Latest Updates
-
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
ரத்தன் டாடாவின் உறவினரான இவர்தான் இந்தியாவின் முதல் விமானி... இந்திய விமான போக்குவரத்தின் தந்தையும் இவர்தான்!
இந்தியா தற்போது விமானப் போக்குவரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து தொடங்கியதே பெரிய வரலாறாகும். இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்? அதேசமயம், இந்தியாவில் வணிக பைலட் உரிமம் பெற்ற முதல் நபர் யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
34 வயதிலேயே டாடா சன்ஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் மாபெரும் லெஜெண்ட் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜூலை 29, 1904 இல் பிறந்த ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாதான், இந்தியாவில் முதல் ஏர்மெயில் சேவையை அறிமுகப்படுத்திய பிரபல விமானி மற்றும் தொழிலதிபர் ஆவார். இந்த சேவைதான் பின்னர் நம் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா என்று மாறியது.

இந்தியாவின் விமானப் போக்குவரத்து வரலாற்றை ஏர் இந்தியாவை தவிர்த்து எழுத முடியாது, அதன் உருவாக்கத்திற்கு இந்தியா எப்போதும் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடாவுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ஏர் இந்தியாவின் முதல் விமானம் அக்டோபர் 15, 1932 இல் பறக்கத் தொடங்கினாலும், அதன் தொடக்கம் உண்மையில் வரலாற்றில் சில ஆண்டுகளுக்கு முன்பேத் தொடங்குகிறது. ஏர் இந்தியாவின் வரலாறு 1929-லிருந்து தொடங்குகிறது, அப்போதுதான் ஜேஆர்டி டாடா இந்தியாவின் முதல் உரிமம் பெற்ற விமானி ஆனார்.
ஜே.ஆர்.டி டாடா அவரது 15 வயதிலேயே பிரான்சில் ஒரு விமானத்தில் ஜாய்ரைடு செய்தார், அப்போதே அவர் ஒரு பைலட் ஆக முடிவு செய்தார். 1932 ஆம் ஆண்டில், ஜே.ஆர்.டி இந்தியாவில் விமானத் துறையின் முன்னோடியாக மாறினார், அவர் கராச்சியிலிருந்து பம்பாய்க்கு தொடக்க விமானத்தில் புறப்பட்டார்.
இந்தியாவின் முதல் விமானம்
ஜே.ஆர்.டி.டாடாவுக்கு 24 வயது இருக்கும் போது, பறக்கும் உரிமம் பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். அப்போது பம்பாயின் விமானக் க்ளப்பில் அவர் உறுப்பினராகி இருந்தார். இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் முதன் முதலில் விமானத்தை இயக்கியவர் என்ற பெருமையையும் ஜே.ஆர்.டி.டாடாஅடைந்தார். இன்று ஏர் இந்தியா என நாம் அறியும் முதல் பயணத்திற்கு அவர்தான் கேப்டனாக இருந்தார், கடந்த காலத்தில் அது டாடா ஏர் சர்வீசஸ் என்று அழைக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் வரலாற்று சிறப்புமிக்க விமானம் அக்டோபர் 15, 1932 அன்று கராச்சியின் ட்ரிஹ் ரோடு ஏரோட்ரோமில் இருந்து புறப்பட்டு இறுதியாக மும்பையில் உள்ள ஜூஹூ ஏர்ஸ்ட்ரிப்பில் தரையிறங்கியது. இந்த பயணம் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு விரைவாக இடம்பெயர்வது மட்டுமின்றி, இது விமானப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருந்தது. இது இந்திய விமானப் பயணத்தின் போக்கை மாற்றியது.
இதுபற்றிய டாடா குழுமத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் "1932 ஆம் ஆண்டு ஒரு அற்புதமான அக்டோபர் விடியலில், அவர் கராச்சியிலிருந்து ஒரு புஸ் மோத்தில் வானத்தில் பறந்தார், அப்போது 'மணிக்கு 100 மைல்கள் திகைப்பூட்டும்' வேகத்தில் பம்பாய் நோக்கி பறந்தார்" என்று பதிவிட்டது.
ஜே.ஆர்.டி டாடாவுக்கும் ரத்தன் டாடாவுக்கும் உள்ள தொடர்பு
ஜே.ஆர்.டி டாடா மற்றும் ரத்தன் டாடா ஆகியோர் டாடா குடும்த்தில் வெவ்வேறு வழிகளில் வந்த தொலைதூர உறவினர்கள். 1991 இல், ஜே.ஆர்.டி.டாடா, டாடா குழுமத்தின் புதிய தலைவராக ரத்தன் டாடாவின் பெயரை போர்ட் மீட்டிங்கில் முன்மொழிந்தார். நேர்காணல் ஒன்றில் அன்றைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்த ரத்தன் டாடா, குழுமத்தின் உயர் பதவிக்கு தனது பெயரை முன்மொழிந்தபோது ஜே.ஆர்.டி குழு கூட்டத்தில் வெளிப்படுத்திய உணர்வுகளை விவரிக்க முடியாது என்று கூறினார். ரத்தன் டாடாவின் திறமையையும், உயர்ந்த எண்ணங்களையும் JRD டாடா முன்பே அறிந்திருந்தார், அதனால்தான் டாடா குழுமத்தின் உயர் பொறுப்புக்கு ருட்யா பெயரை அவர் முன்மொழிந்தார்.



Click it and Unblock the Notifications
