Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இன்று 73வது பிறந்தநாளைக் கொண்டாடும் சூப்பர்ஸ்டார்.. அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!
Happy Birthday Rajinikanth: நம் இந்திய சினிமாவிற்கு கிடைத்த ஆகச் சிறந்த பொக்கிஷம் என்றால் அது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். எல்லாருக்கும் இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தாகத் தான் தெரியும். ஆனால் சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக ஆறு வயதாக இருக்கும் போதே அவரது நடிப்பு பயணத்தை தொடங்க ஆரம்பித்து விட்டார்.
ஆம், அவர் இந்து இதிகாசமான மகாபாரதத்தில் ஏகலைவனின் நண்பராக நடித்தார். ஒரு சின்ன வேடத்தில் நடித்த இவர் பின்னாளில் அகில உலகளவில் பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார் என்று யாருக்கும் தெரியாது. பின்னர் அவர் பெங்களூரில் பிடிஎஸில் ஒரு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தார். நடத்துனராக இருந்த போதும் அவரது நடிப்புத் தாகம் அவரை விட்டுப் போகவில்லை.

எனவே நடிப்பில் தன்னுடைய திறமையை பறையாற்ற அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனவே 1973 ல் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்பில் டிப்ளமோ படிப்பதற்காக சேர்ந்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்றைக்கு எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.
சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம்:
சூப்பர் ஸ்டாரின் திறமையை தமிழ்த் திரை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் என்றால் அது கே. பாலசந்தர் அவர்களையே சாரும். உண்மையில் ரஜினிகாந்த்தை முதன் முதலில் பார்க்கும் போது கே. பாலசந்தர் அவர்களுக்கு அந்தளவுக்கு இஷ்டமில்லை. கே. பாலச்சந்தருக்கு இந்த பையன் எங்கே நடிக்க போறான். இவனுக்கு நடிப்பு சுத்தமா வராது என்று தான் நினைத்தார். ஆனால் சூப்பர் ஸ்டார் அவர்களின் விடாமுயற்சி ஓய்ந்த பாடில்லை. தமிழில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் அவர்கள் முதன் முதலில் தமிழ் கற்றுக் கொண்டார். தன்னுடைய நடை உடை பாவனை என தன்னுடைய ஸ்டைலையே மாற்ற ஆரம்பித்தார்.
அப்பொழுது தான் 1975 இல், கே.பாலச்சந்தரின் தமிழ் கிளாசிக் அபூர்வ ராகங்களில் ரஜினிகாந்த் அறிமுகமானார். அப்படியே சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தவருக்கு எம்.பாஸ்கர் இயக்கிய பைரவி தமிழ் சினிமாவில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அவர் நடந்து வரும் ஸ்டைலாக இருக்கட்டும், சிகரெட்டை தூக்கி போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைலாக இருக்கட்டும் தியேட்டரில் பல கைத்தட்டல்களை பரிசாக பெற்றார். அவருடைய ஸ்டைலால் இன்றளவும் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடம் பிடித்து உள்ளார்.
சூப்பர் ஸ்டார் பட்டம்:
தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு அமிதாப் பச்சன் மற்றும் ஹேமா மாலினியுடன் இணைந்து அந்த கானூன் என்ற பாலிவுட் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். அவருடைய திறமைக்கு மொழி ஒரு தடையில்லை என்பதை இந்த படம் அவருக்கு நிரூபித்து காட்டியது. அவருடைய நடிப்பு, நடனம், நடை மற்றும் ஸ்டைல் இவையனைத்துமே அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுத் தந்தது. சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக தொடங்கிய பயணம் இன்று சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார்.
சூப்பர் ஸ்டாரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
வயது என்பது வெறும் எண்:
இந்த 73 வயது சினிமா பயணத்தில் அவர் ஒரு தடவை கூட சோர்ந்து போய் ஓய்ந்தது இல்லை. 73 வயதிலும் அவரது மிடுக்கும், நடையும் ஸ்டைலும் ஒரு விதத்திலும் குறைந்தது இல்லை. அவரைப் பொறுத்த வரை சாதிக்க வயது ஒரு தடையில்லை. வயது ஒரு எண் மட்டுமே. நீங்கள் எவ்வளவு வயதாக ஆனாலும் உங்கள் உடலிலும் மனதிலும் தெம்பு இருந்தால் நீங்கள் இமயமலை சிகரத்தை கூட அடையலாம். உங்கள் இலக்குகளை அடைய வயது ஒரு தடைக்கல் அல்ல என்பதை சூப்பர் ஸ்டாரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருபோதும் மனம் தளராதீர்கள்:
ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் தோல்வி குறித்து எல்லோருக்கும் தெரியும். அந்த தோல்வியை பார்த்த பலர் அவரை திட்டினார்கள், நடிப்பை விட்டு விலகி விடும் படி கூறினார்கள். ஆனால் அவர் ஒரு போதும் விமர்சனங்களை காதில் வாங்கியதில்லை. ஒரு போதும் மனம் தளராமல் மறுபடியும் மீண்டு வந்தார். சந்திரமுகி என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தார். " நான் ஒரு யானை அல்ல, நான் ஒரு குதிரை. நீங்கள் நினைப்பதை விட சீக்கிரமே எழுவேன்" என்று நம்பிக்கையுடன் கூறினார். அதையே செய்தும் காட்டினார். எனவே நம் தோல்வியிலும் நாம் மனம் தளராமல் இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையை வடிவமைத்தவர்களை ஒருபோதும் மறக்காதீர்கள்:
ரஜினிகாந்த் அவர்கள் கே. பாலசந்தர் அவர்களுக்கு அவர் மறையும் வரை விசுவாசமாக இருந்து உள்ளார். தன்னுடைய ஆசானை ஒரு போதும் அவர் மறந்ததும் இல்லை விட்டுக் கொடுத்ததும் இல்லை. சூப்பர் ஸ்டார் விசுவாசத்தின் மறுஉருவம் என்றே கூறலாம். அந்தளவுக்கு தன்னை ஏத்தி விட்டவர்களை ஒருபோதும் அவர் மறந்தது இல்லை. அவர் வாழ்க்கையை வடிவமைத்தவர்களை பற்றி இன்றளவும் அவர் மேடையில் பேசிக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் தான் இருக்கிறார்.
" நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி" இந்த நல்ல விஷயங்களை உங்கள் வாழ்க்கையிலும் ஒரு போதும் மறக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications











