Latest Updates
-
ஜூன் 30-ல் நிகழும் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
உலகின் 4 ஆவது 'சூப்பர்' பேரழகியான ஐஸ்வர்யாவின் ஸ்டைல் புக்!
சமீபத்தில் உலகிலேயே மிகவும் அழகான பெண் யார் என்ற சர்வே நடைபெற்றது. அதில் நான்கு மில்லியனுக்கு மேலான மக்கள், உலகில் உள்ள மிகவும் அழகான பெண்களின் பட்டியலில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு வாக்கு அளித்துள்ளனர். இப்பட்டியலில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை மோனிகா பெலூஸி, கேட் அப்டன் மற்றும் ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நான்காவது இடமாக இந்திய அழகியான ஐஸ்வர்யா ராய் இடம் பெற்றுள்ளார்.
இது இவரது அழகிற்கு மட்டுமின்றி, புத்திசாலித்தனத்திற்கும் மற்றும் இத்தனை வயதாகியும் பல வெற்றிகளைப் படைத்ததாலும் கிடைத்தது. இத்தகையவற்றில் சிறந்தவராக விளங்கும் ஐஸ்வர்யா ராய், திருமணமாகி குழந்தை பெற்ற பின்னர் சற்று எடை போட்டிருந்தாலும், அப்போதும் மிகவும் அழகான உடையை தேர்ந்தெடுத்து பல விழாக்களில் தைரியமாக கலந்து கொண்டார்.
இதுப்போன்று வேறு: 'ஸ்டைல்ஸ்மா'... 2013-ல் ஸ்ருதி இப்படித்தான் ஜொலித்தார்!!
மேலும் ஐஸ்வர்யா ராய்க்கு அனைத்து வகையான உடைகளுமே இன்னும் பொருத்தமாக, அவரது அழகை அதிகரித்து வெளிப்படுத்துகிறது. இங்கு அப்படி தனது அழகால் பல மில்லியன் மக்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் பச்சனின் சில ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

உலக அழகி உடையில் ஐஸ்வர்யா
இது ஐஸ்வர்யா 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வாங்கும் போது எடுத்தது.

நீச்சல் உடையில் ஐஸ்
இது உலக அழகி பட்டத்தின் போது, ஐஸ்வர்யா நீச்சல் உடையில் வந்த போது எடுத்தது.

83 ஆவது ஆஸ்கரில் ஐஸ்வர்யா
இது 83-வது ஆண்டு அகாடமி விருதின் போது, மிகவும் அழகான உடையணிந்து, ஸ்டைலோடு நடக்கும் போது எடுத்தது.

எம்பிராய்டரி கவுனில் ஐஸ்வர்யா
இது 2013 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது ஐஸ்வர்யா ராய் அணிந்த உடைகளில் வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட இந்த அனார்கலி கவுனும் ஒன்று.

கருப்பு நிற புடவையில் ஐஸ்வர்யா ராய் பச்சன்
இது ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் சப்யசாச்சி டிசைன் உடையான கருப்பு நிற எம்பிராய்டரி புடவையில் வந்த போது எடுத்தது.

கருப்பு மற்றும் சாம்பல் நிற லேஸ் கவுனில் ஐஸ்
ஐஸ்வர்யா ராய் பிரசவத்திற்கு பின் முதலில் பங்கு கொண்ட விழா கேன்ஸ் 2013 ஆகும். இந்த விழாவிற்கு இவர் கருப்பு மற்றும் சாம்பல் நிற லேஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். இதில் இவர் குண்டாக இருந்தாலும், அவரது முகப் பொலிவு குறையவில்லை.

கோல்டன் புடவையில் ஐஸ்வர்யா
இது பிரசவத்திற்கு பின் ஐஸ்வர்யா கோல்டன் நிற புடவை அணிந்த போது எடுத்தது. இதில் இவர் தங்க சிலை போன்று உள்ளார்.

மெர்மெய்டு பாவாடையில் ஐஸ்வர்யா ராய்
இது ஐஸ்வர்யா ராய் பச்சன், வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற மெர்மெய்டு பாவாடையில் வந்த போது எடுத்து.

வெள்ளை நிற பிரிண்ட்டட் ட்ரஸில் ஐஸ்
ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு இந்த வெள்ளை நிற முழங்கால் அளவுள்ள பூப்போட்ட பிரிண்ட்டட் உடை ஒரு ராயல் லுக்கை கொடுக்கிறது.

நீல நிற மெர்மெய்டு கவுனில் ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் பச்சனின் சிறப்பு தோற்றத்தில் இந்த நீல நிற கவுன், இவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

கவுரி மற்றும் நைனிகா கவுனில் ஐஸ்
ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்துள்ள இந்த ஆடையானது கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்தது.

அபு சந்தீப் உடையில் ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்திருக்கும் இந்த உடை அபு ஜானி மற்றும் சந்தீப் கோஷல் வடிவமைத்த அனார்கலி உடை.

கருப்பு சூட்டில் ஐஸ்
இது ஐஸ்வர்யா ராய் பச்சன் கருப்பு நிற சூட்டில் வந்த போது எடுத்தது.

பச்சை நிற அனார்கலி கவுனில் ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் பச்சனின் மற்றொரு சிறப்பான தோற்றம் தான் இந்த பச்சை நிற அனார்கலி கவுன். அந்த ஆடையில் இவர் தேவதை போன்று உள்ளார்.

இளமை திரும்பிய ஐஸ்வர்யா
இது கேன்ஸ் 2013 இல் இரண்டாவது நாளன்று இந்த கருப்பு நிற உடையில் வந்த போது எடுத்தது.

ஜேடு லெஹெங்காவில் ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் அணிந்திருக்கும் இந்த உடை தான் ஜேடு லெஹெங்கா.

க்யூட் ஐஸ்
இது லோரியல் பாரிஸ் விழாவில் கலந்து கொள்ளும் போது நீளமான கருப்பு நிற லேஸ் கொண்ட மேக்ஸி கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

சிவப்பு நிற ஃபுல் ஸ்லீவ் உடையில் ஐஸ்வர்யா
இது கல்யாண் ஜூவல்லரியின் 56 ஆவது ஷோரூமை திறக்கும் போது சிவப்பு நிற ஃபுல் ஸ்லீவ் கொண்ட உடையில் ஐஸ்வர்யா வந்த போது எடுத்தது.

அஹானா தியோலின் திருமண வரவேற்பில் ஐஸ்
இது அஹானா தியோலின் திருமண வரவேற்பின் போது நியான் பிங்க் நிற சுடிதார் அணிந்து வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications