2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யார நடை போட்ட பிரபலங்கள்!!!

By Babu

பிரம்மாண்டமான 2015 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக் நேற்று நிறைவுற்றது. இந்த வருட லேக்மி ஃபேஷன் வீக்கில் எண்ணற்ற நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் டிசைனர்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தனர். ஒவ்வொருவரும் அற்புதமான உடைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்தனர்.

இந்த வருடம் லேக்மி ஃபேஷன் வீக்கில் வெளிவந்த உடைகளை கூடிய விரைவில் நடிகைகள் அல்லது நடிகர்கள் ஏதேனும் நிகழ்ச்சி அல்லது விழாக்களில் அணிந்து வருவதைத் காணலாம். அந்த அளவில் டிசைனர்கள் வித்தியாசமான உடைகளை வடிவமைத்து வெளியிட்டனர்.

சரி, இப்போது 2015 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கில் ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்களின் போட்டோக்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாரன் காட்லீய்ப்

லாரன் காட்லீய்ப்

லாரன் பேக்கிங் பிராண்ட்டின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அதுவும் மின்னும் பச்சை நிற நீளமான உடை அணிந்து, பேக்கிட் ஹேண்ட்பேக் உடன் ராம்ப் வாக் நடந்தார்.

நிம்ரத் கவுர்

நிம்ரத் கவுர்

நடிகை நிம்ரத் கவுர், டிசைனர் பாயல் சிங்காலின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் பிரிண்ட்டட் கிராப் டாப் மற்றும் லெஹெங்கா ஸ்கர்ட் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

நடிகர் ரன்பீர் கபூர் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

கவுஹர் கான்

கவுஹர் கான்

நடிகை கவுஹர் கான் டிசைனர் ரின்கு சோப்டியின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

லிசா ஹெடன்

லிசா ஹெடன்

நடிகை லிசா ஹெடன் டிசைனர் ஸ்வாதிக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் பல வண்ணங்கள் கலந்த கிராப்-டாப் அணிந்து, ஆலிவ் பச்சை மற்றும் கருப்பு கலந்த ஸ்கர்ட் அணிந்து மிகவும் ஸ்டைலாக ராம்ப் வாக் நடந்தார்.

அதிதி ராவ் ஹைதாரி

அதிதி ராவ் ஹைதாரி

நடிகை அதிதி ராவ் ஹைதாரி பிங்க் நிற சில்க் புடவை மற்றும் கோல்டன் சில்க் பேண்ட் அணிந்து, டிசைனர் ரித்து குமாருக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

தியா மிர்சா

தியா மிர்சா

நடிகை தியா மிர்சா டிசைனர் அனிதா டாங்ரேவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற மேக்ஸி கவுன் அணிந்து வந்திருந்தார்.

ஈவ்லின் சர்மா

ஈவ்லின் சர்மா

நடிகை ஈவ்லின் சர்மா நகை வடிவமைப்பாளர் வசுந்தராவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் கருப்பு நிற உடையணிந்து வடிவியல் சார்ந்த நெக்லேஸ் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

நேகா சர்மா

நேகா சர்மா

நடிகை நேகா சர்மா, கருப்பு மற்றும் நீலம் கலந்த நூல் எம்பிராய்டரி செய்யப்பட்ட குட்டையான கவுனில் டிசைனர் ப்ரேம் குமாருக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

விர் தாஸ் ஷோஸ்டாப்பர்கள்

விர் தாஸ் ஷோஸ்டாப்பர்கள்

முதன் முறையாக ஒன்றிற்கு மேற்பட்ட பிரபலங்கள் விர் தாஸ் அவர்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தனர்.

சாரதா கபூர்

சாரதா கபூர்

நடிகை சாரதா கபூர் டிசைனர் நம்ரதா அவர்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் ஹை ரவுண்ட் காலர் கொண்ட மின்னும் சில்வர் ஜம்ப்சூட் அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

சூரஜ் பஞ்சோலி

சூரஜ் பஞ்சோலி

சூரஜ் பஞ்சோலி வெள்ளை சட்டை மற்றும் சிகரெட் பேண்ட் அணிந்து மேலே பிரிண்டட் ஜாக்கெட் போட்டு டிசைனர் மசபாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

அர்ஜுன் ராம்பால்

அர்ஜுன் ராம்பால்

நடிகர் அர்ஜுன் ராம்பால் டிசைனர் புகட்டி அவர்களின் கருப்பு நிற உடையில் கருப்ப நிற புகட்டி ஷூ அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்திருந்தார்.

உஜ்வலா ரவுத்

உஜ்வலா ரவுத்

உஜ்வலா ரவுத் டிசைனர் மோனிஷா ஜெய்சிங்கிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் மின்னும் ஷீர் கவுன் அணிந்து யாரும் நினைத்திராத வகையில் படு செக்ஸியான உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

 ஏமி ஜாக்சன்

ஏமி ஜாக்சன்

நடிகை ஏமி ஜாக்சன் அனுஸ்ரீ ரெட்டியின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் பிங்க் நிற லெஹெங்கா மற்றும் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஜாக்கெட் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

ராணா டகுபதி

ராணா டகுபதி

டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி ஆண்களுக்காக வடிவமைத்த உடைக்கு, பிரபல நடிகர் ராணா டகுபதியை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்திருந்தார்.

மலாய்கா அரோரா கான்

மலாய்கா அரோரா கான்

நடிகை மலாய்கா அரோரா கான் கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட லெஹெங்கா மற்றும் ஜாக்கெட் அணிந்து, டிசைனர் அர்பிதா மெஹ்தாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

ஈஷா குப்தா

ஈஷா குப்தா

நடிகை ஈஷா குப்தா டிசைனர் ரிதி மெஹ்ராவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் மின்னும் கருப்பு நிற ஃபிஷ்-கட் கவுன் அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி டிசைனர் திவ்யா ரெட்டிக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

தமன்னா

தமன்னா

நடிகை தமன்னா டிசைனர் நீத்தா லுல்லாவின் ஷோஸ்டாப்பராக, மின்னும் நெட்டட் லெஹெங்கா மற்றும் ஃபுல் ஸ்லீவ் சோளி அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

சித்ரங்கதா சிங்

சித்ரங்கதா சிங்

நடிகை சித்ரங்கதா சிங், டிசைனர் தருண் தஹிலியானியின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் கருப்பு நிற V நெக்லைன் கொண்ட சில்க் கவுன் அணிந்து, கருப்பு நிற பிரிண்டட் ஜர்தோஷி வெல்வெட் ஜாக்கெட் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

இலியானா

இலியானா

நடிகை இலியானா டிசைனர் சாங்ரியாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்ததோடு, கருப்பு நிற டாப் மற்றும் பூ பிரிண்டட் ஸ்கர்ட் அணிந்து, தலைக்கு மேலே கோல்டன் ஸ்பைக்ஸ் மகுடம் வைத்துக் கொண்டு ராம்ப் வாக் நடந்து வந்தார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

நடிகை கரீனா கபூர் டிசைனர் கவுரவ் குப்தாவின் ஷோஸ்டாப்பராக, கருப்பு நிற கவுன் அணிந்து பலரது கண்களையும் கவரும் வண்ணம் ராம்ப் வாக் நடந்து வந்தார்.

சர்வீன் சாவ்லா

சர்வீன் சாவ்லா

சர்வீன் கருப்பு நிற பெப்லம் உடை அணிந்து ஸ்டைலாக Tanieya Khanuj அவர்களின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

கிருதி சனோன்

கிருதி சனோன்

நடிகை கிருதி சனோன் டிசைனர் சோனாக்ஷி ராஜ் அவர்களின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion