Latest Updates
-
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம்
அனுமன் ஜெயந்தியான இன்று மாலை வேளையில் இத செஞ்சா.. பணப் பிரச்சனை முடிவுக்கு வருமாம்..
Hanuman Jayanti 2024: இன்று தான் அனுமன் ஜெயந்தி. ஸ்ரீராமரின் தீவிர பக்தரும், அஞ்சனையின் மகனுமான அனுமன் பிறந்த தினம் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் மிகவும் தைரியசாலி மற்றும் புத்திசாலி. அனுமனின் அருள் இருந்தால், எப்பேற்பட்ட சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொண்டு சாமர்த்தியமாக வெற்றி பெறும் ஆற்றல் கிடைக்கும் என்பார்கள்.
அனுமன் பிறந்த நாளில் பலர் விரதமிருந்து அனுமனின் ஆசியை பெற முயற்சிப்பார்கள். இன்னும் சிலர் அனுமன் ஜெயந்தி நாளில், வீட்டில் இருக்கும் பிரச்சனைகளைப் போக்கவும், அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும் ஒருசில பரிகாரங்களை செய்வார்கள். இப்போது அனுமன் ஜெயந்தி நாளில் செய்ய வேண்டிய பரிகாரங்களைக் காண்போம்.

பணப் பிரச்சனை நீங்க...
நீங்கள் பணப் பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தால், அனுமன் ஜெயந்தி நாளில் 11 ஆலமர இலைகளில் சிவப்பு சந்தனத்தைத் தடவி, ஸ்ரீராமருக்கு அர்ச்சனை செய்து, அதை மாலையாக தயாரித்து, அனுமனுக்கு அணிவிக்க வேண்டும். இப்படி செய்வதனால் பண பிரச்சனைகள் நீங்கும் என்பது ஐதீகம்
ஆரோக்கிய பிரச்சனை குறைய...
உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி ஏதேனும் ஆரோக்கியப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தால், அனுமன் ஜெயந்தி நாளில் அனுமன் மேல் பூசப்பட்ட செந்தூரத்தை நோயாளியின் நெற்றியில் தடவ வேண்டும். இப்படி தடவினால் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தவிர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படி தடவும் போது, கண் திருஷ்டியும் நீங்கும்.
தொழிலில் முன்னேற்றத்தைக் காண...
நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும், அதற்கான பலன் கிடைக்காமல் கஷ்டப்படுகிறீர்களா? உங்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண வேண்டுமானால், அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு முன் ஒரு தீபம் ஏற்றி 'ஓம் ஹனுமதே நமோ நம' என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதுவும் வீட்டில் ருத்ராட்ச மாலை இருந்தால், அதைக் கொண்டு சொல்லலாம். இப்படி செய்வதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
குழந்தை தொடர்பான பிரச்சனைகள் நீங்க..
குழந்தை தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள், அனுமன் ஜெயந்தி நாளில் வீட்டில் சுந்தரகாண்டம் சொல்லி, ஏழைகளுக்கு மோத்திச்சூர் லட்டுவை பிரசாதமாக வழங்குவதோடு, அன்னதானம் செய்தால், பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
எதிரிகளின் தொல்லை நீங்க..
உங்கள் வேலைகளில் எதிரிகள் நிறைய குறுக்கிட்டு வேலைகளை முடிக்க முடியாமல் தடுக்கிறார்களா? அப்படியானால் அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை படைத்து, பச்சை கற்பூரத்துடன், கிராம்பை வைத்து அனுமனுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படி செய்யும் போது அனைத்துவிதமான இடையூறுகளும் நீங்கும்.
எதிர்மறை ஆற்றலை தடுக்க...
உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டின் முன், ஒரு சிவப்பு நிற துணியைக் கட்டிவிடுங்கள். இப்படி செய்வதன் மூலம், அனுமன் உங்கள் வீட்டிற்கு ஒரு நல்ல காவல் தெய்வதாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications