Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சொன்னா நம்பமாட்டீங்க... இவங்கெல்லாம் சரக்கு அடிக்கவே மாட்டாங்களாம்...!
பொதுவாக ஹாலிவுட்டில் ஆல்கஹால் பருகாதவர்களே இருக்கமாட்டார்கள். அதிலும் ரிஹானா, மடோனா, லேடி காகா மற்றும் பலர் பல போதைப் பழக்கங்களுக்கு அடிமையாக உள்ளனர். ஆனால் ஹாலிவுட்டில் உள்ள ஒருசில பிரபலங்கள் எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஆம், உதாரணமாக பாப் பாடகியான ஜெனிபர் லோபஸ் தனது அழகு கெடாமல் இருப்பதற்கு சரக்கு அடிப்பதே இல்லையாம். இங்கு அப்படி சரக்குக்கு அடிமையாகாத சில ஹாலிவுட் பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளோம். குறிப்பாக இவர்களுள் சிலர் சரக்கை ஒரு சிப் டேஸ்ட் செய்திருப்பார்களே தவிர, அதற்கு அடிமையானவர்கள் இல்லை. அதுமட்டுமின்றி, சிலர் சரக்கு அடித்து பல பிரச்சனைகளை சந்தித்து, பின் அதனை அடிக்கவேமாட்டோம் என்று சபதம் எடுத்து, சரக்கு அடிப்பதையே நிறுத்திவிட்டார்களாம்.
சரி, இப்போது அந்த ஹாலிவுட் பிரபலங்கள் யார் என்று பார்ப்போமா!!!

டேவிட் பெக்காம்
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல கால்பந்து வீரருமான டேவிட் பெக்காம், தனது ஆரோக்கியம் மற்றும் உடல் கட்டமைப்பு கெடாமல் இருக்க வேண்டுமென்று, சரக்கு அடிக்கவேமாட்டராம்.

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியனும் சரக்கு அடிக்கவே மாட்டாராம். மேலும் இவருக்கு ஆல்கஹாலின் வாசனையே பிடிக்காதாம்.

ஜேதா பின்கட் ஸ்மித்
வில் ஸ்மித்தின் மனைவியான ஜேதா பின்கட் ஸ்மித் கூட சரக்கு அடிக்கவே மாட்டார்.

ஜெனிபர் லோபஸ்
பாப் பாடகியான ஜெனிபர் தன் அழகைப் பராமரிப்பதற்காக சரக்கு அடிப்பதே இல்லையாம்.

லியானோ லூயிஸ்
இங்கிலாந்து இளசுகளை கலக்கிக் கொண்டிருக்கும் இளம் பாப் புயல்தான் லியானோ லூயிஸ். இவருக்கும் சரக்கின் வாசனை மற்றும் சுவை பிடிக்காததால், அதை தொடுவதே இல்லையாம்.

நவோமி கேம்பல்
பிரிட்டிஷ் மாடல் அழகி மற்றும் நடிகையான நவோமி, சரக்கு அடித்து பல பிரச்சனைகளை சந்தித்து, பின் சரக்கே அடிக்கமாட்டேன் என்று உறுதி எடுத்து, தற்போது சரக்கு அடிக்காமல் வாழ்ந்து வருகிறார்.

பிராட்லி கூப்பர்
ஹாலிவுட் நடிகரான பிராட்லி கூப்பர் கூட சரக்கு அடித்து செய்த லூட்டியால் சந்தித்த பிரச்சனைகளால், இனிமேல் சரக்கே அடிக்கமாட்டேன் என்று உள்ளார். மேலும் இனிமேல் எந்த ஒரு போதைப் பழக்கத்திற்கும் அடிமையாக போவதில்லை என்றும் சொல்லி, தற்போது நல்ல மனிதராக வாழ்ந்து வருகிறார்.

எமினெம்
எமினெம் ஆரம்பத்தில் போதைப் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலுக்கு அடிமையாகி, 7 வருடங்களாக எந்த ஒரு பாட்டும் பாடாமல், பின் அதிலிருந்து பாடுபட்டு வெளிவந்து, தற்போது நிம்மதியான வாழ்க்கையை வாழ்கிறார்.

டைரா பேங்க்ஸ்
மாடல் அழகி டைரா பேங்க்ஸ் தனது 12 வயதில் ஆல்கஹாலை சுவைக்கும் போது, அதன் சுவை பிடிக்காததால், இன்று வரை ஆல்கஹால் அருந்தாமலேயே வாழ்ந்து வருகிறார்.

டோபே மகுரி
ஸ்பைடர் மேன் படத்தின் கதாநாயகனான டோபே மகுரி கூட ஆல்கஹால் அடிக்கவே மாட்டாராம். மேலும் அப்படி அடிக்காமல் வாழும் வாழ்க்கையைத் தான் அவர் விரும்புகிறாராம்.



Click it and Unblock the Notifications