Latest Updates
-
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
கரப்பான்பூச்சிகள் வாழ தன் காதையே கொடுத்த இளைஞன்... அப்புறம் என்னாச்சு தெரியுமா?
காதுவலி என மருத்துவமனைக்கு சென்ற மனிதனின் காதுக்குள் 26 கரப்பான்பூச்சிகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த சுவாரஸ்யமான பரிதாபக் கதையைப் பற்றி தான் இங்கே பார்க்கவிருக்கிறோம்.
பொதுவாக நம் ஊர்களில் எல்லாம் 19 வயது இளைஞராக இருநு்தால் ராத்திரியில் என்ன செய்வார்கள். நன்றாக கட்டிலில் படுத்து தனக்கு பிடித்த ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டு, மகேந்திர சிங் தோனியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு, என இனபக் கனவுகளில் மிதந்திருப்பார்கள். ஆனால் ஒரு வித்தியாசமான மனிதன் தன் காதுக்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

19 வயது இளைஞன்
தென் சீனாவின் உள்ள குவாங்டாங் மாகாணத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற டான்குவான் நகரைச் சேர்ந்தவர் தான் லீ. இவருக்கு 19 வயது. இந்த 19 வயதில் இளைஞர் சுகமாக தூங்கியிருந்தால் அவர் வயசுக்கு பல இன்பக்கனவுகள் வந்திருக்கும். ஆனால் காதுக்குள் இருந்து 26 கரப்பான் பூச்சிகள் வரும் என்று அவரே கனவு கண்டிருக்க வாய்ப்பு இல்லை.

மருத்துவப் பரிசோதனை
இரவு முழுக்க நடந்து கொண்டே இருந்த லீ காலையில் விடிந்ததும் முதல் வேளையாக காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு லீயின் காதை பரிசோதித்துப் பார்த்த மருத்துவருக்குப் பேரதிர்ச்சி. லீயுின் காதுகளுக்குள் ஒரு பெரிய கரப்பான்பூச்சியும் அதன் 25 குட்டிகளும் சேர்ந்து கூடுகட்டி குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன.இதைக்கேட்டதும் லீ பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். இதுவரையிலும் இப்படி ஒரு விஷயம் நம் காதுகளுக்குள் நடந்துகொண்டிருப்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவே இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

காதுவலி
தன் காதுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், சாதாரணமாக எல்லா நாட்களையும் கடந்து போகிற லீ ஒரு நாள் இரவு தன்னுடைய வீட்டில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நடு இரவில் அவருக்கு தூக்கம் வரவில்லை. எழுந்து சிறிது நேரம் வீட்டுக்குள்ளுயே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். திரும்பவும் சென்று படுக்க முயற்சி செய்தால், தூக்கம் வரவில்லை. அப்படி வழக்கத்துக்கு மாறாக அவருக்கு எனன்தான் ஆயிற்று. வேறு ஒன்றுமில்லை, திடீர் காதுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். எப்படியும் இப்போது ஒன்றுமே செய்ய இயலாது. காலையில் தான் மருத்துவரை சந்திக்க முடியும்.

ஆராய்ச்சி
சில வாரங்களுக்கு முன்பே அந்த பெண் கரப்பான்பூச்சி லீயின் காதுக்குள் சென்று முட்டை பொறித்திருக்க வேண்டும் என்பதை சொன்ன போது லீ மயங்கி விழாத குறை தான். ஆனால் கரப்பான் பூச்சிகள் அதிகபட்சமாக 40 முட்டைகளிட்டு குஞ்சு பொறிக்க கூடியவை, அந்த குஞ்சுகள் வளர சுமார் 3 முதல் 4 மாதங்கள் கூட ஆகலாம்.

0.3 அங்குல கரப்பான்பூச்சி
சாங்ஸ் சோபியன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் யாங் சிங் லீ யின் காதில் ஏதோ பூச்சியை போன்ற ஒரு உருவம் அடைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து அவர் காதை ஆராய்ந்த போது தான் அதில் ஒரு பெரிய பெண் கரப்பான் பூச்சி சுமார் 0.3 அங்குல நீளத்தில் குடியிருப்பதை கவனித்தார். அதோடு அவர் தேடல் முடியவில்லை, மேலும் காதில் தீவிரமாக தேடிய போது 25 குட்டி கரப்பான் பூச்சிகளும் உள்ளே இருப்பதை கண்டுபிடித்தார்.

கரப்பான்பூச்சிக்கு காது
நல்லவேளை லீ அதற்கு முன்பாகவே காது வலி புண்ணியத்தில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்து விட்டதால் கரப்பான் பூச்சியை காட்டிக் கொடுத்து தன் காதை காப்பாற்றிக் கொண்டார். ஆனாலும் நம்மூரில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் கரப்பான்பூச்சிக்கு காது கொடுத்த சீனாவின் லீயும் இப்போது அங்கே பிரபலம் தான்.



Click it and Unblock the Notifications