Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
500 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை நாளில் நிகழும் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது
Jupiter Transit On Akshay Tritiya After 500 Years: வேத ஜோதிடத்தின் படி, 12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் மேஷ ராசிக்கு செல்லவிருக்கிறார். அதுவும் இந்த குருப் பெயர்ச்சியானது 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழ்கிறது. அதுவும் குரு பகவான் மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்கிறார். இந்நிலையில் அந்த குருப் பெயர்ச்சி தினத்தில் தான் மிகவும் புனிதமான நாளாக கருதப்படும் அட்சய திருதியையும் வருகிறது.
இப்படி அட்சய திருதியை தினத்தில் குருப் பெயர்ச்சி நிகழ்வதால், இந்த குரு பெயர்ச்சி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நிகழ்வானது 500 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. குரு பகவான் மேஷ ராசிக்குள் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக இந்த குருப் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் அற்புதமான நிதி நன்மைகள், பதவி உயர்வு, வெற்றி போன்றவற்றைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். மறுபுறம் அட்சய திருதியை அன்று சுக்கினால் மாளவிய ராஜயோகதம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். ஆடை, ஆபரணங்கள் மூலம் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். கலையில் ஆர்வம் அதிகரிக்கும்.
இது தவிர குருவின் நிலையால் அடுத்த ஒரு ஆண்டு காலத்தில் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்ப மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். இருப்பினும் பணத்தை செலவழிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தேவையற்ற செலவுகளை செய்தால், நிதி நெருக்கடியை சந்திக்கக்கூடும். எனவே பண விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது என்று கூறலாம். பணிபுரிபவர்கள் மற்றும் வணிகம் செய்பவர்கள், நல்ல லாபத்தைத் தரும் பயணங்களை மேற்கொள்வார்கள். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது. குடும்பம் மற்றும் சமூகத்தில் உங்களின் பெயரும் புகழும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு ஆண்டு மங்களகரமாக இருக்கும். சட்ட விஷயங்களில் சிக்கியிருந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். இக்காலத்தில் வெற்றிகள் வந்து குவியும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தொழில் மிகவும் சிறப்பாக இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். மிலிட்டர், போலீஸ் துறையில் இருப்பவர்கள் இக்காலத்தில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வீடு மற்றும் நிலத்தில் முதலீடு செய்ய நினைத்திருந்தால், அதை அட்சய திருதியை நாளில் செயல்படுத்துவது நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

