இந்த இந்திய ரயிலில் பயணிகள் அனைவருக்கும் 29 வருஷமா இலவச உணவு கொடுக்கப்படுது? ஏன் தெரியுமா?

இந்தியாவில் ஏழைகளின் ஏரோபிளேன் என்றால் அது ரயில்கள்தான். பேருந்து பயணம் எளிதானதாக இருந்தாலும் ரயில் பயணத்தின் செலவும், அது வழங்கும் வசதியும் பேருந்தை விட ரயிலை பயணத்திற்கு சிறந்ததாக மாற்றுகிறது. மேலும் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் ஒரே புள்ளியாக இருப்பது ரயில்கள் மட்டுமே.

நீண்ட பயணத்தின் போது உணவு அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கும். ரயில் பயணத்தின் போது சுவையான உணவு கிடைப்பது என்பது பயணத்தை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றும்., ஆனால் ரயிலில் கிடைக்கும் உணவுகள் சுவையாக இருப்பது என்பது நமது அதிர்ஷ்டத்தை பொறுத்ததுதான்.

Indian Train Which Offers Free Food to the Passengers in Tamil

வழக்கமாக, ரயில்கள் அதற்க்குள் இருக்கும் சமையலறை மூலம் பயணிகளுக்கு உணவுகளை வழங்குகின்றன அல்லது பயணிகள் ரயில் நிலையங்களில் உணவை வாங்கலாம். பணம் கொடுத்தால் மட்டுமே இந்த உணவுகளை நீங்கள் வாங்க இயலும். பணம் கொடுத்தாலும் தரமான மற்றும் சுவையான உணவு ரயில் பயணத்தின் போது கிடைப்பது சந்தேகம்தான். ஆனால் சுவையான உணவை முற்றிலும் இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு ரயில் இந்தியாவில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் சச்கந்த் எக்ஸ்பிரஸ் (12715).

சச்கந்த் எக்ஸ்பிரஸில் பயணம் செய்யும் பயணிகள் உணவைப் பற்றி கவலைப்பட அவசியமே இல்லை, பயணத்தின் போது அவர்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும். பல ஆண்டுகளாக, இந்த ரயிலில் ஒரு சிறப்பு லங்கார் (சமூக சமையலறை) சேவை வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிக நீண்ட பயணத்தைக் கொண்ட ரயில்களில் ஒன்றான இந்த ரயில் 39 நிலையங்களில் நிற்கிறது, இதில் ஆறு ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. மக்கள் தங்கள் உணவை பெறுவதற்கும், உண்பதற்கும் ரயில் நீண்ட நேரம் இந்த 6 நிலையங்களிலும் நிற்கிறது.

அமிர்தசரஸ் மற்றும் நாந்தேட் இடையே இயக்கப்படும் இந்த சச்கந்த் எக்ஸ்பிரஸ் இரண்டு முக்கியமான சீக்கிய மதத் தலங்களை இணைக்கிறது. அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் மற்றும் நாந்தேடில் உள்ள ஸ்ரீ ஹஸூர் சாஹிப் என்ற முக்கிய புனிதத் தலங்கள் என இந்த ரயில் 2,081 கி.மீ பயணிக்கிறது. பயணத்தின் போது ஆறு நிலையங்களில் பயணிகளுக்கு உணவு வழங்கப்படும். ரயிலில் ஒரு சமையலறை இருந்தாலும், லாங்கர் பயணிகளின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதால் அங்கு உணவு சமைக்கப்படுவதில்லை.

29 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த ரயிலின் ஜெனரல் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் லாங்கர் மூலம் பரிமாறப்படும் உணவைப் பெறுவதற்கு தங்கள் சொந்த பாத்திரங்களைக் கொண்டு வருகிறார்கள். தினமும் சுமார் 2,000 பயணிகளுக்கு கதி சாவல், பருப்பு, சப்ஜி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.

இந்த பாரம்பரியம் 1995 இல் தொடங்கப்பட்டது மற்றும் இன்றுவரை தொடர்கிறது, இனிமேலும் தொடரும். ஒவ்வொரு பயணியும் தங்கள் பயணம் முழுவதும் இலவச உணவை அனுபவிப்பதை இவர்களின் சேவை உறுதி செய்கிறது.

Desktop Bottom Promotion