Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த தீபாவளிக்கு உங்க வீட்டுல அதிர்ஷ்ட மழை கொட்ட... இந்த 4 மசாலாவை 'இப்படி' யூஸ் பண்ணுங்க...ஜாலியா இருங்க!
அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் கொண்டாடும் ஓர் பண்டிகை தீபாவளி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடும் பண்டிகையை இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது. இந்த நல்ல நாளில் அதிர்ஷ்டமும் உங்கள் வீட்டை தேடி வந்தால், எப்படி இருக்கும்?
தீபாவளி நெருங்கிவிட்டதால் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களை நாம் எவ்வளவு விரும்புகிறோமோ, அதே நேரம் லக்ஷ்மி தேவி மற்றும் விநாயகரின் பக்தர்கள் ஆரோக்கியமான, செல்வம் மற்றும் வளமான வாழ்க்கைக்கு ஆசீர்வாதம் தேடும் நேரமாக இது இருக்கும். செல்வ செழிப்போடு இந்த பண்டிகையை கொண்டாட சில வழிகள் உள்ளன.

ஆம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் அலையை உங்கள் வீட்டிற்குக் கொண்டுவரும் சில சமையலறை மசாலாப் பொருட்கள் உள்ளன. அவை என்னென்ன மசாலாப் பொருட்கள் என்றும், இந்த தீபாவளிக்கு அந்த மசாலாப் பொருட்களை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
குங்குமப்பூ
உங்கள் அழகு பராமரிப்பில் மிகவும் முக்கிய பொருளாக இருக்கும் குங்குமப்பூ, அதன் நன்மைகள் மற்றும் சுவைக்காக அறியப்படுகிறது. உங்கள் உடலுக்கும் சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குவது மட்டும் இல்லாமல், ஆன்மிக ரீதியாகவும் இது உங்களுக்கு நல்லது.
தெய்வத்திற்கு குங்குமப்பூவைச் சமர்ப்பிப்பது குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் குங்குமப்பூ தூய்மை, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக அறியப்படுகிறது.
கிராம்பு
தீபாவளி சமையல் குறிப்புகளில் கிராம்பு மசாலா, அவற்றின் நறுமணம் மற்றும் சுவையை மேம்படுத்தும் குணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது பாதுகாப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை அடையாளப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
எனவே, ஒரு சில கிராம்புகளை ஒரு பணப்பையில் வைத்திருப்பது அல்லது வீட்டை விட்டு வெளியேறும் முன் கிராம்புகளை மென்று சாப்பிடுவது செழிப்பைக் கொண்டுவரும். உண்மையில், இந்த தீபாவளியன்று நீங்கள் கிராம்புகளை கற்பூரத்துடன் எரித்து எதிர்மறை ஆற்றல்களை அகற்றி மகிழ்ச்சியையும் அமைதியையும் ஈர்க்கலாம்.
ஏலக்காய்
ஏலக்காய் என்று அழைக்கப்படும் இலாய்ச்சி என்பது தீபாவளியின் போது இனிப்புகள் மற்றும் பானங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நறுமண மசாலா பொருள். தீபாவளி இனிப்பு பிரசாதத்தை தயாரிப்பதில் இது மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்கான மற்றொரு வழி பணப்பையில் சில ஏலக்காய் காய்களை வைத்திருப்பது, இது நிதி மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பப்படுகிறது. அதனால், தீபாவளி வாரங்களில் உங்கள் பணப்பையில் ஏலாக்காயை வைத்திருந்தால் அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வருமாம்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை என்றும் அழைக்கப்படும் டால்சினி, மசாலா அரிசி உணவுகள் மற்றும் இனிப்புகள் உட்பட பல்வேறு தீபாவளி சமையல் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது அரவணைப்பு, செல்வம் மற்றும் நல்வாழ்வுடன் தொடர்புடையது.
உண்மையில், இலவங்கப்பட்டையின் முழு குச்சிகளையும் பணப்பையில் அல்லது பாதுகாப்பாக வைத்திருப்பது நிதி வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications
