Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
தங்களது உடல் பாகங்களை அதிக விலைக்கு இன்ஷூர் செய்துள்ள பிரபலங்கள்!!!
இன்ஷூர் செய்வது நல்ல விஷயம் என்பார்கள். தங்கள் மீதும், தங்களது சொத்துகள் மீதும், வாகனங்கள் மீதும் இன்ஷூர் செய்வது வழக்கம் தான். ஆனால் சில பிரபலங்கள், தங்களது உடல் பாகங்கள் மீது இன்ஷூர் செய்து வைத்திருக்கிறார்கள். அதிலும் சிலர் தங்களது அந்தரங்க பாகங்கள் மீது இன்ஷூர் செய்து வைத்துள்ளது உச்சகட்டமாக திகழ்கிறது.
முன்பு நமது உள்ளூர் பேரழகி நடிகை ரம்பா கூட அவரது தொடைகளை இன்ஷூர் செய்து வைத்திருந்தார் என்ற வதந்தி, கிசு, கிசு பரவி இருக்கின்றன. ஆனால், அது உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை. இனி, தங்கள் உடல் பாகங்கள் மீது இன்ஷூர் செய்து வைத்துள்ள பிரபலங்கள் பற்றியும், அவர்கள் எவ்வளவு பெரும் தொகையை தங்களது உடல் பாகங்கள் மீது இன்ஷூர் செய்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியும் பார்க்கலாம்.....

கிம் கர்தாஷியன்
உலகின் முன்னணி மாடல் அழகியான கிம் கர்தாஷியன் செம பிரபலம். இவர் தனது பின்னழகை இன்ஷூர் செய்து வைத்திருக்கிறார். எவ்வளவு என்று கூறினால் உங்கள் வாய் சில நாட்களுக்கு பிளந்தே தான் இருக்கும். ஆம், கிம் அவரது பின்னழகை 21 மில்லியன் டாலர்களுக்கு இன்ஷூர் செய்து வைத்திருக்கிறார்.

ஜூலியோ ராபர்ட்
ஜூலியோ ராபர்ட் எனும் மற்றுமொரு ஹாலிவுட் பிரபலம், தனது புன்னைகையை 30 மில்லியன் டாலர்களுக்கு இன்ஷூர் செய்திருக்கிறார்.

ஜெனிபிர் லோபஸ்
மற்றுமொரு ஹாலிவுட்டின் முன்னால் கனவுக் கன்னியான ஜெனிபிர் லோபஸ் தனது பின்னழகை 300 மில்லியன் டாலர்களுக்கு இன்ஷூர் செய்து வைத்துள்ளார். (அம்மாடியோவ்!!!!)

டேவிட் பெக்கம்
தனது கால்பந்தாட்டம் முதல் தலை முடி அலங்காரம் வரை தலை முதல் கால்வரை இவர் உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கி வைத்திருந்தவர். இவர் தனது கால்களை 70 மில்லியன் டாலர்களுக்கு இன்ஷூர் செய்து வைத்துள்ளார்.

கிறிஸ்டினோ ரொனால்டோ
தற்போதைய கால்பந்தாட்டத்தின் சூப்பர் ஹீரோ இவர். ஐவரும் டேவிட் பெக்கமை போலவே தந்து கால்களை தான் இன்ஷூர் செய்து வைத்துள்ளார். ஆனால் அவரை விட இரு மடங்கு அதிகமாக, 144 மில்லியன் டாலருக்கு இன்ஷூர் செய்துவைத்துள்ளார்.

அமெரிக்கா பெர்ரேரா
அமேரிக்கா பெர்ரேரா எனும் இவர், தனது பற்களை 10 மில்லியன் டாலர்களுக்கு இன்ஷூர் செய்து வைத்திருக்கிறார்.

ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன்
ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன் என்பவர் தனது குரல் வளத்தை 5.7 மில்லியன் டாலர்களுக்கு இன்ஷூர் செய்திருக்கிறார்.

அடம் லம்பேர்ட்
ப்ரூசை போலவே அடமும் தனது குரல் வளத்தை இன்ஷூர் செய்து வைத்திருக்கிறார். ஆனால், 47 மில்லியன் டாலர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
