Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க
அரச குடும்பத்தில் மருமகளாக வாக்குப்பட்ட நடிகைகள்!
சிலர் பிறந்த வீட்டில் இளவரசி போல இருந்தேன், வாக்குப்பட்ட இடத்தில் கொடுமை அனுபவிக்கிறேன் என்பார்கள். சிலர் பிறந்த வீட்டில் சுகத்தை அனுபவிக்காவிட்டாலும் புகுந்த வீட்டில் மகாராணி போல பார்த்துக் கொள்கின்றனர் என்று பெருமிதமாக கூறுவார்கள்.
ஆனால், நிஜமாகவே இளவரசியாக, மகாராணியாக வாழும் பாக்கியம் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அதிலும், இந்த அற்புதமான வாய்ப்பு திரை பிரபலங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்.
இதோ! அப்படி ஒரு அற்புத வாய்ப்பு பெற்று அரச குடும்பத்தில் வாக்குப்பட்ட பிரபலங்களை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

ஷர்மிலா தாகூர்!
ஷர்மிலா தாகூர் இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம பூஷன் விருது பெற்றவர் ஆவார். மேலும், இவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். பாலிவுட்டில் நுழைவதற்கு முன் பெங்காலியில் கால் பதிதத்தவர். ஆராதனா, காஷ்மீர் கி காளி, மௌஸம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்தன.

நவாப்!
ஷர்மிலா தாகூர் நவாப் ஆப் பட்டோடி மன்சூர் அலி கானை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் 1969ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. மன்சூர் அலிகான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு மதம் மாறிய ஷர்மிலா தனது பெயரையும் ஆயிஷா பேகம் என்று மாற்றிக் கொண்டார்.

கரீனா கபூர் கான்!
ரெஃபியூஜ் என்ற படத்தின் மூலம் 2000ம் ஆண்டு இந்தி திரைப்பட உலகில் அறிமுகம் ஆனவர் கரீனா கபூர் கான். இவர் இந்தியின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவரது சகோதரியும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான். கபி குஷி கபி காம், குஷி, ஜப் வீ மெட் , 3 இடியட்ஸ், பஜ்ரங்கி பைஜான், ரா 1 போன்றவை இவர் நடித்ததில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

சயீப் அலி கான்!
கடந்த 2012ம் ஆண்டு கரீனா கபூர் கான், சயீப் அலி கானை திருமணம் செய்துக் கொண்டார். சயீப் அலி கான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று, கரீனாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தை மன்சூர் அலி கான் பட்டோடி மறைவிற்கு பிறகு, நவாப் ஆப் பட்டோடியாக முடிசூடிக் கொண்டவர் சயீப் அலி கான் என்பது குறிப்பிடத்தக்கது.

குணால் கீமூ!
குணால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சார், ராஜா இந்துஸ்தானி, ஹம் ஹேன் ரஹி பியார் கே போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி நடித்திருந்தார். மேலும், இவர் டிராபிக் சிக்னல், கோல்மால் 3, கோ கோவா கான், கோல்மால் எகைன் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

சோஹா அலி கான்!
கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நவாப் ஆவ் பட்டோடி சயீப் அலி கானின் சகோதரியான சோஹா அலி கானை குணால் திருமணம் செய்துக் கொண்டார். இதன் மூலம் அரச குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துக் கொண்ட பிரபலம் என்ற பட்டியலில் இணைந்தார் குணால்.

மேகன்!
மேகனை அறியாதவர்கள் யாருமில்லை. கடந்த ஒருவருட காலமாக சர்வதேச நாளேடுகளில் அதிகமாக பேசப்பட்ட பெயர் மேகன். அமெரிக்காவை சேர்ந்த நடிகையான இவர் இங்கிலாந்து இளவரசரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து, திருமணம் நடந்து இவர் இப்போது கர்ப்பமாக இருப்பது வரை அன்றாடம் இவர் உடுத்தும் உடை முதற்கொண்டு அனைத்தும் சர்வதேச ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்று வருகின்றன.

இளவரசர் ஹாரிஸ்!
கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் இளவரசர் ஹாரிஸை திருமணம் செய்துக் கொண்டார் மேகன். இவர் இப்பொது டியூக் ஆப் சஸ்ஸாக்ஸாக பொறுப்பு வகிக்கிறார். இவர் சூட்ஸ் என்ற தொடரில் ராச்சேல் ஜேன் என்ற பாத்திரத்தில் இவர் நடித்ததன் மூலம் இவர் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்தார்.

கிரேஸ் கெல்லி!
கெல்லி ஆஸ்கார் விருது வென்ற நடிகை ஆவார். குறுகிய காலம் ஹாலிவுட்டில் காலூன்றி இருந்தாலும், வெற்றிகரமான நடிகையாக வலம்வந்தவர் கிரேஸ் கெல்லி. இவர் நடித்த தி கண்ட்ரி கேர்ள், டயல் எம் ஃபார் மர்டர், ரியர் விண்டோ போன்ற படங்கள் பெரும் வெற்றிபெற்றன.

மொனாக்கோ இளவரசர்!
1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கெல்லி, மொனாக்கோவின் மூன்றாம் ரைனர் இளவரசரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு ராயல் குடும்பத்திற்கு ஏற்ப எப்படி இருக்க வேண்டுமோ அப்படி கனகச்சிதமாக தன்னை மாற்றி கொண்டார் கிரேஸ் கெல்லி. இவரை மக்களும் மிகவும் விரும்பினர். 1982ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி கெல்லி மரணம் அடைந்தார்.

ரீட்டா ஹேவர்த் !
1940களில் கவர்ச்சி கன்னியாக ஹாலிவுட்டில் வலம்வந்தவர் ரீட்டா. இவரை காதலின் கடவுளாக ரசிகர்கள் போற்றினர். கவர் கேர்ள், கில்டா, தி லேடி ஃபிரம் ஷாங்காய் போன்ற படங்கள் இவரது திறமைக்கு விருந்தாக அமைந்தன.

அலி கான்!
1949ம் ஆண்டு மே மாதம் ரீட்டா இளவரசர் அலி கானை திருமணம் செய்துக் கொண்டார். அலி கான் சுல்தான் முகமது ஷா, மூன்றாம் அகா கானின் மகனாவார். ஆனால், இவர்களது திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இவர்கள் திருமணமான நான்கே ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்டனர்.



Click it and Unblock the Notifications











