Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
$50,000 செலவு, 110 சர்ஜரி செய்து பாலின வேறுபாடு அற்ற ஏலியனாக மாறிய ஆண்!
கலிபோர்னியாவை சேர்ந்த இந்த மேக்கப் கலைஞர் $50,000 செலவு, 110 சர்ஜரி தன்னை ஒரு பாலின வேறுபாடற்ற நபராக மாற்றிக் கொண்டுள்ளார்.
நம்மில் பலருக்கு வித்தியாசமாக மேக்கப் செய்துக் கொண்ட, மற்றவர் மத்தியில் வேறுபட்டு தனித்தன்மையுடன் திகழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக சிலர் அவர்களுக்கென தனி பாணி, ஹேர் ஸ்டைல் எல்லாம் பின்பற்றுவர்கள்.
ஆனால், கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு மேக்கப் கலைஞர் $50,000 செலவு, 110 சர்ஜரி செய்து பாலின வேறுபாடு அற்ற ஏலியனாக மாறியுள்ளார்....

பாலினமற்ற ஏலியன்!
கலிபோர்னியாவை சேர்ந்த இந்த மேக்கப் கலைஞர் ஏறத்தாழ $1,60,000 செலவு செய்து தன்னை ஒரு ஏலியனாக மாற்றிக் கொள்ள திட்டமிட்டார். இதில் ஏற்கனவே இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய $50000 செலவு செய்து விட்டார்.

தீண்டத்தகாத...
விண்ணி எனும் இவர் தன்னை சிறுவயதில் இருந்தே ஒரு தீண்டத்தகாத நபராக கருதி வந்துள்ளார். இதுபோன்ற உணர்வால் இவர் தன்னை தானே விரும்ப துவங்கியுள்ளார். இவர் தன் உடல் மீது தன்னம்பிக்கை கொண்டும் திகழ்ந்து வந்துள்ளார்.

17 வயதில் இருந்து...
தனது 17 வயதில் இருந்தே விண்ணி இந்த மாற்றம் கொண்டு வர துவங்கிவிட்டார். முதலில் இதழ்களில் பில்லர்ஸ் நிரப்பினார். பிறகு தாடை பகுதியை மாற்றி அமைத்துக் கொண்டார்.

அகற்றம்!
இவர் தனது நிப்பிள், தொப்புள், பிறப்புறுப்பு போன்ற பகுதிகளை அகற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், தான் ஒரு பாலினமற்ற நபராக மாறிவிடலாம் என இவர் கருதுகிறார்.
இன்னும், கண்கள், மூக்கு என உடலில் ஆங்காங்கே பல சர்ஜரிகள் செய்யவேண்டி உள்ளதாம் இதற்கெல்லாம் சேர்த்தி $1,60,000 செலவாகும் என அறியவருகிறது.

24 வயது தான்...
இவரது வயது வெறும் 24 தான். நாளுக்கு நாள் இவர் ஏலியனாகவே மாறி வருகிறார். 17 வயதிலேயே இதற்கான முயற்சிகளில் இறங்கியதாகவும். அப்போது சூழல் சரியாக அமையவில்லை என்றும் இவர் தெரிவிக்கிறார்.

ஏலியன்!
ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்க விருப்பம் இல்லாததால் தான் தன்னை ஒரு பாலினம் அற்ற ஏலியனாக மாற்றிக் கொள்ள விரும்புவதாக விண்ணி கூறுகிறார்.

பிறப்புறுப்பு!
எனக்கு பிறப்புறுப்பு தேவையில்லை. பிறப்புறுப்பை அகற்றி விட்டால் எனது வாழ்க்கை எளிதாகிவிடும் என்கிறார் விண்ணி.

மக்கள் விரும்புகின்றனர்...
மேலும், விண்ணி, "நான் உண்மையாக தோற்றம் கொண்டிருக்க வில்லை. மக்கள் இதை விரும்புகின்றனர். சிலர் என்னிடம் தங்கள் குழந்தைக்கு இது போன்ற மேக்கப் செய்து பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்." என்கிறார்.

வண்ணங்கள்!
தனது முடி, கண்கள் என உடல் முழுவதும் பல வண்ணங்களை பயன்படுத்துகிறார் விண்ணி. நிறைய வண்ணங்கள் பயன்படுத்துவதால் தான் தன்னை பாலினமற்ற நபராக உணர முடிகிறது என்றும் விண்ணி கூறுகிறார்.
இது இவரது இன்ஸ்டாகிராம்முகவரி...



Click it and Unblock the Notifications