Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
மலட்டுத்தன்மையை விரட்டியடித்த 5 பிரபலமான நட்சத்திரங்கள்!!!
இப்போது நாம் பார்க்க போகும் சில நட்சத்திரங்கள், தங்கள் துறையில் பெரிதும் சாதித்தவர்கள். புகழ் மட்டுமல்லாது பெரும் செல்வத்தையும் கொண்டுள்ளனர். ஆனால் பணமும் புகழும் இருந்தால் விட்டால் மட்டும் அவர்கள் வாழ்க்கை சுலபமாகி விடுமா? அவர்களும் அவர்களின் வாழ்க்கையில் பல கஷ்ட காலத்தை கடந்து வந்திருப்பார்கள்.
மலட்டுத்தன்மை என்பதும் கூட அந்த போராட்டத்தில் ஒரு அங்கமாக இருந்திருக்கலாம். அப்படி மலட்டுத்தன்மை பிரச்சனையோடு போராடிய 5 நட்சத்திரங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். அதில் சிலர் IVF முறைப்பாடு குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர் மற்றும் சிலர் குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு: பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!!!

ஆமிர் கான் மற்றும் கிரண் ராவ்
டிசம்பர் 1, 2011 என்பது இந்த ஜோடிகளுக்கு அவர்களின் வாழ்க்கையின் சந்தோஷமான தினமாக இருக்கும். சில கஷ்டங்களுக்கு பிறகு, நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு, கிரணும் ஆமிரும் IVF (இன்-விட்ரோ ஃபெர்டிலைசேஷன்) முறை மூலம் சர்ரகசி (வேறொரு ஒரு பெண் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்வது) வழியாக தங்களின் முதல் ஆண் குழந்தையைப் பெற்றனர். சில மருத்துவ குறைபாடுகள் இருந்ததால், மருத்துவர்கள் அவர்களுக்கு IVF வழிமுறையை பரிந்துரைத்தார்கள்.

மார்சியா கிராஸ்
30 வயதை கடக்கும் பெண்களுக்கு கருவளம் குறையத் தொடங்கும். அதனால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்கள் அதிகமாகும். அமெரிக்க நடிகையான மார்சியா கிராஸிற்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. தாய்மை அடைய அவர் விரும்பிய போது அவருக்கு வயது 40. அதனால் திருமணம் முடிந்த கையேடு IVF வழிமுறையை தேர்ந்தெடுத்தார். பிப்ரவரி 2007-ல் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

ப்ரூக் ஷீல்ட்ஸ்
ப்ரூக் ஷீல்ட்ஸ் என்பவர் ஒரு அமெரிக்க மாடல் மற்றும் நடிகையாவார். தன் முதல் ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் முன், 7 முறை IVF சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார். அவர் வாழ்க்கையின் மிகவும் இருண்ட அத்தியாமாக அது விளங்கியது. பேற்றுக்குப் பின் பல சிக்கல்களை அவர் சந்திக்க நேரிட்டது. தன் குழந்தையின் தேவைகளுக்கு எதிர் செயலாற்ற முடியாத இயலாமையை கொண்டிருந்தார். இதுவே அவரை மனதளவில் பாதித்தது. பின் மெதுவாக, மருத்துவர்களின் உதவியோடு, இந்த மோசமான நிலையை விட்டு வெளியே வந்து, இப்போது ஒரு பாசமிக்க தாயாக உள்ளார்.

செலின் டியான்
இவர் கனடா நாட்டை சேர்ந்த ஒரு பாடகி. ரீன் ஏன்ஜலில் என்பவரை டிசம்பர் 17, 1994-ல் மணம் முடித்தார். பல முறை கர்ப்பம் தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியை சந்தித்தார். கடைசியாக இந்த தம்பதிகள் IVF முறையை பின்பற்றினார்கள். 6 முறை IVF சிகிச்சைக்கு ஆளானார் செலின். இது ஒரு உணர்ச்சி பூர்வமான பயணமாக அமைந்தது அவருக்கு. பின், அக்டோபர் 23, 2010-ல் ஆரோக்கியமான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

ஹக் ஜேக்மேன்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார் இவர். ஏப்ரல் 11, 1996-ல் டெபோரா-லீ ஃபர்ன்ஸ் என்பவரை மணம் முடித்தார். இந்த தம்பதிக்கு தங்கள் இரத்த தொர்பு மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை. டெபோரா இரண்டு முறை கருவுற்ற போதிலும், இரண்டு முறையுமே கருச்சிதைவு ஏற்பட்டது. பின்னர் ஆஸ்கர் மாக்சிமில்லியன் மற்றும் அவா எலியட் என்ற குழந்தைகளை அவர்கள் தத்தெடுத்துக் கொண்டார்கள்.



Click it and Unblock the Notifications
