Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
நாள் வாரியாக வழிப்பட வேண்டிய இந்து கடவுள்கள்!!!
இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக தினமும் அந்தந்த கடவுளை வணங்க தவற மாட்டார்கள். ஒரு கடவுளின் அனைத்து அவதாரங்களையும் திருவுருவங்களையும் தரிசிக்க வேண்டுமானால் அன்றைய நாளை முழுவதுமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்பணிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு திங்கள் என்றால் அது சிவனுக்கு உகந்த தினமாகும். அதே போல் செவ்வாய் என்றால் ஹனுமான் மற்றும் புதன் என்றால் விநாயகர் என கூறிக்கொண்டே போகலாம்.
இவையனைத்தும் சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று தரிசிக்க வேண்டும் என்பதை அறிய, கீழ்கூறிய தகவல்களை படித்து அறிந்து கொள்ளுங்கள். விசேஷ தினங்களில் கடவுளை வழிபடுவது, உங்களுக்கு வெற்றியை ஈட்டி தந்து உங்களுக்கு ஆன்மீக தெளிவூட்டலை ஏற்படுத்தும்.
கடவுள்களுக்காக நேரத்தை ஒதுக்கி அவர்களை வழிபட உங்களுக்கு இந்த தினசரி வழிபாடு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். உதாரணத்திற்கு, விஷ்ணு பகவான், சிவபெருமான், லக்ஷ்மி தேவி, சூர்ய பகவான் என அந்தந்த கடவுள்களை அவர்களுக்கான தினத்தில் வழிபடலாம். கடவுளகளை அவர்களின் உகந்த தினத்தில் வழிபடுவது நன்மையை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
சரி, எந்த நாளில் எந்த கடவுள் என்று பார்க்கலாமா?

திங்கள்: சிவபெருமான்
சிவன் கோவில்களில் அதிகளவிலான கூட்டங்களை காணலாம்; முக்கியமாக திங்கட்கிழமைகளில். காரணம் நீலகண்டனை வழிபட அதுவே உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம், சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரையை படைத்திடுங்கள்.

செவ்வாய்: ஹனுமான்
குரங்கு கடவுளான ஹனுமாரை செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம். பலத்தின் கடவுளாக கருதப்படும் இவர் சிவபெருமானின் அவதாரமாக நம்பப்படுகிறார்.

புதன்: விநாயகர்
அனைத்து தடங்களையும் நீக்கும் வல்லவர் விநாயகர். அவரை வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது.

வியாழன்: விஷ்ணு பகவான்
விஷ்ணு பகவானை பொதுவாக வியாழக்கிழமை அன்று வழிபடுவார்கள். விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. நற்பேறு மற்றும் செல்வம் நிறைந்துள்ள கடவுள்களை வியாழக்கிழமையில் வணங்குவது உகந்ததாக கருதப்படுகிறது.

வெள்ளி: துர்க்கை
துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை வழிபட வேண்டும். இந்த நாளில் இக்கடவுளின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.

சனி: சனி பகவான்
சனிக்கிழமை என்பது சனி கிரகத்தை சார்ந்ததாகும். அந்த கிரகத்தை ஆட்சி செய்வது சனி பகவான் என நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் சனி பகவான், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை பக்தர்கள் வணங்கலாம்.

ஞாயிறு: சூரிய பகவான்
நவகிரகத்தின் முதன்மையான புகழ் பெற்ற கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று வழிபடுவது உகந்தது. அந்நாளில் காலை வேளையில், சூரியனுக்கு தண்ணீர் படைத்து, காயத்ரி மந்திரம் படிக்க மறந்து விடாதீர்கள்.



Click it and Unblock the Notifications
