Latest Updates
-
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்! -
செவ்வாய் மேஷ ராசியில் உதயமாவதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
பெண்கள் செய்யும் இந்த விஷயங்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் செய்ய முடியாது!!
ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற கருத்து உண்மையானது தான். ஆனால், பெண்கள் செய்யும் சில செயல்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் கூட செய்ய முடியாது. ஆம், இன்றைய 21ஆம் நூற்றாண்டில் ஆண்கள் செய்யும் பலவற்ற பெண்கள் செய்து வருகிறார்கள். கணினி பொறியியல் மட்டுமின்றி மெக்கானிக்கல், சிவில் என எல்லா துறையிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள்.
ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
முடி திருத்தம், ஆடை, காலணி வரை ஆண்களின் சாயல் பெண்களில் தெரிய ஆரம்பித்துவிட்டது. ஆனால், இதே 21ஆம் நூற்றாண்டில் பெண்கள் செய்யும் செயல்களை ஆண்கள் செய்ய முடியுமா என்றால்? சத்தியாமாக முடியாது. குறிப்பாக ஓர் ஆறு செயல்களை ஆண்கள் கண்டிப்பாக செய்யவே முடியாது.
ஏன் ஆண்கள் ஸ்லிம்மான பெண்கள் மீது அதிக ஈர்ப்புக் கொள்கின்றனர்???
அப்படி மீறியும் ஆண்கள் செய்தாலும் கூட, இந்த சமூகம் அதை வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் தான் பார்க்கும்....

குட்டை பாவாடை, தொப்புள் தெரியும் மேல் சட்டை
ஆண்கள் அணியும், பேண்டில் இருந்து, டி-ஷர்ட் வரை பெண்கள் அணிகிறார்கள். லுங்கியை கூட விட்டி வைக்கவில்லை என்பது வேறு கதை. ஆனால், பெண்கள் அணியும் ஏதேனும் ஒரு உடையையாவது ஆண்கள் ஆல்ட்டர் செய்து ஃபேஷன் என்ற பெயரில் அணிய முடியுமா? அப்படி நீங்கள் வீம்புக்கு அணிந்தாலும், இந்த சமுதாயம் உங்களை வேறு பெயர் சொல்லி தான் அழைக்குமே தவிர, ஒரு போதும் நீங்கள் அவ்வாறான உடையை அணிய முடியாது.

ஹை-ஹீல்ஸ்
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக ஹை-ஹீல்ஸ் அணிந்தது ஆண்கள் தான் என்ற வரலாறு இருந்தாலும். இப்போதைய நிலைமையில், தமிழகத்தில் பெண்கள் அணிவது போல ஆண்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து செல்ல முடியுமா? ஆனால், செருப்பு அளவில் கூட ஆண்கள் அணியும் மாடலில் பெண்களுக்கும் செருப்புகள் விற்கப்படுகிறது. (உண்மையில் 33% பெண்களுக்கா?? ஆண்களுக்கா??)

மனநிலை மாற்றம்
பெண்களை போல நொடிக்கு நொடி மனநிலையை மாற்ற ஆண்களால் முடியாது. அப்போது தான் ஒரு தோழியை பற்றி மற்றவரிடம் கடுப்பாக பேசிக்கொண்டிருப்பார்கள், ஆனால, அடுத்த நொடி அந்த தோழி கண்முன் தோன்றினால் கூட உடனே புன்னகை செய்து பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், இது ஆண்களால் முடியாத காரியம்.

மேக்-அப்
கொப்பரானே சத்தியமா.... ஆண்களால் இது முடியவே முடியாது!!! ரோஸ் பவுடர், கண்மை, லிப்ஸ்டிக் எல்லாம் பூசிக்கொண்டு ஆண் வெளியில் செல்ல முடியும் என்ற எண்ணமே மனதில் எழுவது கடினம். பிறகு எங்கே முயற்சி செய்வது.

நீண்ட கூந்தல் வளர்ப்பது
நமது முன்னோர்கள் நீண்ட கூந்தல் வளர்த்தவர்கள் தான். பெண்களுக்கு இணையாக ஆண்களும் குடுமி போட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டில் "ஷார்ட் கட்" செய்த பெண்களை கூட அதிகம் பார்க்க முடியும் ஆனால், ஆறடி கூந்தல் கொண்டுள்ள ஆண்களை பார்க்கவே முடியாது.

கேள்வி மேல் கேள்வி கேட்டு தொல்லை செய்வது
நீங்கள் பெண்களுடன் எங்காவது தனியாக பயணம் மேற்கொண்டிருந்தால் மட்டுமே இதை உணர முடியும். மேப் கையில் இருந்தாலும் கூட, எப்படி போக வேண்டும், வேறு வழி இருக்கிறதா, பாதை சுலபமாக இருக்குமா? என கேள்வியே கண்ணீர்விடும் அளவிற்கு கேள்வி கேட்க பெண்களால் மட்டுமே முடியும். தெரியாது என்று தெரிந்தால் அவமானம் என்ற கெத்துக்காக கூட ஆண்கள் அதிகம் கேள்வி கேட்கமாட்டார்கள் என்பது வேறு விஷயம்.



Click it and Unblock the Notifications