Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
Independence Day 2024: இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தன்று என்னென்ன சம்பவங்கள் நடந்தது தெரியுமா?
Independence Day 2024: இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நாளான சுதந்திர தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நமது இந்தியா 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. சுமார் 200 ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியில் இருந்து ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகக் குடியரசான இந்தியாவில், சுதந்திர தினம் என்பது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் தேசிய பொது விடுமுறை தினமாகும். இப்போது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், இந்தியாவின் முதல் சுதந்திர தினம் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்து இருக்கிறீர்களா? அன்று இந்தியாவில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகாத்மா காந்தி முதல் சுதந்திர தினத்தை டெல்லியில் கொண்டாடவில்லை
இந்திய சுதந்திர போராட்டத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படுபவர் மகாத்மா காந்தி. ஆனால் ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா பல்வேறு சோதனைகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த சுதந்திரத்தை இந்தியாவே கொண்டாடியபோதும், வங்காளத்தில் நடந்து வந்த இந்து-முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இருந்ததால் சுதந்திர தின கொண்டாட்டங்களில் இருந்து தேசத்தந்தை மகாத்மா காந்தி விலகி இருந்தார்.
முதல் கொடி
இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வமற்ற கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று அப்போதைய கல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. இது சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று கிடைமட்ட கோடுகளைக் கொண்டிருந்தது, அதன் நடுவில் வந்தே மாதரம் எழுதப்பட்டது.
மூவர்ணக் கொடியின் தோற்றம்
இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியானது, மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த விவசாயியான சுதந்திரப் போராட்ட வீரர் பிங்கலி வெங்கையாவால் உருவாக்கப்பட்ட ஸ்வராஜ் கொடியை அடிப்படையாகக் கொண்டது.
தேசிய கீதம்
இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்தியாவிற்கென தேசிய கீதம் இல்லை. ரவீந்திரநாத் தாகூர் 1911 இல் 'ஜன கண மன' இயற்றிய போதிலும், அது அதிகாரப்பூர்வமாக ஜனவரி 24, 1950 அன்று தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆகஸ்ட் 15 ஏன் சுதந்திர தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது?
இந்தியாவின் சுதந்திரத்தை அறிவிக்க ஆகஸ்ட் 15 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தவர், நாட்டின் கடைசி வைஸ்ராய் மற்றும் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபு. ஜூன் 1948 க்குள் இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான அதிகாரங்களை பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவருக்கு வழங்கியது. இருப்பினும், சிக்கல்கள் மற்றும் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக ஆகஸ்ட் 15, 1947 க்கு அவர் அதை முன்வைத்தார். நேச நாட்டுப் படைகளிடம் சரணடைந்த ஜப்பானின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடுவதால் அவர் இந்த நாளைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 சுதந்திரம் பெற்றது
இந்திய சுதந்திர மசோதா ஆகஸ்ட் 15 ஆம் தேதியை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் சுதந்திர தினமாக வழங்கியது. மவுண்ட்பேட்டன் இரு நாடுகளிலும் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள விரும்பியதால், பாகிஸ்தானுக்கு அதிகாரம் மாற்றும் விழாவின் தேதியாக ஆகஸ்ட் 14ஐ தேர்வு செய்தார்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பிற நாடுகள்
பஹ்ரைன், வட கொரியா, தென் கொரியா, காங்கோ குடியரசு மற்றும் லிச்சென்ஸ்டைன் போன்ற நாடுகள் வெவ்வேறு ஆண்டுகளில் தங்கள் சுதந்திரத்தைப் பெற்றிருந்தாலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவுடன் இணைந்து மற்ற ஐந்து நாடுகள் தங்கள் சுதந்திரத்தை கொண்டாடுகின்றன.



Click it and Unblock the Notifications
