Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நடந்து செல்லும்போது சாலையில் பணம் கிடைத்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
நீங்கள் செல்லும் வழியில் ரூபாய் நோட்டுகள் அல்லது சில்லறைகள் சாலையில் பார்த்ததுண்டா? அப்படி அதை பார்க்கும்போது பலரது மனதில் குழப்பம் எழும்.. அதை எடுக்கலாமா? வேண்டாமா? அப்படி எடுத்தால் இந்தப் பணத்தை என்ன செய்வது? என பலவிதமாக சிந்திப்பார்கள்..
சிலர் அதை எடுத்து தங்களிடம் வைத்திருக்கிறார்கள், சிலர் அதை ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள் அல்லது கோயிலுக்கு காணிக்கையாக
கொடுக்கிறார்கள்.. ஆனால், சாலையில் கிடக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. சாலையில் பணம் எடுப்பது நல்லதா கெட்டதா? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

சாலையில் யாரோ ஒருவர் தவறவிட்ட அல்லது தொலைத்த பணத்தை நிச்சயமாக எடுக்கக்கூடாது. ஆனால் நீங்க செல்லும் வழியில் பணம் இருந்தால் அதற்கு ஆன்மீக ரீதியான அர்த்தம் உள்ளது.. ஜோதிட சாஸ்திரங்கள் என்ன சொல்லுகிறது தெரியுமா?
1. சாலையில் விழுந்த பணத்தை, குறிப்பாக நாணயங்களை எடுப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சாலையில் ஒரு நாணயத்தை கண்டறிவது உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.. அதுமட்டுமல்லாமல் இப்போது மகாளய பட்சம் நடக்கிறது.. இந்த நேரத்தில் நீங்கள் சாலையில் கசையோ அல்லது பணத்தையோ பார்த்தால் அது உங்களுடைய முன்னோர்களின் நேரடி ஆசீர்வாதத்தை பெற்றதற்கு சமம் என்கிறது சாஸ்திரங்கள்..
2. நீங்கள் சாலையில் செல்லும் நேரத்தில் கீழே விழுந்த ஒரு நாணயம் உங்கள் கண்ணில் பட்டால், உங்கள் வேலையில் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். மற்றும் நீங்கள் விரைவில் ஒரு புதிய வேலையைத் தொடங்கலாம் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம், மேலும் இந்த வேலை உங்களுக்கு வெற்றியையும் பணத்தையும் நிச்சயமாக கொண்டு வரும்.
3. எதிர்பாராத நேரத்தில் நீங்கள் சாலையில் பணம் ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை பார்த்தால் இறையருள் உங்களுக்கு இருக்கிறது என்றும் விரைவிலேயே மிக நல்ல செய்தியைப் பெறுவீர்கள் என்றும் அர்த்தம்.
4. கத்தையாக அல்லது பர்ஸ் நிறைய பணம் கிடைத்தால், பூர்வீக சொத்து கிடைக்கும் என்று அர்த்தம். ஆனால் தொகை கொஞ்சம் அதிகமாக இருந்தால் உரியவரிடம் கொடுத்து விடுங்கள்.. அதுவே உங்களுக்கு மிக பெரிய அதிர்ஷடத்தை தேடி தரும்..
5. திடீரென்று கீழே விழுந்த பணம் கிடைத்தால், அது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்கள் நடக்க போகிறது என்று அர்த்தம்.. இதனுடன், நீங்கள் சில நிதி சிக்கல்களால் போராடிக் கொண்டிருந்தால், திடீரென்று எங்காவது பணத்தைப் பார்த்தால், அது நல்ல காலம் வரப்போகிறது என்பதைக் குறிக்கிறது.
6. ஆனால் வழியில் பணத்தை பார்ப்பது ஒரு நல்ல சகுனம் என்றாலும் இந்த பணத்தை வீண் செலவு செய்யாமல் வைத்திருப்பது நல்லது. சாலையில் நம் கண்ணில் படும் சில்லறைகளோ அல்லது நோட்டுக்களோ நமக்கு சொந்தம் இல்லாதவை அவற்றை உரியவரிடம் கொண்டு சேர்ப்பதே அறம்.
7. அதை அதிர்ஷ்டம் என வைத்துக்கொள்வது அறம் இல்லை. ஆகவே அந்த தொகை சிரிய தொகையாக இருந்தால் பிரச்சனை இல்லை.. ஆனால் கொஞ்சம் அதிகமான தொகையாக இருந்தால் அதற்கு உரியவரிடம் தேடிக் கொண்டுபோய் கொடுத்து விடுங்கள்.. அவர் அதை மருத்துவ செலவுக்காகக்கூட வைத்திருக்கலாம்.. அப்படி செய்வதினால் உங்களுக்கு நல்லதே நடக்கும் என்று சாஸ்திரங்கள் கூருகின்றன..



Click it and Unblock the Notifications
