அவனுக்கு எல்லாம் ஆண்மை உணர்ச்சி இழப்பு ஆப்ரேஷன் பண்ணிடனும்...

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய வானிலை அறிக்கை, இன்றைய தங்க - வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல் விலை வாசிப்பது போல... உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட செய்தியும் வாசிப்பது அனுதினம் செய்தியில் இடம்பெறும் நிகழ்வாகிவிட்டது.

என்ன தண்டனை தான் கொடுப்பது... நிற்கவைத்து கற்கள் கொண்டு அடித்தே கொன்றாலும் கூட மீண்டும் கற்பழிக்க ஒருவன் எழுந்து வருகிறான். எதை சொல்லி பயமுறுத்தினால் இவர் கற்பழிப்பை நிறுத்துவான்.

என்ன தண்டனை கொடுத்தால், இனி ஒருவனும் கற்பழிப்பை பற்றி கனவிலும் நினைக்க மாட்டான் என பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமூகம்!

சமூகம்!

மக்கள் கூடும் பொது இடங்களுக்கு வர தடை விதிக்க வேண்டும். சினிமா தியேட்டர், பார்க், பீச், திருவிழா, கோயில் என எங்கும் செல்ல முடியாத நிலைக்கு ஆளாக்க வேண்டும்.

அவர்களை கண்காணிக்க புலிகளின் எண்ணிக்கை கண்டறிய கழுத்தில் சென்சார் சிப் பொருத்தப்பட்டது போல, கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் கை, கால், கழுத்தில் எங்காவது ஒரு சென்சார் சிப் பொருத்தப்பட வேண்டும்.

மனநலம்!

மனநலம்!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள், புற்றுநோய் பாதிப்பு உடைய நபர்களுக்கு உதவி செய்ய அவர்களை பணியமர்த்த வேண்டும். இதன் மூலம் உடல் அளவிலும், மனதளவிலும் உண்டாகும் வலியை அவர்களை உணர செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சை!

அறுவை சிகிச்சை!

இனிமேல் இச்சை எண்ணமே எழாத வண்ணம், ஆணுறுப்பின் உணர்சிகளை செயலிழக்க அறுவை சிக்சை செய்ய வேண்டும். முடிந்தால் ஆணுறுப்பை நீக்கிவிடுங்கள்.

வேலை இல்லை!

வேலை இல்லை!

கற்பழிப்பு செயலில் ஈடுபட்ட நபர் வேலைக்கு செல்பவராக இருந்தால், அவரது வேலையை ரத்து செய்ய வேண்டும். தொழில் செய்பவராக இருந்த அவரது லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும்.

கடன் - ரொக்கம்!

கடன் - ரொக்கம்!

அவர் தான் கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி என தீர்ப்பு வந்துவிட்டால், அவன், அவனது மனைவி, பிள்ளைகள் வங்கிக் கணக்கு இருப்பில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்து அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அழித்துவிட வேண்டும். அவருக்கு எந்த வங்கிகளிலும் கடன் அளிக்க கூடாது.

சிட்டிசன்!

சிட்டிசன்!

சிட்டிசன் க்ளைமாக்ஸ்-ல் அஜித் கூறுவது போல அனைத்து அரசாங்க அடையாளங்களும், கல்வி சான்றிதழ்களும் பறிக்கப்பட வேண்டும். சொந்த நாட்டிலேயே அகதியாக திரிய வேண்டும்.

கும்பிபாகம்!

கும்பிபாகம்!

அந்நியன் வழங்கும் கருட புராண தண்டனைகளை தேர்வு செய்து, அடுத்து கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியாகும் நபருக்கு இது தான் தண்டனை என முன்கூட்டியே கூறிட வேண்டும்.

பச்சை!

பச்சை!

வெளியே தலைகாட்ட முடியாதபடி, நெற்றியில் பெரியளவில் கற்பழிப்பாளன் என பச்சை குத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Punishment Suggestions for Rapists!

How we can Punish Rapists? Some Ideas for People Choice!
Story first published: Friday, October 6, 2017, 11:45 [IST]