Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் ஒழுக்கமற்றவர்களா? பிரபல நடிகை ஆவேசம்!
ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் பெண்கள் உடலுறவு பற்றி தைரியமாக பேச வேண்டும் என கூறியுள்ளார்.
ஹாலிவுட் திரைபடங்களில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து பெரிய பெண் அதிரடி ஹீரோயினாக உருவெடுத்து வலம்வந்து கொண்டிருக்கிறார்.
அழகு, திறமை இரண்டும் சரிவிகிதம் கொண்டுள்ள இவர் பெண்கள் செக்ஸ் பற்றி அச்சம் இன்றி பேச வேண்டும் என்றும், ஆண், பெண் சமநிலை அனைத்திலும் அவசியம் என்றும் சமீபத்தில் கருத்து தெரிவிததுள்ளார்...

பேட்டி!
ஸ்கார்லெட் ஜோஹன்சன் சமீபத்தில் காஸ்மோபாலிட்டன் இதழுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் உடலுறவு பற்றி தைரியமாக பேச வேண்டும். இந்த சமூகம் பெண்கள் உடலுறவு பற்றி பேசினால் மட்டும் அவர்களை ஒழுக்கம் அற்றவர்களாக பார்க்கின்றனர் என கூறியுள்ளார்.

பைத்தியம்!
பெண் ஒரு உடலுறவு பற்றி பேசினால் இந்த சமூகம் அவரை பைத்தியம், புத்திக் கேட்டவள், ஒழுக்கம் அற்றவள் என வரையறை செய்துவிடுகிறது.

தகாத வார்த்தைகள்!
ஆண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அது சாதாரண பேச்சு, அத்தியாவசியம். இதுவே ஒரு பெண் செக்ஸ் பற்றி பேசினால் அவளை தவறான வார்த்தை பயன்படுத்தி தகாத வார்த்தைகளில் வசைப்பாட துவங்கிவிடுகிறது இந்த சமூகம்.

உலகெங்கிலும்!
நமது ஊர்களிலும் மட்டும் தான் இப்படி என்று பார்த்தல். உலகில் எல்லா நாடுகளிலும் ஆண், பெண் பாகுபாடு ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.
சமூகத்தில் முதலில் ஆண், பெண் சமநிலை பிறக்க வேண்டும். அப்போது தான் இந்த வேறுபாடுகள் மறையும்.

தைரியம்!
ஸ்கார்லெட் ஜோஹன்சன் பெண்கள் செக்ஸ் பற்றி வெளிப்படையாக தைரியமாக பேச வேண்டும். செக்ஸ் என்பது இயற்கை, இயல்பான விஷயம் அதை பற்றி பேச பெண்கள் எப்போதும் அச்சப்படக் கூடாது. மேலும், ஆண், பெண் சமநிலை மிகவும் அவசியம், இந்நிலை கொண்டுவர வேண்டும் என்றும் பேசியுள்ளார்.



Click it and Unblock the Notifications
