Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் ஸ்டைல் புக்!
பொதுவாக ஐஸ்வர்யா ராய் எந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போதும் மிகவும் ஸ்டைலான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். ஏனெனில் அப்போது அவர் சிக்கென்று இருந்தார். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் அவர் பெருத்துவிட்டதால், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அவருக்கு கச்சிதமாக இருக்கும்படியான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து வந்தார். குறிப்பாக அனார்கலி, கவுன் போன்றவற்றையே அணிந்து வருவார்.
அப்படி அணிந்து வரும் ஆடைகளைப் பார்த்தால், மிகவும் பிரபலமான சப்யசாச்சி என்னும் டிசைனர் வடிவமைத்ததாகத் தான் இருக்கும். மேலும் அந்த டிசைனர் வடிவமைத்த உடைகளில் சிவப்பு, கருப்பு மற்றும் கோல்டன் போன்ற நிறங்களையே தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். இதனால் அவர் குண்டாக இருந்தாலும் அவரின் உடையானது அவரது அழகை அதிகரித்து வெளிக்காட்டும்.
என்ன தான் வயசானாலும், உடுத்தும் உடையில் அடக்கம் தேவை என்பது போல், சமீப காலமாக அவரும் சற்று அடக்கஒடுக்கமாகத் தான் அணிந்து வருகிறார். இங்கு அப்படி ஐஸ்வர்யா அணிந்த சப்யசாச்சி உடைகளில் மிகவும் சிறப்பான உடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

சிவப்பு மற்றும் கருப்பு நிற சூட்
ஐஸ்வர்யா அணிந்துள்ள இந்த ஃபுல் ஸ்லீவ் மற்றும் அதிகப்படியான எம்பிராய்டரி கொண்ட சிவப்பு மற்றும் கருப்பு நிற உடையானது சப்யசாச்சி வடிவமைத்ததில் ஒன்று.

கருப்பு மற்றும் வெள்ளை கலந்த லேஸ் அனார்கலி
இந்த அழகான கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த லேஸ் அனார்கலியும் சப்யசாச்சி வடிவமைத்ததே. இந்த உடையில் ஐஸ்வர்யா கொலுகொலுவென்று அழகாக உள்ளார் தானே.

சிவப்பு நிற லெஹெங்கா
ஐஸ்வர்யா இந்த சிவப்பு நிற லெஹெங்காவில் மிகவும் சூப்பராக உள்ளார் தானே. இந்த உடை கூட சப்யசாச்சி வடிவமைத்தது தான்.

லேஸ் புடவை
ஐஸ்வர்யா கேன்ஸ் விழாவிற்கு ஒவ்வொரு வருடமும் தவறாமல் கலந்து கொள்பவர். அந்த வகையில் சமீபத்திய கேன்ஸ் விழாவின் போது சப்யசாச்சி வடிவமைத்த லேஸ் புடவைக்கு ஒயின் நிற வெல்வெட் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

கருப்பு மற்றும் கோல்டன் நிற அனார்கலி கவுன்
ஐஸ்வர்யா ராய் நல்ல நிறம் என்பதால், அவருக்கு கருப்பு நிறமானது அவரது அழகை அதிகரித்துக் காட்டும். அதிலும் இந்த கருப்பு நிற அனார்கலி கவுனானது டெல்லியில் நடந்த கல்யாண் ஜூவல்லரி கடையின் திறப்பு விழாவின் போது அணிந்து வந்த போது எடுத்தது.

சந்தன நிற புடவை
இது விளம்பரம் ஒன்றிற்கு சப்யசாச்சியின் சந்தன நிற லேஸ் புடவையை அணிந்த போது எடுத்தது.

கோல்டன் வேலைப்பாடுகளுடன் கூடிய அனார்கலி கவுன்
இது துபாயில் நடைபெற்ற கல்யாண் ஜூவல்லரி கடையின் திறப்பு விழாவிற்கு கோல்டன் நிற வேலைப்பாடுகளுடன கூடிய அனார்கலி கவுன் அணிந்து வந்த போது எடுத்தது. இதில் இவர் சூப்பராக உள்ளார் தானே!

சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு கலந்த அனார்கலி சூட்
இது பூனாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு ஐஸ்வர்யா ராய் சப்யசாச்சி வடிவமைத்த சிவப்பு, வெள்ள மற்றும் கருப்பு கலந்த அனார்கலி உடையை தேர்ந்தெடுத்து அணிந்து சென்ற போது எடுத்தது.

கருப்பு மற்றும் கோல்டன் புடவை
இது பிரசவத்திற்கு பின் ஐஸ்வர்யா 2013 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவிற்கு கருப்பு மற்றும் கோல்டன் புடவையை அணிந்து வந்த போது எடுத்தது.

இலை பச்சை நிற அனார்கலி
இந்த இலை பச்சை நிற அனார்கலி கவுன் ஐஸ்வர்யாவிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது தானே. இந்த அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடை கூட சப்யசாச்சி வடிவமைத்ததே ஆகும்.

சிவப்பு நிற வெல்வெட் அனார்கலி
இதுவும் கல்யாண் ஜூவல்லரியின் நிகழ்ச்சியின் போது எடுத்தது. இந்த நிகழ்ச்சிக்கும் ஐஸ்வர்யா சப்யசாச்சியின் சிவப்பு நிற வெல்வெட் அனார்கலியை அணிந்து வந்திருந்தார்.

கருப்பு மற்றும் கோல்டன் நிற லெஹெங்கா
இந்த கருப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த லெஹெங்கா கூட சப்யசாச்சி டிசைனர் வடிவமைத்தது தான். மேலும் இந்த உடைக்கு மேலே கருப்பு நிற அலெக்சாண்டர் மெக்குயின் ஜாக்கெட்டை ஐஸ்வர்யாக அணிந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
