For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் மகனை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறேன் - ஒரு தந்தையின் குமுறல்... நீங்களும் உதவலாமே

இந்த வேதனை ஒரு எட்டு மாத காலமாக இருந்து வருகிறது. என் இரண்டே இரண்டு வயதே ஆன ரித்திக் எல்லா நாள் முழுவதும் பகலிலும் இரவிலும் மாறி மாறி வேதனையால் துடித்து வருகிறான்.

By Suganthi
|

அன்கூர் தன் தினசரி வருமானத்தை கொண்டு தன் மகனின் இதய அறுவை சிகிச்சைக்கு போராடும் அவருக்கு உதவி செய்வோம்.

நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து விட்டோம். கடவுளிடம் தினமும் மன்றாடி விட்டோம். இவர்கள் யாரும் என் குழந்தையை காப்பாற்ற போவதில்லை. வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு என் மகனின் உயிரை துளியளவு கூட காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து உங்களிடம் வந்துள்ளேன்.

இதய நோயாளிக்கு உதவி,

இந்த வேதனை ஒரு எட்டு மாத காலமாக இருந்து வருகிறது. என் இரண்டே இரண்டு வயதே ஆன ரித்திக் எல்லா நாள் முழுவதும் பகலிலும் இரவிலும் மாறி மாறி வேதனையால் துடித்து வருகிறான். அவன் உடலும் கண்களும் சோர்ந்து போய் கன்னங்கள் எல்லாம் வீங்கி வேதனையால் துடிதுடிக்கும் அந்த சின்னக் குழந்தையை பார்க்கும் பொழுது ஒவ்வொரு நாளும் எனக்கு ரணமாக கழிகின்றன.

அன்கூர் தன் மகன் ரித்திக் இடைவிடாமல் அழுவதை கண்டு எல்லா மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார். லுதியானா மற்றும் டெல்லியில் உள்ள எல்லா மருத்துவமனைகளும் ரித்திக்கு பெரிய பிரச்சினை இல்லை என்றே கூறியது.

இன்னமும் காரணம் தெரியாமல் தவிக்கின்ற சமயத்தில் இறுதியாக டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் ரித்திக் அனுமதிக்கப்பட்டான். ரித்திக்கின் இதயம் சுத்தமான இரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு பம்ப் செய்ய முடியாமல் இதயம் பலவீனமாகி வருவது அப்பொழுது தான் தெரிய வந்துள்ளது.

அவன் உயிரை உடனே காப்பாற்ற நமக்கு இருக்கும் ஒரே வழி அவனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வது என்று அங்கிருக்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

"ஒரு ஆரோக்கியமான இரண்டு வயது குழந்தையின் சராசரி எடை 10 கிலோ கிராம் இருக்க வேண்டும். ஆனால் ரித்திக்கின் எடை வெறும் 6 கிலோ கிராம் தான் உள்ளது. அவனது இதய பலவீனத்துடன் அவனது உடல் பலவீனமும் மிகவும் மோசமாகி வருகிறது."

இந்த கடினமான இதய அறுவை சிகிச்சையை முதலில் மேற்கொள்ள அன்குர் தன் குழந்தைக்கு முதலில் போதிய ஊட்டச்சத்துக்களையும் மருந்துகளையும் வழங்க வேண்டும். ஆனால் அன்கூரின் தினசரி ஏழை வருமானத்தை கொண்டு அது சாத்தியமில்லை. தன் மகனின் இதய அறுவை சிகிச்சையும் சேர்த்து அன்கூருக்கு 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.

அன்கூர் பஞ்சாப்பில் சமையல் எரிவாயு சரி செய்யும் அன்றாட பணியில் ஈடுபட்டு வருபவர். அவரது வருமானம் ஒரு நிலையான வருமானம் கூட கிடையாது. தன் தினசரி வருமானத்தையும் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி மூலம் ரித்திக்கின் உயிரை இவ்வளவு காலம் காத்து வந்துள்ளார். ஆனால் அவனின் வாழ்க்கையை முழுமையாக மீட்டெடுத்து ரித்திக்கின் கையில் கொடுக்க அன்கூர் தற்போது போராடி வருகிறார்.

"நான் வாழ்வதே என் குழந்தைக்காகவும் என் மனைவிக்காகவும் தான். என் உலகத்தில் என் செல்லக் குழந்தையை இழக்க நேரிட்டால் அது போல் நான் என் வாழ்க்கையில் அனுபவிக்க போகும் துன்பம் வேறு ஒன்றுமில்லை. அவனை இந்த நிலையில் பார்க்கும் போதெல்லாம் என் கண்கள் கலங்குகின்றன. அவனது வேதனையை எனக்கு ஆண்டவன் கொடுத்திருக்கலாம் அல்லவா என்று ஒவ்வொரு நாளும் ஒரு தந்தையாக நான் புலம்பாத நாளில்லை. ஒரு தந்தையாக என் மகனின் உயிரை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறேன் ".

உங்களின் ஒரு சிறிய உதவி அவர் மகனின் ஒரு வேளை மருந்துக்காகவோ அல்லது ஒரு வேளை உணவிற்காகவோ கூட இருக்கலாம். அல்லது உங்கள் ஒட்டுமொத்த உதவிகளும் இணைந்து அவர் மகனின் இதய அறுவை சிகிச்சைக்கு கூட உதவியாக அமையலாம். அவருக்கு எந்த காப்பீடு வசதிகளும் இல்லை. உங்களின் ஒரு உதவி மட்டுமே இப்பொழுது அவரது வாழ்க்கையை வெளிச்சமா் உதவும் ஒரு சிறிய விடியல்.

உங்கள் உதவி கரத்தை நீட்டுவதோடு மறக்காமல் உங்கள் முகநூல் நண்பர்கள் மற்றும் வாட்ஸ் ஆப் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து கொண்டு அன்கூருக்கு ஒரு சிறிய உதவியை முன்னெடுத்து வையுங்கள்.

Read more about: donation child
English summary

Save The Little Kid With Your Donation!

It's been eight months. In the life of two-year-old Kritik, it feels like forever. It's the only life he knows; one where he cries all day and night, unable to express his discomfort and pain in any other way. His skin and eyes are dull and his cheeks are hollow. The little child lost his youth-like chubbiness months ago.Your help is the only way he can save his son.
Story first published: Wednesday, May 23, 2018, 17:47 [IST]
Desktop Bottom Promotion