Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்தியாவின் முதல் விமானம் எந்த ஊரில் பறந்தது தெரியுமா? அதன் வேகம் எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!
தற்போது இந்திய பொருளாதாரரீதியாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவிலிருந்து உலகின் அனைத்து மூலைகளுக்கும் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் பயணிக்கும் அளவிற்கு இந்தியாவின் விமானத்துறை மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவிலிருந்து இப்போது தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் பறந்தாலும் இந்தியாவில் முதல் விமானம் எப்போது, எங்கு பறந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின் முதல் விமானத்தை ஒட்டியது யார்? அது எப்படிப்பட்ட விமானம்? இந்த கேள்வியெல்லாம் நமக்குள் எழுந்தாலும் அதற்கு பதில் கிடைப்பது கடினம்தான். இந்த பல கேள்விகளுக்கான பதில்களைதான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்தியாவில் பறந்த முதல் விமானம்?
இந்தியாவில் முதன்முதலில் பறந்த விமானம் ஹம்பர்ட் பைபிளேன், இதுதான் இந்தியாவிற்கு வந்த முதல் விமானமும் கூட. அதன் முதல் பயணத்தில், அது 6 மைல்கள் மட்டுமே பறந்தது. அதன் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால், "வேகமாக ஓடுபவர் கூட அதை வெல்ல முடியும்" என்று மக்கள் கேலி செய்தனர். இருப்பினும், இந்த எளிமையான விமானம் இந்தியாவில் விமான வரலாற்றின் தொடக்கத்தைக் குறித்தது.
இந்தியாவில் முதல் விமானம் எங்கு பறந்தது?
இந்த வரலாற்று சிறப்புமிக்க விமானப் பயணம் பிப்ரவரி 18, 1911 அன்று உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் (தற்போதைய பிரயாக்ராஜ்) நடந்தது. விமானம் அலகாபாத்திலிருந்து புறப்பட்டு, வெறும் 13 நிமிடங்களில், 6 மைல்கள் (9.6 கிமீ) தூரத்தை கடந்து நைனியில் தரையிறங்கியது. ஹம்பர்ட் பைபிளேன் என்ற அந்த விமானம், இந்தியாவில் பறந்த முதல் விமானமாக மாறியது மட்டுமல்லாமல், இந்தியில் விமானப் போக்குவரத்திற்கு தொடக்கமாக இருந்தது.
விமானப் போக்குவரத்து தொடங்கிய காலத்தில் ஆரம்பகால விமானங்கள் சராசரியாக மணிக்கு 40 முதல் 45 மைல்கள் அதாவது மணிக்கு 64 முதல் 72 கிமீ வேகத்தில் மட்டுமே பறந்தன. இந்த விமானம் ஒரு பேருந்தை விட மெதுவாக இருந்தது. உண்மையில், தரையில் வேகமாக ஓடக்கூடிய ஒருவர் அதை எளிதாக முந்தியிருக்க முடியும்.
இந்த விமானத்தின் வேகம் குறைவாக இருந்தாலும் இந்த விமானம் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லைக் உருவாக்கியது, இது இந்தியாவின் முதல் வணிக விமான அஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது, அந்த காலகட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாக இருந்தது.
முதல் விமானத்தை ஒட்டிய விமானி யார்?
இந்த விமானத்தின் விமானி ஹென்றி பெக்வெட் ஆவார், அவர் 6,500 கடிதங்களை சுமந்து செல்லும் ஹம்பர்ட் பைபிளேனை ஓட்டினார். இது உலகின் முதல் அதிகாரப்பூர்வ விமான அஞ்சல் விமானமாகும், இது உலகளாவிய சாதனையை படைத்தது. இந்த பயணம் அலகாபாத்தில் உள்ள போலோ மைதானத்திலிருந்து தொடங்கி நைனி ஜங்ஷனில் முடிந்தது.
விமானம் எப்படி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது?
1911 ஆம் ஆண்டு உத்தரபிரதேச கண்காட்சியிலும் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவிலும் காட்சிப்படுத்த பிரிட்டிஷ் மற்றும் காலனித்துவ விமான நிறுவனம் இந்த விமானத்தை இந்தியாவிற்கு அனுப்பியது. இந்த விமானம் கடல் வழியாக 100 க்கும் மேற்பட்ட தனித்தனி பார்சல்களில் கொண்டு வரப்பட்டது. விமானத்தின் பாகங்களை ஒன்று சேர்த்து முழு விமானமாக உருவாக்க பிரிட்டிஷ் பொறியாளர்களுக்கு பல நாட்கள் ஆனது, மேலும் இந்த செயல்முறையைக் காண்பதற்கே ஏராளமான மக்கள் கூடினர். விமானம் இறுதியாக அலகாபாத்திலிருந்து புறப்பட்டபோது, அதை பார்ப்பதற்காக சுமார் ஒரு லட்சம் மக்கள் கூடினர். அந்த காலத்தில் அலகாபாத் ஒரு முக்கிய பிரிட்டிஷ் நிர்வாக மற்றும் இராணுவ மையமாக இருந்தது.
விமானத்தின் அம்சங்கள்
ஹம்பர்ட் பைபிளேன் இரண்டு இருக்கைகளை மட்டுமே கொண்டிருந்தது, ஏனெனில் இந்த விமானத்தின் நோக்கம் பயணிகளை அழைத்துச் செல்வதல்ல, அஞ்சல்களை எடுத்துச் செல்வதாக இருந்ததால், அன்று விமானி மட்டுமே விமானத்தில் பறந்தார். 50 குதிரைத்திறன் கொண்ட பிஸ்டன் எஞ்சின் மூலம் இயக்கப்படும் இந்த விமானம் 30-50 லிட்டர் விமான தர பெட்ரோலை எடுத்துச் சென்றது, இது 13 நிமிட பயணத்திற்கு போதுமானதாக இருந்தது.



Click it and Unblock the Notifications
