Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக
அந்தரங்க பகுதியில் வளரும் முடி குறித்த தேவையற்ற சில கட்டுக்கதைகள்!
அந்தரங்க பகுதியில் வளரும் முடி குறித்த சில கட்டுக்கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுக்கதைகளுள் பல நாம் நம்ப முடியாதவாறு இருக்கும்.
உலகில் பல கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நாம் அதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பொறுத்தது. இந்த கட்டுரையில் அந்தரங்க பகுதியில் வளரும் முடி குறித்த சில கட்டுக்கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுக்கதைகளுள் பல நாம் நம்ப முடியாதவாறு இருக்கும்.

ஆனால் அதே சமயம் அதன் பின்னணியில் உள்ள உண்மையைக் குறித்து முழுமையாக தெரியாமல், இன்றும் பலர் கண்மூடித்தனமாக நம்பி பின்பற்றியும் வருகின்றனர். அந்தரங்க பகுதியில் வளரும் முடி குறிப்பிட்ட தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதோடு மட்டுன்றி, குஷனிங்கையும் வழங்குகின்றன. இக்கட்டுரையில் அந்தரங்க முடி குறித்த தேவையற்ற கட்டுக்கதைகளும், உண்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கட்டுக்கதை #1: பாலியல் நோய்களைத் தடுக்கும்
உண்மை : உண்மையை சொல்ல வேண்டுமானால், முற்றிலும் எதிர்மறையானது. அந்தரங்க பகுதியில் வளரும் முடியில் பாக்டீரியாக்கள் அதிகம் பெருக்கமடையும். அப்பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் பாக்டீரியாக்கள் அதிகம் அவ்விடத்தில் வளர்ச்சி பெறும். ஆய்வாளர்களும், அந்தரங்க பகுதியில் உள்ள முடியில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருப்பதை நிரூபித்துள்ளனர்.

கட்டுக்கதை #2 : பாலியல் வாழ்க்கையைப் பாழாக்கும்
உண்மை : பலர் அந்தரங்க பகுதியில் வளரும் முடி போர்வைக்குள் இருவருக்கும் உள்ள உராய்வைக் குறைப்பதாக நினைக்கின்றனர். இருப்பினும், அந்தரங்க பகுதியில் வளரும் முடியை அவ்வப்போது ஷேவ் செய்ய வேண்டியது முக்கியம். அதே சமயம் இது ஒவ்வொருவரைப் பொறுத்தது மற்றும் தொடர்பு கொள்ளும் விதத்தைப் பொறுத்தது. எனவே அந்தரங்க பகுதியில் வளரும் முடிக்கும், பாலியல் வாழ்க்கை பாழாவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

கட்டுக்கதை #3: அந்தரங் முடியின் நிறம் மற்றும் தலையில் உள்ள முடியின் நிறமும் ஒன்றே!
உண்மை : இது உண்மையல்ல! உங்களுக்கு அந்தரங்க முடியின் சரியான நிறத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால், புருவத்தின் நிறத்தைப் பாருங்கள். இது தான் ஒன்று போல் இருக்கும். நிறம் மட்டுமின்றி, அந்தரங்க முடியின் அடர்த்தியும் புருவத்தின் அடர்த்தியும் ஒன்றாக இருக்கும்.

கட்டுக்கதை #4: நல்ல அடர்த்தியான முடி கவர்ச்சிகரமாக இருக்காது
உண்மை : இது முற்றிலும் ஒருவரது விருப்பத்தைப் பொறுத்தது. அந்தரங்க பகுதியில் உள்ள முடி அடர்த்தியானதாக இருப்பது கவர்ச்சிகரமானதாகவோ அல்லது சுகாதாரமானதாகவோ இல்லாவிட்டாலும், இது ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்து வேறுபடும். எனவே நீங்களே அதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

கட்டுக்கதை #5: அந்தரங்க முடி எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும்
உண்மை : அந்தரங்க முடியைப் பற்றி சுவாரஸ்யமானது என்றால், அப்பகுதியில் வளரும் முடி குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே வளர்ச்சி பெறும். எப்போது எல்லையை எட்டியதோ, அதாவது 0.5 முதல் 2 இன்ச் வரை வளர்ச்சி பெற்ற பின், அது தானாக உதிர்ந்து, உதிர்ந்த இடத்தில் ஒரு புதிய முடி வளர ஆரம்பிக்கும்.

கட்டுக்கதை #6: சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் அந்தரங்க பகுதியில் ஷேவ் செய்ய வேண்டாம்
உண்மை: அந்தரங்க பகுதியில் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருந்தாலும், பொறுத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் ஷேவிங்கிற்கு பதிலாக வேக்சிங் அல்லது லேசர் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இன்னும் சிறப்பான வழியென்றால், சரும நிபுணரை சந்திப்பது தான்.

கட்டுக்கதை #7: அந்தரங்க முடி இல்லாததே தூய்மையானது
உண்மை : முடி இல்லாத யோனி தான் ஆரோக்கியமானது அல்லது தூய்மையானது என்பதை நிரூபிக்கும் உண்மையான அறிவியல் ஆதாரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

கட்டுக்கதை #8: அந்தரங்க பகுதியில் முடி இருப்பது ஆண்களுக்கு பிடிக்காது.
உண்மை : பெரும்பாலான ஆண்களுக்கு உண்மையில் அந்தரங்க பகுதியில் முடி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களுக்கு பிடிக்கும். எனவே அந்தரங்க பகுதியில் முடி இருந்து, உங்களுக்கு அதை நீக்க விருப்பம் இல்லாவிட்டால், துணைக்கு பிடிக்காதோ என்று கவலை ஏதும் கொள்ளாதீர்கள்.

கட்டுக்கதை #9: அந்தரங்க பகுதியில் உள்ள முடியை ஷேவ் செய்தால் புதர் போன்று வளரும்.
உண்மை : அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவிங் செய்வதால், அங்கு வளரும் முடியை விட்டம் முழுவதும் நேரடியாக வெட்டுவதால், அது வளரும் போது தடிமனாகத் தோன்றுகிறது. இதுவே முடி அடர்த்தியாக இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுகிறதே தவிர, ஷேவிங் செய்வதால் முடி அடர்த்தியாக வளர்வதில்லை.



Click it and Unblock the Notifications