Latest Updates
-
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
2014 ஏசியா விசன் விருது விழாவில் அனைவரையும் சொக்க வைக்கும்படி வந்த ஐஸ் மற்றும் கரீனா!!!
துபாயில் 2014 ஆம் ஆண்டிற்கான ஏசியா விசன் விருது விழாவானது நடைபெற்றது. இந்த விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் அழகு தேவதைகளான ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் கரீனா கபூர் கலக்கலாக வந்திருந்தனர். அதிலும் அவர்கள் அணிந்து வந்த உடை தான் அவர்களை படு அசத்தலாக வெளிக்காட்டியது.
அதில் ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற அனார்கலியிலும், கரீனா கபூர் சந்தன நிற புடவையிலும் வந்திருந்தார்கள். இப்போது 2014 ஆம் ஆண்டு ஏசியா விசன் விருது விழாவிற்கு வந்த ஐஸ்வர்யா மற்றும் கரீனா மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

ஐஸ்வர்யா ராய்
இது ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த சிவப்பு நிற அனார்கலி உடை. இந்த உடையானது அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா என்னும் டிசைனர்கள் வடிவமைத்தது.

ஐஸ்வர்யாவின் அனார்கலி
ஐஸ்வர்யா அணிந்து வந்த சிவப்பு நிற அனார்கலியானது அதிக அளவில் எம்பிராய்டரி செய்யப்பட்டது. அதிலும் அந்த உடையில் உள்ள கழுத்து டிசைன் தான் இந்த உடையையே அழகாகவும், ஸ்டைலாகவும் வெளிக்காட்டுகிறது.

ஐஸ்வர்யாவின் மேக்கப்
ஐஸ்வர்யா சற்று அதிகமாகவே மேக்கப் போட்டு வந்திருந்தார். அதிலும் அவர் போட்டு வந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு போட்டு வந்த ஸ்மோக்கி மேக்கப் தான், அவரை பளிச்சென்று வெளிக்காட்டியது.

மகளுடன் ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ஏசியா விசன் விருது விழாவிற்கு தனது மகளை அழைத்து வந்திருந்தார். படத்தில் ஐஸ்வர்யா தூக்கியிருக்கும் குழந்தை தான் ஐஸ்வர்யாவின் மகள்.

கரீனா கபூர்
கரீனா கபூர் சந்தன நிற புடவையை அணிந்து வந்திருந்தார். இவர் அணிந்து வந்த புடவையை வடிவமைத்தவர் விக்ரம் பட்னிஸ் என்னும் டிசைனராவார்.

நெட் புடவை
கரீனா அணிந்து வந்த நெட்டட் புடவையில் ஆங்காங்கு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், புடவையில் முனைகளில் கோல்டன் நிற எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கும்.

கரீனாவின் நடனம்
கரீனா கபூர் இந்த விருது மேடையில் மிகவும் அழகாக நடனம் ஒன்றையும் ஆடினார்.

கரீனாவின் மேக்கப்
கரீனா கபூர் இந்த புடவைக்கு பிங்க் நிற பிளஷ், கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் மற்றும் உதடுகளுக்கு லைட்டாக ப்ரௌன் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார். மேலும் காதுகளுக்கு மிகவும் பெரிய சில்வர் காதணியை அணிந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
