழல் இப்படி எளிதாக இல்லை.
கிமு 1 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள், அப்போதைய காலண்டரில் கணிக்கப்பட்டிருந்த அறுவடை 'பருவம்' வரும்போது கடினமான நேரத்தை அனுபவித்தனர், ஏனெனில் அறுவடைக்கு தயாராக இருக்கும் காய்கறிகளுக்குப் பதில், அவர்கள் விதைகள் மற்றும் வேர்களை மட்டுமே பெற்றனர்.

ஆரம்பகால ரோமானிய நாட்காட்டி மிகவும் வினோதமாக இருந்ததால், வருடத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளை சரியான நேரத்தில் கொண்டாட முடியவில்லை. ஆரம்பகால ரோமானிய நாட்காட்டி சந்திர சுழற்சிகள் மற்றும் விவசாய ஆண்டின் சுழற்சிகளால் தீர்மானிக்கப்பட்டது, அதாவது10 மாதங்கள் மட்டுமே கணக்கிடப்பட்டது.
இந்த காலண்டர் மார்ச் மாதத்தில் வசந்த காலத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் 10வது மாதத்தில் முடிவடைந்தது, மொத்தம் 304 நாட்கள் மட்டுமே இருந்தது மற்றும் சுமார் 61 நாட்களை கணிக்கவில்லை.வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி ஆண்டின் இரண்டு மாதங்களுக்கு விவசாயத்தில் எந்த வேலையும் செய்யப்படாததால், அவை கணக்கிடப்படாமல் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இந்த நாட்காட்டி சூரியன் உதிப்பதையும், மறைவதையும் குறிப்பிட்டது, ஆனால் அதை அதிகாரப்பூர்வ நாளாகக் கணக்கிடவில்லை. ரோமின் இரண்டாவது மன்னர் நுமா பாம்பிலியஸ், குளிர்கால காலத்தை உள்ளடக்கிய காலண்டரில் சுமார் 51 நாட்களைச் சேர்த்தார், ஜனவரி மற்றும் பிப்ரவரி என அழைக்கப்படும் மாதங்களுடன் சேர்த்து நாட்காட்டியில் 51 நாட்களைச் சேர்த்தார். இரட்டைப்படை எண்கள் பற்றிய மூடநம்பிக்கைகள் காரணமாக, அவர் கூடுதல் நாளைச் சேர்த்து, ஆண்டை 355 நாட்களாக மாற்றினார்.
இருப்பினும், இந்த நாட்காட்டியும் விரைவில் பருவங்களுடன் ஒத்திசைவை இழந்ததாகவும், கிமு 200-களில் ரோமில் மார்ச் 14 அன்று சூரிய கிரகணம் காணப்பட்டதாகவும், ஆனால் நாட்காட்டியில் ஜூலை 11 அன்று பதிவு செய்யப்பட்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.
அதன்பின் ரோமில் பேரரசரும் பாதிரியார்களும் காலெண்டரை பருவங்களுக்கு ஏற்ப மீண்டும் சீரமைக்க முயற்சிக்க மெர்சிடோனியஸ் என்ற கூடுதல் மாதத்தைச் சேர்த்தனர், ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி, அதுவும் சரியாக வேலை செய்யவில்லை.
ஜூலியஸ் சீசர் தலைமை தாங்க வந்தபோது, பூமி அதன் அச்சில் (பகல் வாரியாக) சுழலும் மற்றும் சூரியனைச் சுற்றும் (ஆண்டு வாரியாக) சுழலும் காலண்டரை சரிசெய்யத் தொடங்கினார். இது மிகவும் கடினமான காரியமாக இருந்தது, ஆனால் இதுவும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியது, ஏனெனில் சீசர் ஒரு வானியலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் வரலாற்றில் மிக நீண்ட ஆண்டான 445 நாட்களை நமக்கு வழங்கினார்.
மெர்சிடோனியஸுடன், அவர் 33 நாட்களில் ஒன்று மற்றும் 34 நாட்களில் மற்றொன்று என இரண்டு மாதங்களைச் சேர்த்து, காலண்டரை 15 மாதங்களுடன் மிக நீண்டதாக மாற்றினார். அதுதான் கிமு 46 ஆம் ஆண்டு, அது வரலாற்றின் 'குழப்ப ஆண்டு' என்றும் அழைக்கப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, இரண்டு புதிய மாதங்கள், மெர்சிடோனியஸ் மற்றும் 'இடைக்காலரி மாதங்களை'ச் சேர்க்கும் நடைமுறை கைவிடப்பட்டு, 1582 இல் நாட்காட்டியின் தோல்விக்கு போப் கிரிகோரி பொறுப்பேற்யார், அதன்பின்தான் இன்று நாம் பயன்படுத்தும் நாட்காட்டியாக மீண்டும் சீரமைக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications
