Latest Updates
-
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரபலங்கள்!!!
குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் மிகவும் ஆரோக்கியமானது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. மேலும் குழந்தைகளின் பசியைப் போக்கும் ஒரு அடிப்படை வழியும் தாய்ப்பால் கொடுக்கும் முறை தான். இதனால் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தாய்க்கும் மிகவும் நல்லது.
ஆனால் நிறைய பெண்கள் தாய்ப்பால் கொடுத்தால், அழகு குறையும் என்று தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருந்தால், தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பொதுவாக பிரபலங்கள் தான் அழகின் மீது அக்கறை கொண்டு, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பார்கள். ஆனால் நிறைய பிரபலங்கள் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் எவ்வளவு தான் குழந்தையை வளர்க்க ஆள் வைத்திருந்தாலும், தாய்ப்பால் கொடுக்கும் விஷயத்தில் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி வருகின்றனர். இங்கு அப்படி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்த்து வரும் சில பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளோம்.

ஷகிரா (Shakira)
பாப் ஸ்டார் ஷகிரா, எவ்வளவு தான் பிரபலமாக இருந்தாலும், அழகு தான் முக்கியம் என்று நினைக்காமல், தன் குழந்தையின் ஆரோக்கியம் தான முக்கியம் என்று நினைத்து, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்த்து வந்தார்.

மிராண்டா கெர் (Miranda Kerr)
மிராண்டா கெர் தன் குழந்தையை 2011 ஆம் ஆண்டு பெற்றெடுத்தார். சூப்பர் மாடலான இவர் தன் குழந்தையை தாய்ப்பால் கொடுத்து ஆரோக்கியமாக வளர்த்து வந்தார்.

ஜூலி பௌன் (Julie Bowen)
ஜூலி பௌனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் இருவர் இரட்டையர்கள். மிகவும் மார்டனான இவர் தனது மூன்று குழந்தைகளுக்குமே, தாய்ப்பால் கொடுத்து தான் வளர்த்து வந்தார்.

கவுர்ட்னே கர்தாஷியன் (Kourtney Kardashian)
இவர் கூட தாய்ப்பால் கொடுத்து தான் தன் குழந்தையை வளர்த்து வந்தார்.

மேகி கெல்லன்ஹால் (Maggie Gyllenhaal)
மேகி கெல்லன்ஹாலுக்கு மற்றவர்களை விட, தன் குழந்தையின் ஆரோக்கியம் தான் முக்கியம். இதனால் தான் இவர் எந்த ஒரு விழாவிற்கு வந்தாலும், தன் குழந்தையை உடன்அழைத்துக் கொண்டு, பசி ஏற்படும் போது, தாய்ப்பால் கொடுத்து பசியை ஆற்றி வந்தார்.

பிங்க் (Pink)
ராக் ஸ்டாரான பிங்க், தனது குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று, தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் சிகரெட், மது போன்றவற்றை விடுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு இருந்தார்.

ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie)
ஹாலிவுட் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலியும், தன் இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து தான் வளர்த்து வருகிறார். மேலும் இப்படி குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் போது, எவ்வளவு பெரிய கஷ்டமான மனநிலையும் சரியாகிவிடுவதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஜெனீபர் கார்னர் (Jenifer Garner)
மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயான ஜெனிபர் கார்னர், தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் இருந்து, குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஒவ்வொரு செயலையும் ரசித்து செய்து வருகிறார் என்று பேட்டியின் போது சொன்னார்.

கேட் பிளாஞ்செட் (Cate Blanchett)
2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற கேட் பிளாஞ்சசெட்டும் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தான் வளர்த்து வந்தாராம்.

பியான்ஸ் (Beyonce)
பாப் ஸ்டாரான பியான்ஸ் தன் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்று வரும் போது, அதை விட முக்கியமான வேறு செயல் வேறு ஒன்றும் இல்லை என்று இருப்பவர். இதற்காக இவர் பல ரெகார்டிங்கை புறக்கணித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











