Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?
இன்று ராசிப்படி சிவனை வழிபட்டால் கடன் பிரச்சனை தீர்ந்து செல்வம் பெருகுமாம்.. உங்க ராசிக்கு எப்படி வழிபடணும்?
Lord Shiva As Per Zodiac Sign In Tamil: சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் சனிப்பிரதோஷத்தன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், 120 ஆண்டுகள் சிவன் கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பார்கள். மேலும் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும். ஆரோக்கியம் மேம்படும்.
அதுவும் இன்று சனிப் பிரதோஷத்துடன் சிவராத்திரியும் இணைந்து வந்துள்ளதால், இந்நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் சிவபெருமானை மனமுருக வேண்டினால், சிவபெருமானின் அருள் கிடைத்து, கடன் பிரச்சனைகள் தீர்வதோடு, செல்வம் பெருகும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

அதுவும் சிவபெருமானை ஒருவர் அவரது ராசிக்கேற்றபடி வழிபட்டால், இன்னும் இருமடங்கு பலன் கிடைக்கும். நீங்கள் உங்கள் ராசிக்கேற்ப எப்படி சிவனை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஒவ்வொரு ராசிக்காரரும் சிவபெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். எனவே மேஷ ராசிக்காரர்கள் சிவபெருமானின் அருளைப் பெற அவருக்கு தேன், சர்க்கரை மற்றும் சர்க்கரை பொங்கல் போன்ற இனிப்புக்களை படைத்து வழிபட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். எனவே ரிஷப ராசிக்காரர்கள் சிவனை வழிபடும் போது, தயிர், நெய் போன்ற பால் பொருட்களை படைத்து வழிபட்டால், சிவனை மகிழ்வித்து, அவரது அருளைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள், சிவபெருமானின் அருளைப் பெற விரும்பினால், அவருக்கு வில்வ இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் படைத்து வழிபட்டால், சிவனின் அருளால் வாழ்வில் அதிசயங்கள் நிகழும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். கடக ராசியைச் சேர்ந்தவர்கள், சிவபெருமானை வழிபடும் போது, அவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், சிவனின் அருளால் வாழ்வில் சந்திக்கும் கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானின் பரிபூர்ண அருளைப் பெற வேண்டுமானால், சிவனுன்னு தேன் மற்றும் வெல்லத்தைப் படைத்து வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சிவனின் அருளால் வாழ்க்கை செழிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். எனவே கன்னி ராசிக்காரர்கள் சிவபெருமானை வழிபடும் போது, அவருக்கு நீர், பால், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். ஆகவே துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் சிவபெருமானுக்கு பால், தயிர், தேன், நெய், கரும்புச்சாறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபட, சிவனின் அருள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். எனவே விருச்சிக ராசிக்காரர்களின் சிவபெருமானின் ஆசியைப் பெற, சிவப்பு நிற பூக்களை படைத்து வழிபட வேண்டும். இதனால் சிவனின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். எனவே இந்த ராசிக்காரர்கள் சிவனின் அருளைப் பெற விரும்பினால், நெய் மற்றும் சந்தன அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பூக்கள் மற்றும் மஞ்சள் நிற துணியை படைத்து வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். மகர ராசியைச் சேர்ந்தவர்கள் சிவனின் அருளைப் பெற வேண்டுமானால், கடுகு எண்ணெய் மற்றும் எள்ளு விதைகளை சிவனுக்கு படைத்து வழிபட வேண்டும். இதனால் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். எனவே கும்ப ராசிக்காரர்கள், சிவபெருமானுக்கு தயிர் மற்றும் பாலால் அபிஷேகம் செய்து வழிபட்டால், சிவனின் பரிபூர்ண அருளைப் பெறலாம்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். எனவே மீன ராசிக்காரர்கள் சிவபெருமானின் அருளைப் பெற சிறந்த வழி, அவருக்கு பாதாம், வில்வ இலை மற்றும் மஞ்சள் நிற பூக்களைப் படைத்து வழிபடுவது தான்.
சிவபெருமானை மகிழ்வித்து, அவரின் அருளைப் பெற்றால், சிவன் தனது பக்தர்களுக்கு நீண்ட ஆயுள், செழிப்பு மற்றும் செல்வத்தை பெற வழிவகை செய்வார். அதோடு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார் மற்றும் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் போக்கி, வளமான வாழ்க்கையை வாழ வழி செய்வார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications