Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
குளியலறையில் இறந்து போன பிரபலங்கள்!!!
மரணம் என்பது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். அது எப்போது நடக்கும் என்ற சரியான நேரத்தையும், இடத்தையும் யாராலும் கணிக்க முடியாது. இயற்கையான முறையில் அல்லது அளவுக்கு அதிகமான போதையின் பயன்பாட்டினால் இறந்துள்ள பிரபலங்களின் பட்டியல் முடிவில்லா பட்டியலாகவே திகழும். பல பிரபலங்கள் குளியலறையிலோ அல்லது குளிக்கும் தொட்டியில் தான் இறந்துள்ளனர் என்பதை சற்று கூர்ந்து கவனித்தோம் என்றால் தெரியும். பல பிரபலங்களின் சடலங்களை குளியலறையில் இருந்து தான் கண்டெடுத்துள்ளனர்.
பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!!!
மைக்கேல் ஜாக்சன், வைட்னி ஹவுஸ்டன், ஜிம் மோரிசன் மற்றும் பல பிரபலங்களின் சடலங்கள் குளியலறையிலும், குளியலறை தொட்டியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரபலங்கள் அனைவரும் அதிகமான போதைப் பொருளின் பயன்பாட்டினால் இறந்தாலும் கூட, கிளாட் ஃபிரான்கோயிஸ் போன்ற இன்னும் சில பிரபலங்கள் குளியலறையில் மின்சாரம் தாக்கியதால் இறந்துள்ளனர்.
இளம் வயதிலேயே மரணத்தை தழுவிய புகழ் பெற்ற மனிதர்கள்!!!
ஃபிரெஞ்ச் நாட்டு பாப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஒருவர் தன் பாரிஸ் வீட்டு குளியலறையில் தன் உயிரை இழந்துள்ளார். நிமோனியா மற்றும் பல மருந்துகளை உட்கொண்ட காரணத்தினால் இது நடந்திருக்கலாம் என சிலர் நினைத்தனர். இங்கு அப்படி குளியலறையில் உயிரை விட்ட பிரபலங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

மைக்கேல் ஜாக்சன்
பாப் உலகின் அரசனாக கருதப்பட்ட மைக்கேல் ஜாக்சன், தன்னுடைய "திஸ் இஸ் இட்" நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக தன் உயிரை இழந்தார். சர்ஜிகல் அனஸ்தெடிக் ப்ரோபோஃபோல் அதிகமாகி போனதாலே அவர் தன் குளியலறையில் உயிரை விட்டுள்ளார்.

ஆமி வைன்ஹவுஸ்
தன்னுடைய 27 வயதில் மது மற்றும் போதை பொருளுக்கு அடிமையானதால் தன் உயிரை இழந்தார். ஃபாரெவர் 27 குழுமத்தில் ஐவரும் ஒருவராகி போனார்.

ஜிம் மோரிசன்
அவருடைய மரணத்திற்கான காரணத்தை குறிக்கும் எந்த ஒரு பிரேத பரிசோதனை அறிக்கையும் இல்லை. ஆனால் தன் பாரிஸ் வீட்டில் அவர் இறந்து கிடந்துள்ளார்.

கிளாட் ஃபிரான்கோயிஸ்
39 வயது பாப் பாடகரான கிளாட் ஃபிரான்கோயிஸ் தன் பாரிஸ் வீட்டு குளியலறையில் ஒரு பல்பை சரி செய்ய முயற்சி செய்த போது, மின்சாரம் தாக்கி உயிரை இழந்தார்.

எல்விஸ் ப்ரெஸ்லீ
மெம்ஃபிஸில் உள்ள தன்னுடைய க்ரேஸ்லேண்ட் மேன்ஷனில் அதிகப்படியான போதைப் பொருளின் பயன்பாட்டினால் அரசர் எல்விஸ் ப்ரெஸ்லீ இறந்து கிடந்தார்.

வைட்னி ஹவுஸ்டன்
போதைப் பொருட்களால் ஹோட்டல் குளியலறையில் இறந்த பிரபலங்களில் இவரும் ஒருவர்!

லியோனார்ட் ஆல்ஃப்ரெட் ஸ்க்னீட்
லென்னி ப்ரூஸ் என பிரபலமாக அறியப்படும் அமெரிக்க நகைச்சுவை கலைஞர், தன்னுடைய ஹாலிவுட் ஹில்ஸ் வீட்டின் குளியலறையில் பிணமாக கிடந்தார். தன் அருகில் ஒரு ஊசி மற்றும் எறியப்பட்ட பாட்டில் மூடியுடன் நிர்வாணமாக அவர் இறந்து கிடந்தார்.

பிரிட்டனி மர்ஃபி
ஷவரின் கீழ் இவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இவரின் சடலத்தை இவரின் தாய் தான் பார்த்துள்ளார். நிமோனியா மற்றும் பல மருந்துகளை உட்கொண்ட காரணத்தினால் அவர் இறந்துள்ளார்.

ஹீத் லெட்ஜர்
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 28 வயதான இந்த நடிகர் தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம், வலி மற்றும் பொதுவான சளியின் அறிளுரி போன்றவைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 வித விதமான மருந்துகளால் உயிர் இழந்தார்.

ஜுடி கார்லேண்ட்
பலவிதமான விருதுகளை வென்றுள்ள இந்த பன்முக நடிகை, செல்சியாவில் உள்ள அவரின் வாடகை வீட்டு குளியலறையில் பிணமாக கிடந்தார். அளவுக்கு அதிகமான பார்பிட்டுரேட்ஸை உட்கொண்டதால் ஜுடி மரணமடைந்தார்.



Click it and Unblock the Notifications
