Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
குறைபிரசவத்துல பிறந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்காம் தெரியுமா?
பொதுவாக ஒரு ஆரோக்கியமான கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள் வரை நீடிக்கும். ஆனால் பிரசவம் முன்கூட்டியே நிகழும் போது அதாவது 37 வாரத்திற்கு முன் நிகழும் போது அது முன்கூட்டிய பிறப்பு அல்லது குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பிறப்பு வழக்கமான காலவரிசையின் கீழ் வரவில்லை என்பதால், குறைமாத குழந்தைகள் பெரும்பாலும் கடுமையான உடல்நல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பிறப்பு 24 முதல் 28 வாரங்களுக்குள் நிகழும்போது ஆபத்துகளும் சிக்கல்களும் அதிகரிக்கும்.

குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் எதிகொள்ளும் சிக்கல்கள்
இந்தியாவில், கருத்தரித்த 28 வாரங்களுக்கு முன் பிறந்த குழந்தை, அவர்களின் இதயம், நுரையீரல், மூளை மற்றும் பிற உறுப்புகள் முதிர்ச்சியடையாத (முழு வளர்ச்சியடையாதது) மற்றும் கருப்பைக்கு வெளியே உள்ள வாழ்க்கையை ஆதரிக்கத் தயாராக இல்லாத கடுமையான வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிகொள்ளலாம்.
இந்த குழந்தைகள் நீண்டகால வளர்ச்சி சிக்கல்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், இறப்பு விகிதமும் அவர்களிடையே அதிகமாக உள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட குழந்தை இறப்புகளில் பெரும்பாலானவை குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைபிரசவத்திற்கான காரணங்கள்
குறைபிரசவத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய பல காரணிகள் உள்ளன. இதில் கடந்த கால மற்றும் தற்போதைய கர்ப்பப் பிரச்சினைகள், கருப்பை, கருப்பை வாய் அல்லது நஞ்சுக்கொடியில் உள்ள பிரச்சனைகள், சில நோய்த்தொற்றுகள், உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய், விபத்துகள் அல்லது அதிர்ச்சி மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்றவையாகும். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் எதிர்கொள்ளும் நீண்டகால ஆரோக்கிய பிரச்சினைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
பார்வை குறைபாடுகள்
முன்கூட்டிய பிறப்பு, விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களை பாதிக்கும் ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி (ROP) என்ற நிலைக்கு வழிவகுக்கும். இதற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தற்காலிக அல்லது நிறைந்த பார்வை இழப்பை ஏற்படுத்தும். கூடுதலாக, இந்த குழந்தைகளுக்கு விழித்திரை பற்றின்மை எனப்படும் ஒரு நிலை இருக்கலாம், இந்த நிலை விழித்திரை கண்ணின் பின்புறத்திலிருந்து பிரிந்து, மங்கலான அல்லது சிதைந்த பார்வையை ஏற்படுத்துகிறது.
செவித்திறன் குறைபாடுகள்
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வளர்ச்சியடையாத உள் காது கட்டமைப்புகள் காரணமாக செவித்திறன் இழப்பை உருவாக்கும் அதிக ஆபத்து உள்ளது. இது தாமதமான மொழி வளர்ச்சி மற்றும் தொடர்பு கொள்வதில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
சுவாச சிக்கல்கள்
குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சியடையாததால், அவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அவர்களுக்கு சுவாசிக்க உதவும் வென்டிலேட்டர்களின் பயன்பாடு தேவைப்படலாம். கூடுதலாக, குறைமாத குழந்தைகளின் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக சுவாச நோய்த்தொற்றுகள் எளிதில் பாதிக்கலாம்.
நரம்பியல் சிக்கல்கள்
குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெருமூளை வாதம் ஏற்படலாம், இது தசைக் கட்டுப்பாடு மற்றும் இயக்கத்தை பாதிக்கும். இது பிறப்பதற்கு முன், பிறக்கும் போது அல்லது சிறிது நேரத்தில் ஏற்படும் மூளை பாதிப்பால் ஏற்படுகிறது. வளர்ச்சி தாமதங்கள், கற்றல் குறைபாடுகள் மற்றும் அறிவாற்றல் இழப்புகள் ஆகியவை முதிர்ச்சியடையாத மூளை வளர்ச்சியால் குறைமாத குழந்தைகளை சந்திக்கக் கூடிய ஆபத்துக்களாகும்.
நீண்ட கால சுகாதார பிரச்சினைகள்
குறைமாத குழந்தைகளுக்கு ஆஸ்துமா, இதய நோய் மற்றும் நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்ற நாட்பட்ட ஆரோக்கிய பிரச்சினைகள் பிற்காலத்தில் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. பிறக்கும்போதே அவர்களின் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடையாததே இதற்குக் காரணம், இதனால் அவர்கள் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.



Click it and Unblock the Notifications