Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்த புத்தாண்டுல புதுமாதிரியா வாழ்த்து சொல்லனுமா? அப்ப இத படிங்க…!
உற்சாகமாக புத்தாண்டைத் தொடங்க உதவும் சில உற்சாகமான மேற்கோள்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள இது சரியான நேரம்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. புத்தாண்டை எப்படி சிறப்பாகக் கொண்டாடலாம் என்று பலர் யோசனை செய்து வைத்திருப்பீர்கள். சிலர் இன்னும் யோசனை செய்து கொண்டே இருப்பீர்கள். எப்படி கொண்டாடலாம் என்று யோசிப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் வாழ்த்துக்களை எப்படி சொல்வது என்றும் பலர் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

நமது உணர்ச்சி ரீதியான இணைப்பும் உணர்வும் ஒவ்வொரு நபரை பொருத்து வேறுபடுகின்றன. உங்கள் நண்பருக்கு நீங்கள் அனுப்பும் செய்தி உங்கள் துணைக்கு அனுப்ப விரும்பும் சரியான செய்தியாக இருக்காது. புத்தாண்டு தொடங்கும்போது, நம் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் அனுப்பிய சில மறக்கமுடியாத வாழ்த்துக்களைப் படிப்பதே மகிழ்ச்சியளிக்கும். இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை துணை, காதலர்கள், பெற்றோர், நண்பர்கள், சகோதரர்கள், மற்றும் உறவுகளுக்கு அன்புடன் புதிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

டெக்னாலஜி வாழ்த்துக்கள்
தற்போது உள்ள பரபரப்பான காலகட்டத்தில், மக்களைச் சந்திக்கவும் நேரில் வாழ்த்து சொல்லுவதற்கும் நேரம் கிடைப்பதில்லை. முன்பு தாபால் மூலம் வாழ்த்து அட்டைகளை அனுப்புவோம். ஆனால் தற்போதுள்ள தொழில்நுட்ப காலத்தில், உங்கள் சொந்தங்கள் எத்தனை மைல்கள் தொலைவிலிருந்தாலும், அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பலாம். ஏனென்றால், அனைவர்களின் கைகளையும் ஆக்கிரமித்திருக்கிறது ஸ்மார்ட் போன். ஆனால் எல்லா மக்களுக்கும் ஒரே செய்தியை அனுப்ப முடியாது , இல்லையா?

புதிய வாழ்த்துக்கள்
உற்சாகமாக புத்தாண்டைத் தொடங்க உதவும் சில உற்சாகமான மேற்கோள்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள இது சரியான நேரம். இருப்பினும், இணையத்தில் மில்லியன் கணக்கான செய்திகள் இருக்கும், சரியான நபருக்கான சரியான செய்தியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான பணியாகும். ஆனால் நீங்கள் இதற்கு வருத்தப்பட வேண்டாம், புத்தாண்டில் நீங்கள் விரும்பும் சில தனிப்பட்ட மேற்கோள்களையும் செய்திகளையும் இங்கே கொடுத்துள்ளோம்.

சந்தோஷம் ஒளிரும்
2019ஆம் ஆண்டு முடிவடைந்துவிட்டதால், அனைத்து எதிர்மறை எண்ணங்களும் சிரமங்களும் இந்த ஆண்டுடன் முடிவடையும். உங்களுக்கான வெற்றிகளும் விரும்பிய முடிவுகளும் இந்த புத்தாண்டில் கிடைக்க விரும்புகிறேன்."
புதிய ஆண்டு அனைத்து மகிழ்ச்சியையும் நற்செய்தியையும் உங்களுக்கு புதுப்பிக்கையில், உங்கள் இதயத்தில் என்றென்றும் சந்தோஷம் ஒளிரும் என்று நம்புகிறேன்...புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

நண்பர்கள்
"உங்களைப் போன்ற நண்பர்கள் எனக்கு இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆரம்பம். நமது நட்புக்கு சியர்ஸ்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!"
"புதிய ஆண்டு பிரகாசமாகவும் நம்பிக்கை நிறைந்ததாகவும் இருக்கட்டும். இதனால் இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி இருக்கும். புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

புதிய மனிதர்
"இது புத்தாண்டு மற்றும் உங்கள் வாழ்க்கை அகராதியைப் புதுப்பிக்க சிறந்த நேரம். பொறாமை, வெறுப்பு, பழிவாங்குதல், பேராசை போன்ற எண்ணங்களை உங்கள் மனதிலிருந்து நீக்கி, அன்பு, கவனிப்பு, இரக்கம், நேர்மை மற்றும் திருப்தி போன்றவற்றை மனதில் வைக்கவும். இந்த புதிய ஆண்டில் இது உங்களை புது மனிதராக மாற்றும். புத்தாண்டு வாழ்த்துக்கள்."

வாழ்த்துக்கள் அன்பே...
"உயிர்வாழ்வதற்கு எனக்குப் பல விஷயங்கள் தேவை. அவற்றில் சில உணவு, காற்று மற்றும் நீர். ஆனால் நான் வாழ்வதற்கு, எனக்கு நீங்கள் தேவை. ஏனென்றால் நீங்கள் என் ஆத்மார்த்தம் மட்டுமல்ல, இந்த உலகத்தை எதிர்கொள்ள என் பலமும் நீங்கள்தான். புத்தாண்டு வாழ்த்துக்கள் என் அன்பே. 2020 நம் வாழ்வின் சிறந்த ஆண்டாக இருக்கட்டும்."

மகிழ்ச்சியாக இருங்கள்
"ஒவ்வொரு முறையும் நீங்கள் சிரிப்பதை பார்க்கும்போது, என் இதயம் ஒரு துடிப்பை இழக்கிறது. இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும், உங்கள் அழகான புன்னகை என் நாளை பிரகாசமாக்கும் வகையில் 2020 உங்களுக்கு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

உங்களுடன் இருக்க வேண்டும்
"நான் உன்னைச் சந்திப்பதற்கு முன்பு, நான் என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், என் கண்கள் உன்னை சந்தித்த தருணம், நான் ஆயிரம் முறை இறந்தேன். ஒவ்வொரு முறையும் நான் மறுபிறவி எடுக்கும்போது, என் கைகளை உங்கள் கைகளில் மூடிக்கொண்டேன். இந்த புத்தாண்டில் மென்மையான அன்பை உருவாக்க விரும்புகிறேன். உங்கள் கைகளில் இருக்கும் 2020 ஐ வரவேற்கிறேன். நான் உங்களுடன் இருக்கும்போதுதான் இந்த புத்தாண்டு சிறப்பாகிறது. "



Click it and Unblock the Notifications











