For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  காதலுக்கு மறுப்பு தெரிவித்து 25 ஆண்டுகள் ஒரே அறையில் அடைக்கப்பட்ட பெண்ணின் பரிதாப நிலை...

  |

  ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள். ஆம்! புகைப்படங்கள் பெரும் நினைவுகளை தன்னுள் தாங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிப் பெட்டகம் எனலாம். ஆனால், அதனும் மகிழ்ச்சி மட்டுமே இருப்பதில்லை. இன்பம், துன்பம், அழுகை, பகைவுணர்வு, படுக்கொலை, வன்மம் என பலவகையிலான உணர்வுகள், குணங்கள், பலமுகங்களின், அகங்களின் வெளிப்பாடும் புதைந்திருக்கிறது.

  இங்கே, இன்று நாம் காணவிருக்கும் இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் படங்களுக்கு பின்னால் பல கொடுமைகள், கொடூரங்கள் மறைந்திருக்கின்றன. புன்னகை தழுவ போஸ் கொடுத்திருக்கும் நபர்கள் சிலருக்கு அது தான் அவர்களது கடைசி புன்னகை என்பது தெரியாமலே போய்விட்டது.

  கற்பழிப்பு, காதலுக்கு எதிர்ப்பு என மனதை ரணமாக்கும் நிகழ்வுகளும் சில படங்களில் அடங்கியிருக்கிறது....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பிளான்ச் மோன்னியர்!

  பிளான்ச் மோன்னியர்!

  பிளான்ச் மோன்னியர் வழக்கறிஞர் ஒருவரை நேசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். வீட்டில் பிளான்ச் மோன்னியருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், வீட்டாரை எதிர்த்து, அந்த வழக்கறிஞரை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என பிளான்ச் மோன்னியர் பிடிவாதம் பிடித்துள்ளார்.

  கோபம்!

  கோபம்!

  இதனால் கோபமடைந்த இவரது குடும்பத்தினர் ஒரே அறையில் பூட்டி அடைத்து வைத்தனர். ஏறத்தாழ 25 ஆண்டுகள் கழித்து இவரை கண்டுபிடித்து மீட்டனர். பிளான்ச் மோன்னியர் வெளியே வந்த பின்னரும் கூற மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். அவரால் மன வேதனையில் இருந்து வெளியே வர இயலவில்லை. 12 ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்த பிளான்ச் மோன்னியர் மரணம் அடைந்தார்.

  மைக்கல் மற்றும் சீன் சீன் மெக்யுலிகென்!

  மைக்கல் மற்றும் சீன் சீன் மெக்யுலிகென்!

  மைக்கல் மெக்யுலிகெனுக்கு அப்போது 19 வயது. தனது 16 வயது தம்பியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். இந்த படம் 1975ல் சியரா நெவாடா மலைகள் அருகே எடுக்கப்பட்டது. இதே நாளில், அந்த இடத்தில் நடந்து சுற்றுசூழல், வானிலை, வளிமண்டல மாற்றங்களை காண்பித்த ஒரே படம் இதுதான்.

  இந்த படம் எடுத்த ஒருசில நிமிடங்களில் மின்னல் தாக்கி, மைக்கல், சீன, இவர்களது சகோதரை மேரி மற்றும் மார்கி என்பவர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர்.

  ரெஜினா கே வால்டர்ஸ்

  ரெஜினா கே வால்டர்ஸ்

  ராபர்ட் பென் ரோட்ஸ் எனும் அமெரிக்க சீரியல் கொலையாளியால் கொலை செய்யப்பட்ட இளம்பெண் தான் இந்த ரெஜினா கே வால்டர்ஸ். பென் ரோட்ஸ் இந்த இளம்பெண்ணை டார்ச்சர் செய்து, கற்பழித்து கொலை செய்ததாக கருதப்படுகிறது. ரெஜினா கே வால்டர்ஸ் மட்டுமின்றி, ஏறத்தாழ ஐம்பது பெண்களை இது போல கற்பழித்து கொலை செய்துள்ளான் பென் ரோட்ஸ்.

  துடிக்க, துடிக்க...

  துடிக்க, துடிக்க...

  ரெஜினா கே வால்டர்ஸ் எனும் இந்த பெண்ணை கொலை செய்யும் முன்னர் பென் ரோட்ஸ் எடுத்த படம் இது. இவரது முடியை கத்திரித்து, இந்த கருப்பு உடை மற்றும் காலணிகளை உடுத்த சொல்லி வற்புறுத்தி அணிய கூறியிருக்கிறான். இந்த படத்தை எடுத்து சிறிது நேரத்திலேயே ரெஜினா கே வால்டர்ஸ் எனும் இந்த பெண்ணை துடிக்க, துடிக்க கொலை செய்துள்ளான்.

  ரெனால்டோ டோகா

  ரெனால்டோ டோகா

  ரெனால்டோ டோகா என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஓர் அரசியல்வாதி. இவர் ஒரு புத்தாண்டி நாளில் தனது குடும்பத்துடன் கொண்டாடி வந்தார். அப்போது, தனது குடும்பத்தினரை ரெனால்டோ டோகா புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது பதிவான காட்சி இது.

  எதிர்ப்பு!

  எதிர்ப்பு!

  இந்த படத்தில் துப்பாக்கி ஏந்தி குறிபார்த்து நின்றுக் கொண்டிருக்கும் நபர் தான் ரெனால்டோ டோகாவை சுட்டு கொலை செய்த நபர். இவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது அந்நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ரெனால்டோ டோகா மீது இருந்த பகை காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது என அறிய வந்தது.

  ஆற்றில் நடந்த சோகம்!

  ஆற்றில் நடந்த சோகம்!

  இந்த மாணவர்கள் 2014ம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த வி.என்.ஆர் விஞ்ஞான ஜோதி பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர்கள். இவர்கள் பீஸ் எனும் ஆற்றின் அருகே இன்ப சுற்றுலா சென்றுள்ளனர். சரியாக இவர்கள் இந்த புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, ஹைட்ரோ-எலக்ட்ரிக் பிராஜக்ட் காரணமாக பெரியளவிலான நீர் திறந்துவிடப் பட்டதாக அறியப்படுகிறது.

  பரிதாபமாக மரணம்!

  பரிதாபமாக மரணம்!

  திடீரென நீர் மிக வேகமாக வெளிவந்த காரணத்தால். மூன்று ஆசிரியர்கள் உட்பட 48 மாணவர்களும் சேர்ந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது 550 பேர் இவர்களை ஆற்றில் இருந்து மீட்க முயன்றனர். ஆனால், பரிதாபமாக 24 மாணவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

  கூட்டுத் தற்கொலை!

  கூட்டுத் தற்கொலை!

  ஜோன்ஸ்டவுன் இது கயானா எனும் இடத்தில் இருக்கிறது. உலகின் பெரிய மாஸ் தற்கொலை சம்பவம் நடந்த இடம் இதுதான். கடந்த நவம்பர் 18, 1978ல் இங்கிருந்த ஜிம் ஜோன்ஸ் எனும் தலைவர் உட்பட அவரை பின்தொடர்ந்து வந்த 900 பெரும் சயனைடு குடித்து கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டனர்.

  ஷெர்லி ஆன் பிரிட்ஜ்போர்ட்

  ஷெர்லி ஆன் பிரிட்ஜ்போர்ட்

  ஷெர்லி ஆன் பிரிட்ஜ்போர்ட் என்பவர் ஹார்வே கிளாட்மேன் என்பவரால் கொலை செய்யப்பட்ட பெண்மணி. இந்த ஹார்வே எனும் கொலையாளி 1950-களில் கிளாமரான பெண்களை மட்டும் தேடி, தேடி கொலை செய்து வந்த நபர். மேலும், இவர் தனிமையில் இருக்கும் பெண்கள், தனிமை உணர்வில் வாடும் பெண்களையும் கொலை செய்துள்ளான்.

  மாடல் அழகி

  மாடல் அழகி

  இவர் 1950களில் லாஸ் வேகாஸ் பகுதியில் மூன்று கொலைகள் செய்ததாக அறியப்படுகிறது. போலீஸ் விசாரணை போது கிடைத்த ஒரு டூல் பாக்ஸில் சிலரது புகைப்படங்கள் சிக்கின. அது காண மிகவும் கொடூரமான வகையில் இருந்தது. ஜூடித் துல் எனும் ஒரு மாடல் பெண்ணையின் இவன் கொலை செய்திருந்தது அப்போது தான் தெரியவந்தது. ஹார்வே தான் கொலை செய்யும் பெண்களை எல்லாம் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.

  ராபர்ட் பட் டுவேர்

  ராபர்ட் பட் டுவேர்

  ராபர்ட் பட் டுவேர் பென்சில்வேனியாவின் செனட்டர் மற்றும் பொருளாளராக 1971 முதல் 1987 வரை இருந்தவர். வரி மற்றும் மாநில வேலையாட்கள் மற்றும் எதிராளிகள் என பல பிரச்சனைகள் இவரை தொடர்ந்துக் கொண்டிருந்தது. ராபர்ட் பட் டுவேர் லஞ்சம் பெற்றி எய்ப்பு செய்து வந்தார் என அறியப்பட்டது.

  தற்கொலை!

  தற்கொலை!

  இதை ஜனவரி 22, 1987ல் ஊர்ஜிதமும் செய்தனர். ஊர்ஜிதம் ஆன முதல் நாள் இவர் ஊடகங்களை பேட்டி அளிக்க அழைத்தார். ஆனால், அந்த கூட்டத்தின் போது ராபர்ட் பட் டுவேர் தன்னை தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Creepy Photos and Its Disgusting Back!

  Creepy Photos and Its Disgusting Back!
  Story first published: Monday, December 11, 2017, 15:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more