Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
நடிகை டாப்ஸி கடந்து வந்த கடுமையான தருணங்கள் - நான் கடந்து வந்த பாதை #9
தனது திரைப் பயணத்தில் தான் கடந்து வந்த கடுமையான தருணங்கள் பற்றி நடிகை டாப்ஸி பகிர்ந்த கொண்டவை.
பட்டர்ப்ளை மிக்ஸி விளம்பரத்தில் இருந்து இரசிகர்களின் மனதை அரைக்க துவங்கியவர் ஆடுகளம் படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தார். முதல் படம் தேசிய அளவில் பெயர் வாங்கினாலும். அதன் பிறகு தனது துறையில் சாதிக்க டாப்ஸி மிகவும் போராடினார்.
அனைத்தையும் கடந்து பிங்க் படத்தின் மூலமாக தனது பெயரையும், திறமையையும் நிலைநாட்டியுள்ள டாப்ஸி, இடைப்பட்ட காலத்தில் தான் கடந்து வந்த கடுமையான தருணங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்...

மாடலிங்!
"நான் கல்லூரி படிக்கும் போது, கூடுதல் செலவு மற்றும் பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்ய துவங்கினேன். நான் எனது CAT தேர்வில் 88% தேர்ச்சி பெற்றேன்.

நடிப்பு!
எம்.பி.எ படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது தானாக அமைந்த வாய்ப்பு தான். முதலில் நடித்த படம் நன்கு ஓடினாலும். அதன் பின் தொடர்ந்து நடித்த ஒருசில படங்கள் சரியாக ஓடவில்லை.

முத்திரை குத்திய சினிமா!
படம் சரியாக ஓடவில்லை என்றதும், என் கால்பட்ட இடம் விளங்கவில்லை. நான் ராசி இல்லாதவள் என கிசுகிசு பரவின. நான் நடித்த அந்த படங்களில் நடித்தவர்கள், இயக்கியவர்கள் என அனைவரும் பிரபலமானவர்கள். ஆனால், அவப்பெயர் மட்டும் எனக்கு.

சம்பளம் குறைந்தது...
அதன் பிறகு எனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள கூறினர், கடைசி நிமிடத்தில் படங்களில் இருந்து வெளியேற்றப்பட்டேன்,, தயாரிப்பாளர் பண கஷ்டத்தில் இருக்கிறார் என பல காரணங்கள் கூறப்பட்டன.

பிங்க்
பிங்க் படத்தில் என்னை நிரூபிக்கும் முன் வரை இது தான் நான் கடந்து வந்த நிலை. பின்க் படத்தில் நான் நிரூபித்த பிறகும் கூட, சில களங்கம் ஒட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றுடன் நான் போராடிக் கொண்டு தான் இருக்கிறேன்.

நடிகர்கள் மறுப்பு!
நான் முதல் தர நடிகைகளின் வரிசையில் இல்லை என்பதால் சில நடிகர்கள் என்ன ஒதுக்கினர். என்னை புக் செய்த தயாரிப்பாளர்களும் கூட கடைசி நேரத்தில் ஏதோ ஒரு காரணம் கூறி படத்தில் இருந்து வெளியேற்றினர். ஏனெனில், அவர்களுக்கு பெரிய பெயர் கிடைத்துவிட்டது என அறிந்தேன்.

சண்டை போட வேண்டும்!
கேட்ட சம்பளம் என்றில்லை, குறைந்த பட்ச சம்பளத்தை கூட போராடி தான் வாங்க வேண்டும். நான் இதை குற்றச்சாட்டாக கூறவில்லை. எனக்கு நடிப்பு பிடிக்கும். அதற்காக கூறுகிறேன்.

நான் கிளாமராக இல்லை...
நான் கிளாமராக இல்லை, சரியான உடல்வாகு கொண்டிருக்கவில்லை... ஆனால் நான் அறிந்த கலை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நானே அனுதாபம் தேடிக் கொள்ள விரும்பவில்லை.

சீண்டிய நபர்!
டெல்லியில் சமீபத்தில் ஒரு நபர் கூட்டத்தின் நடுவே ஒரு நபர் பின்னாடி இருந்து என்னை தீ(சீ)ண்டினார். அதற்கு நான் கத்தி கூச்சலிட்டிருந்தால் செய்தியாக வந்திருக்கும். ஆனால், நான் அந்த நபர் முழு வலியை உணரும் வகையில் விரலை பிடித்து முறித்தேன்.

ஹீரோ!
நான் சிறியளவிலான நடிகை அல்ல, பெரிய ஹீரோ. இது சிலருக்கு கசப்பாக இருக்கலாம். நான் எங்கும் போக போவதில்லை.



Click it and Unblock the Notifications
