Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
Republic Day 2026 Wishes: குடியரசு தினத்தன்று இப்படி வாழ்த்துக்களை சொல்லுங்க.. சந்தோஷப்படுவாங்க..
Happy Republic Day 2026 Wishes In Tamil: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது குடியரசு தினத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த ஆண்டு இந்தியா தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடவுள்ளது. இந்த குடியரசு நாளில் தான் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக மாறியது.
குறிப்பாக, இந்த ஆண்டின் குடியரசு தினம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இந்தியாவின் தேசிய பாடலான "வந்தே மாதரம்" உருவாகி சுமார் 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. குடியரசு தினம் என்பது வெறும் விடுமுறை நாள் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்திய குடிமகனும் சட்டத்திற்கு முன் சமம் மற்றும் நமக்கான உரிமைகளை வழங்கிய இந்திய அரசியலமைப்பின் மேன்மையையும் உணர்த்தும் நாள்.

இப்படிப்பட்ட நன்னாளைக் கொண்டாடும் விதமாக, முதலில் அனைவரும் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களைத் தான் தெரிவிப்போம். நீங்கள் ஒரு அற்புதமான குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால், கீழே உங்களுக்காக சில வாழ்த்துக்களை கொடுத்துள்ளோம்.
1. எத்தனை மதம், எத்தனை மொழி இருந்தாலும்,
நாம் அனைவரும் பாரதத் தாயின் பிள்ளைகள் தான்..
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
2. ஜனநாயகம் மலர்ந்த
இந்நன்னாளில் அனைவருக்கும்
குடியரசு தின வாழ்த்துக்கள்!
3. அனைவரும் இணைந்து
நாட்டின் பலமாய் இருந்து
வளர்ச்சியை நோக்கி
முன்னேற உழைப்போம்..
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
4. இந்தியன் என்பது நம் பெருமை..
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் மகிகை..
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
5. சுதந்திரம் பெற்றது
போராளிகளின் மகத்துவம்..
அதை சமத்துவத்துடன்
பேணி காப்பதே நம் தனித்தும்..
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
6. அமைதியும், அன்பும்
நம் நாட்டில் பெருகட்டும்..
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications





