For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூ.10, ரூ.20-க்கும் விற்கப்படும் கற்பழிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் - அதிர்ச்சி!

சமீப காலமாக... இந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப்பட்ட வீடியோக்கள் ரூ.20, ரூ.30க்கும் மிக எளிதாக விற்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

|

கடந்த மே, 2017ல் சுப்ரீம்கோர்ட் நிர்பயா கூட்டு கற்பழிப்பு வழக்கில் தீர்பளித்தது. 2012ல் நடந்த குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் கழித்தாவது தீர்ப்பு கிடைத்ததே என நாடே கொண்டாடியது. ஆனால், இந்த தீர்ப்பின் காரணத்தால் இந்தியாவில் கற்பழிப்புகள் குறைந்துவிட்டனவா?

இல்லவே இல்லை! ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருப்பார்கள் என்பது போல. பெண்கள் இருக்கும் வரை கற்பழிப்போர் இருப்பார்கள் என்ற சூழலே இந்தியாவில் நிலவி வருகிறது.

கற்பழிக்கப்படும் பெண்கள் அந்த நிகழ்விற்கு பிறகு சமூகத்தால் பலமுறை மென்மேலும் புண்படுத்துப்படுகிறார்கள். சமூகத்தின் பேச்சு, மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் கொடுமை, கேள்விகள் என்ற பெயரில் கோர்ட்டில் நிலைகுலைந்து போக செய்வது போன்றவை நாம் அறிந்தது.

ஆனால், சமீப காலமாக... இந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப்பட்ட வீடியோக்கள் ரூ.20, ரூ.30க்கும் மிக எளிதாக விற்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உத்தரப்பிரதேசம்!

உத்தரப்பிரதேசம்!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்ட வீடியோக்கள் ரூ.20, ரூ.30 முதல் ரூ. 200 வரை என்ற விலையில் விற்கப்படுகிறது.

பணம் கொடுத்துவிட்டு, மொபைல் எண்ணை கொடுத்தல் மொபைலுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இவை 30 நொடிகளில் இருந்து 5 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களாக எடிட் செய்து விற்கிறார்கள்.

இடங்கள்!

இடங்கள்!

பெட்டிக்கடை, மீன் கடை, டெலிபோன் பூத், பேப்பர் விற்கும் கடைகள், போன்ற சிறுசிறு இடங்களில் தான் இந்த வீடியோக்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

கற்பழிக்கப்பட்ட போதே பாதி இறந்த பெண்களை, இப்படி வீடியோக்கள் எடுத்து வைத்து மீதி உயிரையும் கொல்வது மனிதத்தன்மையற்ற செயல்.

என்ன வீடியோக்கள் இவை?

என்ன வீடியோக்கள் இவை?

இவை யாவும் கற்பழிக்கப்பட்ட பெண்களை பிளாக்மெயில் செய்ய எடுக்கப்பட்ட வீடியோக்கள் என கூறப்படுகிறது. அந்த பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்காமல் இருக்க இப்படி வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறார்கள்.

திருட்டு...

திருட்டு...

சில வீடியோக்கள் போன்களில் இருந்து திருடப்பட்டவையாக இருக்கின்றன. மொபைல் ரிப்பேர்க்கு வந்தால், அதை சரி செய்வது மட்டுமின்றி, அதில் இருக்கும் பதிவுகளையும் திருடிக் கொள்கிறார்கள் சில மொபைல் ரிப்பேர் கடைக்காரர்கள்.

காட்டுத்தீ போல...

காட்டுத்தீ போல...

இப்படி வரும் வீடியோக்கள் காட்டுத்தீ போல பரவ துவங்குகிறது. சிலர் இந்த கற்பழிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் சிலரது அந்தரங்க வீடியோக்களை பார்ன் சைட்டுகளில் பதிவு செய்துவிடுகிறார்கள். இதை பற்றி தான் சமீபத்தில் வெளியான 'லென்ஸ்' என்ற படம் விவாதித்திருந்தது.

பெயில்!

பெயில்!

சில ஊடகக் காரர்கள் இதை அறிந்து போலீஸுக்கு புகார் அளித்து, அழுத்தம் ஏற்படுத்தி வீடியோவிற்கும் நபர்களை கைது செய்ய வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் மிக எளிதாக பெயில் பெற்று வெளியே வந்துவிட்டனர் என கூறப்படுகிறது.

தண்டனை தான் என்ன?

தண்டனை தான் என்ன?

நமது நாட்டில் தவறு செய்பவர்களை காட்டிலும், அந்த தவறால் பாதிப்படைந்த நபர்கள் தான் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான தீர்வு தான் என்ன? கடுமையான தண்டனைகள் மட்டுமே என்பது பொதுமக்கள் கருத்து. ஆனால், இதுகுறித்து அரசோ, சட்ட வல்லுனர்களோ ஆலோசிப்பார்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ruthless People Sell Rape Videos in India for Cheap Rate!

Ruthless People Sell Rape Videos in India for Cheap Rate!
Desktop Bottom Promotion